உத்தமம் வருடாந்த தமிழ் இணைய மாநாடு 2017 தொடர்பில் உத்தமம் செயலகத்தின் அனுமதியுடன் முடிவுகளை எடுக்கவும் செயற்பாடுகளை முன்னெடுகவும் ஒருங்கிணைக்கவும் கனடாவில் மாநாட்டுநிகழ்ச்சிக்குழுத்தலைவர் திரு செல்வகுமார் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
இதுவரை உள்ள செயற்குழு முடிவுகளின் படி மாநாட்டு திகதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை வருகின்ற ஆகஸ்ட் 26 -27 திகதிகளில் கனடாவின் ரொரண்டோ மாநிலத்தில் நடைபெறும் . முனைவர் செல்வகுமார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
இந்நிலையில் செயற்குழுவின் அல்லது செயல் இயக்குனரின் அனுமதியின்றி எந்தவொரு உத்தமம் உறுப்பினரும் ஊடகவியலாளர் மாநாடுகள் நடாத்துவதோ மாநாடு தொடர்பில் உத்தியோக பூர்வ கருத்துக்களை வெளியிடுவதோ அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு யாரும் தெரிவிக்கும் பட்சத்தில் அது உத்தியோகபூர்வமானதாக அமையாது.
உத்தமத்தின் நிர்வாகம் சம்பந்தமாகவோ உறுப்புரிமை சம்பந்தமாகவோ செயல்இயக்குனராகிய என்னுடன் நேரடியாக மின்னஞ்சல் வழியாகவோ தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு தீர்வுகளை பெறமுடியும்
உத்தமம் புதிய தலைவர் திரு செல்வமுரளியுடனும் தொடர்பு கொள்ளலாம்.
உத்தமம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக கட்டுப்பாட்டில் உள்ள இணையத்தளங்கள் தற்போதைய நிலையில் பின்வருவன மட்டுமே
2017 தமிழ் இணைய மாநாட்டுக்காக பிரத்தியேகமாக கனடாவில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்(
www.infitt.ca) இன்னும் உத்தமம் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தினால் அதனுடனான தொடர்புகளை உறுப்பினர்கள் தற்போதைக்கு பேணவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.எம்மால் அறிவிக்கப்படும்வரை
அந்த தளம் ஊடாக எந்தவொரு பதிவுகளையோ பணப்பரிமாற்றத்தினையோ செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
மாநாடு தொடர்பில் பயண ஏற்பாடுகள் பதிவுகள் கட்டுரை சமர்ப்பிப்பு செயற்பாடுகளை செய்வதற்கு
cpc2017@infitt.orgமற்றும்
ed@infitt.org மின்னஞ்சல்களுடன் தொடர்பு கொள்ளவும்
நன்றி
தவரூபன்
செயல் இயக்குனர்
11.07.2017