பரம்பரைத்திருநாமம் | பரிபூரணமானஸ்தலம் | மாதம் - பட்சம் - திதி |
மெய்கண்டதேவர் | திருவெண்ணெய் நலூர் | ஐப்பசி -- சுக்கி --பிரதமை |
அருணந்தி சிவாசாரியார் | துறையூர் | புரட்டாசி -- திரு --திரயோதசி |
மறைஞானசம்பந்தர் | திருக்களாச்சேரி | ஆவணி -- சுக்கி --துதியை |
உமாபதி சிவாசாரியார் | கொற்றவன்குடி | சித்திரை-- சுக்கி -- துவாதசி |
அருணமச்சிவாயர் | கொற்றவன்குடி | மார்கழி -- சுக்கி --பௌரணிமி |
கங்கைமெய்கண்டார் | சீர்காழி | கார்த்தி -- கிரு --பஞ்சமி |
பழுதைகட்டிச்சிற்றம்பசுவர் | மதுரை | பங்குனி -- கிரு --நவமி |
பழுதைகட்டிஞானப்ரகாசர் | காளத்தி | ஐப்பசி -- கிரு -- சதுர்த்தி |
ஞானப்ரகாசர் | திருவாரூர் | ஐப்பசி -- கிரு -- சஷ்டி |
ஞானசம்பந்த தேசிகர் | தருமை | வைகாசி -- கிரு --சத்தமி |
ஆனந்த பரவச தேசிகர் | தருமை | மார்கழி -- கிரு --திருதிகை |
சச்சிதானந்த தேசிகர் | தருமை | ஆனி -- சுக்கி -- சத்தமி |
மாசிலாமணி தேசிகர் | தருமை | புரட்டாசி-- சுக்கி --ஏகாதசி |
ஞானசம்பந்த தேசிகர் | தருமை | ஆவணி -- சுக்கி --துதியை |
திருஞானசம்பந்த தேசிகர் | திருக்குற்றாலம் | சித்திரை -- கிரு --பிரதமை |
திருவம்பலதேசிகர் | தருமை | ஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி |
அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் | கோட்டூர் | கார்த்தி -- சுக்கி ஏகாதசி |
திருநாவுக்கரசுதேசிகர் | தருமை | ஐப்பசி -- சுக்கி பௌர்ணமி |
சச்சிதானந்த தேசிகர் | தருமை | மார்கழி -- சுக்கி -- தசமி |
ஞானசம்பந்த தேசிகர் | தருமை | ஆவணி -- கிரு -- ஏகாதசி |
கந்தப்பதேசிகர் | தருமை | ஆவணி -- கிரு -- நவமி |
மாசிலாமணி தேசிகர் | தருமை | தை -- கிரு -- சஷ்டி |
சச்சிதானந்த தேசிகர் | சிவசைலம் | கார்த்தி -- சுக்கி --துவாதசி |
மாணிக்கவாசகதேசிகர் | திருபுவனம் | மாசி -- கிரு --சதுர்த்தி |
பொன்னமாலரவின்பள்ளியான்வனசப்போதில்வாழ்நான்முகனென் று மன்னமர்கற்பதருநிழலிருப்பான்வணங்கிநின்றனுதினமேத்த ந் தென்னமாமரர்நின்றுவாழ்த்தெடுப்பத்தெய்வஞானப்பரஞ்சுடராய் த் துன்னமர்ந்தனையாலருள்புரிதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 1 |
இந்நிலம்பரவவாழ்மணவூரிலிணையிலாப்புகழ்த்தனஞ்சயனா ர் தன்னகமகிழக்கடம்படித்தோற்றித்தழைத்தநீஞானசம்பந் த மன்னியதேசிகன்காத்துவந்துமருவினையாதுகாரண மோ சொன்னியமாதிமுநிவர்சூழ்தருமைசொக்கநாதப்பரசிவமே. | 2 |
சென்றிடுதிருமுகத்தொடுபாண்பத்திரனையுமஞ்சைமாக்களத் தி ளின்றிடச்செய்ததன்மைமாறிடற்காநீடருண்ஞானசம்பந் த மென்றிடுநந்தேசிகனோடுநீயுமெழிலமாகமலையம்பதியி ற் றுன்றிநின்றுவந்துவந்தனைதருமைச்சொக்கநாதப்பரமசிவமே | 3 |
சிவைபிரிந்தரசன்மகளெனச்சென்றதிறந்தனைமனத்தினினினைத் தோ நவைபிரியாதவுலகவர்காணஞானத்தைவெளிப்படுத்திட வோ விவைபிரியாதநீயிவண்விரும்பியெழுந்தருளினைமிகுமதுர ச் சுவைபிரியாதகனிபொழிற்றருமைச்சொக்கநாதப்பரமசிவமே | 4 |
