இறுதிசெய்யப்பட்ட நிகழ்ச்சிநிரலின் சமீபத்திய வடிவம் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ் இணைய மாநாடு 2009
"கணிவழி காண்போம் தமிழ்"
ஒக்டோபர் 23-25, 2009
இந்தியயியல் மற்றும்
தமிழ் ஆய்வு மையம்
கோலென் பல்கலைக்கழகம் ஜெர்மனி

செய்தித்துளிகள்
  • மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முடிவுக்கு வந்துக்கொண்டிருக்கின்றன. இறுதிசெய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலின் சமீபத்தைய வடிவம் வெயியிடப்பட்டிருக்கிறது(17-10-2009) இங்கே

  • தமிழ் இணைய மாநாடு 2009 தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று கடந்த 29.06.2009 காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் கழக மண்டபத்தில் உத்தமம் அமைப்பின் ஆரம்பகால தலைவரும் ஆலோசகருமான பேராசிரியர் திரு எம் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது

  • இணையமாநாட்டிற்கான செயற்குழுவின் தலைவராக அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தினை சேர்ந்த டாக்டர் வாசு ரங்கநாதன் தொழிற்படுகிறார்.

  • தமிழ் இணைய மாநாடு 2009 ஆனது ஜெர்மனியின்  கோலென் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 23 தொடக்கம் 25 வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஒக்டோபர் 23 மாலை ஆரம்பிக்கும் மாநாட்டில் தமிழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தமிழ் கணினியியல் சம்பந்தமான தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்

  • பதிவு செய்த உத்தமத்தின் உறுப்பினர்கள் கட்டணமெதுவுமின்றி பங்குபெற்ற முடியும். உத்தமத்தின் உறுப்பினரல்லாதவர்கள் மாநாட்டு அனுமதிக்கட்டணமாக 50 யூரோ செலுத்தவேண்டும் . ஆகஸ்ட் 30 இற்கு முன் பதிவுசெய்யும் உத்தமம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்த நிகழ்வுகளாக தமிழ் மென்பொருள் கண்காட்சி மற்றும் தொழிநுட்ப கருத்தரங்கம் போன்றவற்றினை நடாத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள்படுகின்றன. அதுபற்றிய மேலதிக விபரங்கள் அவ்வப்போது இத்தளத்தின் வாயிலாக அறியத்தரப்படும்

  • தமிழ் இணைய மாநாடு 2009 இல் தமது கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 திகதி அல்லது அதற்கு முன்பாக தமது கட்டுரையின் சுருக்கத்தினை 1-2 பக்கங்களில் மாநாட்டு நிகழ்ச்சி செயற்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தெரிவுசெய்யப்படும் கட்டுரையாளர்கள் தமது கட்டுரைகளின் முழுமையான வடிவத்தினை செப்டெம்பர் 30 இற்கு முன்பாக அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரைச்சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அனுப்பப்படவேண்டிய மின்னஞ்சல் முகவரி -  ti2009@infitt.org ஆகும்

  • செயற்குழுவால் தெரிவுசெய்யப்படும் 15 தொடக்கம் 20 கட்டுரைகள் மாநாட்டு தொழில்நுட்ப அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிப்பதற்கு அனுமதிக்கப்படும் .முன்னைய மாநாடுகளைப்போலவே ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கட்டுரைகள் யாவும் மாநாட்டு புத்தகத்திலும் மின் வடிவத்திலும் (CD/DVD) உள்ளடக்கப்பட்டு வெளியிடப்படும். மேலதிக தகவல்களுக்கு>>>

தமிழ் இணைய மாநாடு 2009


தமிழ் இணைய மாநாடு 2009 எதிர்வரும் ஒக்டோபர்த் திங்கள் 23-25 தேதிகளில் ஜெர்மனியில் கோலென் (Koeln) நகரில் நடைபெறும் என்று அறிவிப்பதில் உத்தமத்தின் செயற்குழு மகிழ்ச்சியடைகிறது.

த.இ.மா. 2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற த.இ. மாநாட்டின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது தமிழ் கணிமை, தமிழ் இணையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களையும், எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும் தொழில்நுட்பவியல் மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்குச் செறிவூட்டும் வகையில் 100 நபர்களை மட்டுமே கலந்து கொள்ள அழைக்கவுள்ளோம்.

தமிழுக்கு மட்டுமான தொழில்நுட்ப மாநாடான தமிழ் இணைய மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் கணினி வல்லுநர்களை வரவேற்கிறோம். இத்தகைய தமிழிணைய மாநாடுகள் இதற்கு முன்னதாக சென்னை (1999,2003), சிங்கப்பூர் (200,2004), கோலாலம்பூர் (2001), சான் பிரான்சிஸ்கோ (2002) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.


த.இ.மா. 2009, மாநாடு நடக்கவிருக்கும் கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியவில் மற்றும் தமிழியல் மையத்தின் கூடிய ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. பேராசிரியர்.உள்ரிகே நிக்கிலசு அவர்களின் தலைமையில் இயங்கும் இம்மையம் ஐரோப்பாவில் தமிழ் ஆய்வுக்குமான தலைசிறந்த மையங்களில் ஒன்றாகும். இவ்வாய்வு நிறுவனத்திலுள்ள தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர்.தாமசு மால்ட்டன், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்களை மின்வடிவேற்ற பெரும் முயற்சி செய்தவரும் தமிழார்வலர் குழுக்களில் பெரிதும் அறியப்பட்டவருமாவார். தமிழகத்துக்கு வெளியே 50,000 தமிழ் நூல்களுக்கு மேல் வைத்திருக்கும் ஒரே கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவ்வைரோப்பிய நிறுவனத்தில் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

முனைவர் கல்யாணசுந்தரம்
-தலைவர் உத்தமம்-