தமிழ் இணைய மாநாடு 2019 இனிதே நிறைவுற்றது
இந்த ஆண்டு தமிழ் இணைய மாநாடு மிக சிறப்பாக அண்ணா பல்கலைக்கழக அரங்கில் கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது.. மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என பொதுமக்களுக்கான நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. அமேசான், மைக்ரோசாப்ட் , மொழியியல் படைப்புகள் என பல துறை சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர், இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்புர் .சுவிஸ்லாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் / தமிழ் இணையக்கல்விக்கழகம் / (மற்றும் பல அரசு நிறுவனங்களின் உதவியுடன்)
இணைந்து நடத்தப்பட்ட மாநாட்டினை தமிழக அரசு சார்ப்பில் மொழிகள் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு பாண்டியராஜன் ,உயர்கல்வி அமைச்சர் திரு கேபி அன்பழகன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அமேசான் /மைக்ரோசாப்ட் / CCIL-மைசூரு / TAU போன்றவர்களின் சிறப்பு படைப்புகளுடன் கூட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 21 மாலை அண்ணா பல்கலைக்கழக அடையாறு படகுழாம் வளாகம் ALUMNI CLUB இரவு விருந்தும் சிறப்பாக நடைபெற்றது
மாநாட்டின் முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு உத்தமத்தின் சார்பில் தமிழ் கணிமை முன்னேர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல், தம்பதிகளான து. நித்யா & த.சீனிவாசன் ஆகியோருக்கும் உத்தமத்தின் சார்பில் தமிழ் இணைய இணையர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ் சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட பல தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.
அதேபோல், தம்பதிகளான து. நித்யா & த.சீனிவாசன் ஆகியோருக்கும் உத்தமத்தின் சார்பில் தமிழ் இணைய இணையர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ் சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட பல தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.
ஏனைய விபரங்களுக்கு