இளையவன்மயில்வாகனனமர்கடம்பென்றெண்ணியீசானமாந்திசையி ல் வளையமாலுரவனந்தனினாப்பண்வரமுநிவரர்புடைசூழ க் கனையவான்மாக்கட்கருளுருக்காட்டக்கருதியேவந்தனைபோலு ஞ் சுளையமர்கனியார்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 5 |
சங்கமமடையாநதிக்கரையதனிற்றங்குதறகாதெனக்குறிதிது த் திங்களார்சோலைநாற்றிசைபரவுந்திருமயிலைப்பதியின்கீழ் ப் பங்கனுக்கருளும்பொன்னிநன்னதியினபக்கல்வீற்றிருந்தனைபோலு துங்கமாராதிசைவர்சூழதருமைச்சொக்கநாதபரசிவமே | 6 |
தெருவினிற்கூடைமண்ணெடுத்துழன்றசெயலுடைநின்னுருவத்தை ப் பெருமனமுடையராகண்டிடாதிருக்கப்பேணியோதிசையறிந்திடிலு க் கருமைஞ்சோலைநாபபணிலேவநதமாநதனையென்றுசூழபோகா த் துருமமவிண்ணுலகின்மருவிடுந்தருமைச்சொக்கநாதபரசிவமே | 7 |
ஆக்குபாண்டியனுங்கைதவனெனும்பேரடைந்தவனாடெனத்தெரிந் தோ வாக்குரைமுன்னங்கொடுத்ததுமுண்டோவளவாநாடியற்றுபுண்ணிய மோ நீக்குமதில்லாதிநாகாவதியநினைந்தனையெனதுபுண்ணியமே தூக்குரைவாணாபோற்றிடுந்தருமைச்சொக்கநாத பரசிவமே | 8 |
அருமையிற்சுயம்புகாணநதைவீசமாரிடமானுடமென்னு ம் பெருமையினைநதாமிலிங்கமென்றுலகிற்பேசுவரவையொடுகலக த கருமையிறபொலியுங்கண்டாதநததனாறகவருனைமுதலென் றே துருமையிறபொங்கசூழநதிநெடுதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 9 |
உலகுளோர்தவத்தின்றகையமிவவாடுறனறுவந்தறிந்திட நினைத்தோ நீ யலகிலாசசோலைநடுவினில்விரும்பியமாந்தறிஞானசம்பந்த ம விலகுறாத்தேசிகனைத்தவம்புரியவிடுத்தனைசொல்லுநின்னரு ளே சுலவிடவிளங்கும்ப்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 10 |
11 | |
படியிலாச்சிவராத்திரியபிடேகம்பண்ணுதற்கிலையெனத்தென் னை யடியினினின்றமுநிவரன்களிப்பிலாழ்ந்திடவளைந்தவன்கரத்தி ன் முடியினைக்கொடுக்கப்பறித்துனக்காட்டிமொழிந்திடச்செய்தனைநிதமு ந் துடியெறியலையார்பொன்னிசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 12 |
மூடுதலில்லாச்சுவரின்மேல்வைத்தமுதிர்தலையுற்றிடர்விளநீ ர் தேடுறுகன்னல்சந்தனக்கட்டைதிரவியமிவையெடுத்தற் கு நாடுறச்சிருவனிலையெனவதுவுநடந்திடச்செய்தனைசூழ்ந் து தோடுலாம்வாவிமாடமர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 13 |
நின்னதுபூசைக்கெனமனத்தெண்ணிநிறுத்தியகதலியின்றாற் றை மன்னமர்வாளாற்குறைத்தவன்காததைவளைந்துபாம்பிருந்தவனோடு ம் பன்னுமவ்வண்ணஞ்சந்நிதிவரவேபாறிடச்செய்தனைநாளு ஞ் சொன்னுவல்வன்னிசேர்பொழிற்றருமைச்சொக்கநாதப்பரசிவமே | 14 |
ஆட்டுதல்குறித்துவந்தவானெய்யையாசையிலெடுத்ததுநிரம் ப வீட்டுமெண்ணெய்யைக்கலந்தவன்பேசாதிருந்ததுகண்டவன்மனை வி தாட்டுணைவிரும்பிச்சந்நிதிகொணர்ந்துசாறறவும்பேசிடச்செய்தா ய் தோட்டுனைதட்டுமல்லர்சூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 15 |
பாலிடநீரைக்கலந்தனித்தவடன்பாலனைப்பரும்பிணிசேர்ந் து கோலிடவதனைப்பின்னருதெரிந்துன்குரைகழறியானத்தில்வைத் து மேலிடமூன்றுபசுக்களைக்கொடுத்துவேண்டிடத்தீர்த்தனைபொழிலி ற் சூலிடங்கொண்டமுகிலுலாந்தருமைச்சொக்கநாதப்பரசிவ மே | 16 |
