21வது தமிழ் இணைய மாநாடு 2022
15 December 2022
Tamil University,India
INFITT
உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த ஆண்டிற்கான 21வது தமிழ் இணைய மாநாட்டினை தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூரில் நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் மாநாட்டினை (21வது தமிழ் இணைய மாநாடு 2022) தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்லுாரியுடனும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்துடனும் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு டிசம்பர் 15-17, 2022 தேதிகளில் நடைபெறவுள்ளது
மாநாட்டுகான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கட்டுரைகளும் கோரப்பட்டுள்ளன.
ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயங்கள்
இயற்கை மொழி வளங்கள், இயந்திர மொழிபெயர்ப்புகள், பேச்சுக்கு உரை, குரல் அறிதல், பேச்சு தொகுப்பு, தேடல் இயந்திரம், உரை பகுப்பாய்வு ,திறந்த மூல தமிழ் மென்பொருள், தமிழ் உள்ளூர்மயமாக்கல், அறிவுத்திறம்வாய்ந்த சொற்கள் நடைமுறை, மெய்நிகர் வகுப்பறை, கணினி உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு, டிஜிட்டல் நூலகங்கள், உணர்வு மற்றும் உணர்ச்சி பகுப்பாய்வு, சமூக ஊடகங்களில் கருத்து சுரங்க தேடல், அகராதிகள், இயந்திரம் படிக்கக்கூடிய அகராதிகள்
விளக்கங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: cpc2022@infitt.org
கட்டுரைச்சுருக்கம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : 7 ஒக்டோபர் 2022
கட்டுரைச்சுருக்கம் ஏற்பு அறிவிப்பு: 17 ஒக்டோபர் 2022
முழு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிப்பு: 15 நவம்பர் 2022
கட்டுரை ஏற்பு அறிவிப்பு: 22 நவம்பர் 2022
இறுதி கட்டுரை சமர்ப்பிப்பு : 30 நவம்பர் 2022
ஆராய்ச்சித்தாள் வடிவம்
ஒற்றை நெடுவரிசை
எழுத்துரு: முறை புதிய ரோமன்
எழுத்துரு அளவு : 12 புள்ளி
இடைவெளி : 1.15
பதிவு மற்றும் சமர்ப்பிப்புக்கு வலைத்தளத்தைப் பார்வையிடவும் : www.tamilinternetconference.org