|
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 24 சூலை 2000 முதல் இயங்கி வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உத்தமம் தன் ஆட்சிக்குழுவையும், நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றது. 2008-2009க்கான உத்தமத்தின் ஆட்சிக்குழு மற்றும் நிர்வாகக் குழு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. இக்குழுக்கள் 2008-2009க்கான உத்தமத்தின் பணிகளை வழி நடத்தும். உத்தமம் 2008-2009 க்கான ஆட்சிக் குழு : தலைவர் : முனைவர் கு. கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து. துணைத்தலைவர்: திரு தி.ந.ச. வெங்கடரங்கன், சென்னை. செயலாண்மை இயக்குநர் : திரு வா.மு.சே. கவிஅரசன், அமெரிக்கா.
உத்தமம் 2008-2009 க்கான நிர்வாகக் குழு : இந்தியா திரு மாலன், சென்னை. முனைவர் இலக்குவனார் மறைமலை, சென்னை. திரு இராம.கிருட்டிணன் (இராம்.கி), சென்னை. திரு அ.இளங்கோவன், சென்னை. திரு தி.ந.ச. வெங்கடரங்கன், சென்னை. முனைவர் பத்ரி சேஷாத்ரி, சென்னை. திரு சதீஷ் குமார் நி., பெங்களூரு.
சிங்கப்பூர் திரு மணியம் சிங்கை.
வட அமெரிக்கா முனைவர் வாசு. அரங்கநாதன், நியூ ஜெர்சி. திரு வா.மு.சே.கவிஅரசன், ஒகயோ.
ஐரோப்பா முனைவர் கு. கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து.
இலங்கை திரு த.தவரூபன், யாழ்ப்பாணம்.
மலேசியா திரு இரவீந்தரன் பால், கோலாலம்பூர்.
ஆஸ்திரேலேசியா திரு ஜெயதீபன், சிட்னி, ஆஸ்திரேலியா. பன்னாட்டு உறுப்பினர் திரு கலைமணி, சிங்கை திரு முனைவர் நா. கண்ணன், தென் கொரியா உத்தமம் பற்றிய செய்திகளும் தகவல்களும் இவ்வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவ்வப்போது புதுச் செய்திகளும் தகவல்களும் சேர்க்கப்படும். மன்ற உறுப்பினர்களும் ஏனையோரும் இத்தளத்தினால் பயனடைவார்கள் என்று நம்புகிறோம். இத்தளத்தை மேலும் மேம்படுத்த வழிமுறைகள் இருப்பின், அவற்றைப் பெரிதும் வரவேற்கிறோம். செயலாண்மை இயக்குநர் உத்தமம் |