முழவெனத்தடித்துநீறுதோய்காயைமுன்னுநின்றனக்கெனமனையி ன் கிழவியால்விடுக்கவஃதறியாதகிழவனாலெடுத்தரிநதிடலு ம் பழமறைசொலுமோரிலிங்கமுள்ளிருக்கப்பார்த்துடனஞ்சிநின்முன்ன ர் துழலிடச்செய்யவருளினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 17 |
மரந்தனிற்காயவைத்தசெங்காவிமருவியமடிதனையெடுத்து ப் புரந்தனிலணிந்துவந்தவன்றேகம்புழுநெளிநதிடவுடனடுங்கி ச் சிரந்தனிலேற்றுன்சந்நிதிவரவுஞ்செய்யமேனியனெத்திகழ த் துரந்தரனாக்கிப்பார்த்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 18 |
புலியுமோராவுநட்பொடுவாலிபுகுந்தநீருண்டுடனடந் து நலிவிலாவகையிலோர்பொழிற்சேக்கைநயந்துவாழ்ந்திருந்தனகண் ட வலியவரன்றுமுதலுபசாரவகையினினிறகவேசெய்தா ய் சொலிவருவாணர்கலியசறருமைச்சொக்கநாதப்பரசிவமே | 19 |
வீற்றிருந்தருளுக்கோயிலின்வாயின்மேதியின்சாணநீர்கைக்கொ ண் டூற்றியபின்னரலகிடநினைத்தவொருததியின்கரமுடன்மடங் கி நாற்றிசையறியநின்றிடச்செய்தாய்நாற்கவிப்புலவர்கள்சூழு ர் தூற்றிலிமையாப்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 20 |
21 | |
நின்னிலைகாணவேண்டுமென்றகத்தினினைத்துமாமிசந்தனையாணந் தன்னிலையாக்கியனத்தொடுங்கலந்துகாற்றுநிவேதனமாக நன்னிலைவைத்துநின்றவன்காணநல்லுயிர்பெற்றெழச்செய்தாய் சொன்னிலையுள்ளாளு*ரைப்பருந்தமைச்சொக்கநாதப்பரசிவமே | 22 |
சேழ்கிளர்கடம்பவனத்திற்சொற்கொள்ளாக்கீரனைமடுவில்வீழ்த்தியபோல் வாழ்ந்திடவடியாரியறறிடுதளியைமறைத்தவனற்றைநாளந்தி யாழ்ந்தநீர்க்கூவம்வீழ்ந்தழிந்திடவேயாக்கினைநின்னருளறிந்தார் சூழ்ந்தொளிர்மதிலின்முகில்பொழிதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 23 |
வலவனிராசேந்திரன்மனங்களிக்கமதுரையிலுரைபகர்ந்ததுபோற் பலரிருந்தாலென்சொல்லுமானந்தபரவசற்றேசிகனாக்கல் கலமெனஞானசம்பந்ததேசிகருக்குநல்லுரைபகர்ந்தனையே சோலமிளிர்மறையோர்வாழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 24 |
ஆசிரியன்றன்மனைவியைப்புணரவாசைகொண்டவள்கரம்பிடித்த நீசன்கைவெட்டிமதுரையின்முடித்தநீதியனீயெனற்கேற்ப சூசுகமுலையைப்புகழ்ந்தவன்கரமுந்துணிபடக்கிடந்தகாரணத்தாற் றூசிலாவருளைக்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 25 |
செல்லிடுமனந்தகுணன்றனக்காகச்சிரமதியமுதத்தாலுயிர்கள் வில்லிடமதுரைச்சுத்திசெய்ததுபோல்லிரைமலாவாவிகூவங்கள் கல்லிடந்தோறுமுறுமுவர்நீக்கிக்காட்டினையென்றுபின்னோருஞ் சொல்லிடவருளைச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 26 |
பாண்டியன்களிக்கமறைந்துளமதுரைப்பதிதனைக்கங்கணப்பணியாற் காண்டரவளைந்துகாட்டியதுபோற்கருதருமிகநகரதனி லீண்டியநாலுமூலையில்வில்வமிருந்திடுமெல்லையிற்றளியுந் தூண்டலிலமைக்கவோதினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 27 |
வந்தவரிருக்கப்பலகையொன்றினைநீவழங்கினைமதுரைமாநகரின் முந்தவென்றுரைப்பராலதுபோலமூன்றுபேர்நின்றிடமுடியா துந்தியதளியிற்சந்தைவந்திருக்கவுதவினைவாரிவெள்ளத்திற் சுந்தரமுநிவருவந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 28 |
