+65 97805920 ed@infitt.org

16வது உலகத்தமிழணைய மாநாடு – இலச்சினைப்போட்டிகள்

அன்புடையீர்,

 

வணக்கம்.

16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு

தொராண்டோ மாநகரில் ஆகத்து மாதம் 25-27, 2017 ஆகிய நாட்களில்

நடக்கவிருக்கின்றது.  இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும்.

 

மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள்

ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும்

தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும்.

 

தமிழ்க்கணிமை ஆய்வுலகில்  இயற்கைமொழியியல் ஆய்வுகள்

பெருகிவருகின்றன .  ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல்,
மொழியியல் நோக்கில் மொழித்தொகுப்பியல்  (Corpus Linguistics) ஆய்வு
போன்ற பற்பல  துறைகளில்  நல்வளர்ச்சியைக்  காணமுடிகின்றது.  இவற்றில் இன்னும் பற்பல முன்னேற்றங்கள் அடைந்து கொண்டேயிருக்கவேண்டிய இக்காலத்திலேயே அடுத்தக்கட்ட  நுட்பியல்  வளர்ச்சியாக மலர்ந்துகொண்டிருக்கும்  ஆழக்கற்றல் (Deep Learning) என்னும் துறையிலும் தரவறிவியல் (Data Science) துறையிலும் கால்பதிக்க வேண்டியுள்ளது. செயற்கை அறிவுத்திறன் என்னும் துறையின் உட்துறையான இயந்திரக்கற்றலின் உட்துறையில் பெருவளர்ச்சியாக ஆழக்கற்றல் எழுந்துள்ளது.

 

மகிழுந்துகளும் சுமையுந்துகளும் சாலைகளில் ஓட்டுநர் இல்லாமலே ஓடுவதற்கும், சதுரங்க விளையாட்டிலும்கோ’ (Go)என்னும்விளையாட்டிலும்
உலகத்திலேயேதலைவல்லவரையே தோற்கடிக்கும் வல்லமையும் கொண்டுவளர்ந்துவருகின்றது.

மாந்தனைப்போலவே இடம்சார்ந்து சூழல்சார்ந்து கற்று முடிவுகளுக்கு வரும் ஆழக்கற்றல் திறன்கள் வளர்ந்துவருகின்றன. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழரைப் போலவே கேட்டு  விடையளிக்கவல்ல அல்லது செயலாற்றக்கூடிய கணியியந்திர நுட்பங்கள் வளரவிருக்கின்றன. ஆகவே இதைக் கருமுழக்கங்களுள் ஒன்றாகஇவ்வாண்டு கொண்டிருக்கின்றோம்.

பெருந்தரவறிவியலாலும் ஆழக்கற்றல் திறனாலும் வியப்பூட்டும் புதுத்தீர்வுகளும் அணுகுமுறைகளும்  கிட்டும்  என்பது தெளிவாகின்றது.ஒரு வியப்பூட்டும் அறிவியல் கிடுகிடுவென எழுகின்றது.

இவற்றைக்கருத்தில்கொண்டு

  1. மாநாட்டுக்கென ஓர் இலச்சினை
  2. மாநாட்டுப் பதாகையில் முழக்கம்

 

ஆகியவற்றுக்கான அடவு/வடிவமைப்புகளை (Designs) ஏப்பிரல் 30 ஆம் நாளைக்குள் படைத்தளிக்க வேண்டுகின்றோம்.

இப்போட்டியில் இவை இரண்டுக்கும் தனித்தனியான பரிசுகள்உண்டு. மாநாட்டில் அறிவித்து பரிசுகள் வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை உத்தமம் நிறுவனம் அளிக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது!

 

உங்களது படைப்புகளை ed@infitt.org  மற்றும்  cpc2017@infitt.org ஆகிய இரண்டுமின்னஞ்சல்களுக்கு மட்டுமே அனுப்பிவைக்கவும். எங்களது முடிவுகளை வெளியிடும்வரை உங்களது படைப்புகளை வேறு எந்த மின்னஞ்சலுக்கோ குழுவுக்கோ அனுப்பக்கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் உத்தமம் நிறுவனத்தின் முழுக்காப்புரிமைக்கு உட்பட்டதாகும் ஒப்புதலை படைப்பாளர்கள் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

300 டிபிஐ யில்  (300 DPI) இருக்கவேண்டும்

RGB, ,CMYK அடிப்படையில் இலச்சினைகள் தரப்படவேண்டும்.

Comments are closed.