கூர்மலிதருமியென்றவன்மகிழக்கொங்குதேர்வாழ்க்கையையெழு தி யார்முழுதறியமதுரையிற்கொடுத்தாயானந்தபரவசருக்கு ஞ் சீர்வளர்சச்சிதானந்தற்பின்னாந்தேசிகனாக்கெனக்ககன ஞ் சோர்விலாவுரையுந்தந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 29 |
தெற்றியிற்காயத்திரிவிசேடத்தைச்செப்பியும்பின்னினைத்தூற் ற லுற்றவனாகவும்புரளுதலில்லாதுற்றிடச்செய்தனைபுரத்தை ச் செற்றவன்றானுமிலிங்கமென்றுரைத்தார்சீரறச்சாலைகளெங்கு ந் துற்றசீரடியார்நிறைந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 30 |
31 | |
உன்கலந்தெருவிற்கிடந்ததைத்திரட்டியொருகரத்தெடுத்துவந்துன்றன் திண்டளியதனிற்கிடத்தியமடந்தைதிகைத்ததிற்சிதறிடுமனத்தை க் கண்டெடுத்துண்ணச்செய்தனையதனாற்கருதிநீசிவமெனநினைத்து த் துண்ணெனநின்றுதுதித்தனர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 32 |
கூடலினின்னோடெதிர்த்தகீரனையுங்குணமுறப்பொதிகையில்வாழு ம் விடருண்முநிவற்கொண்டுபதேசம்விரித்தபோன்மாசிலாமணியா க் கூடுதேசிகனைக்கொண்டிவண்குமரகுருபரற்கருளினைநிலவு ந் தோடலர்ந்தொளிரும்பண்ணைசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 33 |
இரவினிற்குமரகுருபரன்யோகிலிருந்திடுபோதடைந்தவனை த் தரமொடுமழைத்துச்சென்றுகேதாரத்தலத்தினில்விடுத்தனையதனா ன் மரமுதனீக்கிக்குறிதனைக்கண்டுமகிழ்ந்துமோர்தளிநினக்கென்று ஞ் சுரமலிநகரினிறுவினன்றருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 34 |
வருணனைமுன்னர்க்கடிந்துடனவன்றன்வயிற்றுறுநோய்தனைநீக்கி த் திருமலிகூடன்மருவியவதுபொற்செப்புமேழ்நாணினைநாடி த் தருமிளிரன்பாற்படுத்துவாழ்த்தினவன்றாங்குதற்கரியவவ்வலியை த் துருவிடாவண்ணந்தீர்த்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 35 |
புட்கலாவர்த்தந்தன்னையேகொண்டுபொருமதுராபுரியழிக் க விட்குலங்கதுவவந்தநற்கடலைவிலக்கியதன்மையைமா ன தட்குணப்பொன்னிநீரையிவ்வில்வந்தடுக்குமென்றுரைத்தளித்ததனா ற் றுட்கர மின்றியமர்ந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 36 |
விளங்குநன்மதுரைக்கவுரிகண்களிக்கவிருத்தகுமாரபாலகனா க் களங்கமிலாமற்கொண்டனையென்றுகரைவதற்கேற்பவிநநக ரி லுளமகிழ்மாசிலாமணிமுன்னமுருவொடுஞ்சென்றுநின்றோதி த் துளங்கிலாவகையினமறைந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 37 |
ஈனசம்பந்தம்விலகியேவாழ்தலியல்பெனநின்னடிபேணி மோனசம்பந்தங்கொண்டதுதெரிந்தோமுன்னாபோற்றோத்திரஞ்செய்ய ஞானசம்பந்தப்பெயர்கொடுத்தருளினாட்டெனக்கனவிடைப்பணித்தாய் தூனசம்பந்தமில்லாசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 38 |
கடந்தனைத்தோண்மேல்வைத்தொருகரத்தாற்கவ்வியுமற்றொருசரத்தின் படம்விரல்கொண்டுசெம்பினீரோடுபரித்தவனின்றளிவா ச லிடமிளிர்ந்கதவந்திறந்திடக்காலினிருவிரல்கொண்டுதள்ளிடவு ந் தொடர்விரலெடுக்காதருளினைதருமைச்சொக்கநாதபரசிவமே | 39 |
சிவநிசிதினத்திலிரவெலாம்விழித்ததேகனாலாலதுசா ம நவநிறைகூவந்தனிறசலமெடுக்கநண்ணினனதில்விழுந்தவனை த் தவமலிகீரன்றனைக்கரையேற்றித்தந்தபோற்கரையினில்விடுத் த துவறலையறியச்ச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவ மே | 40 |
41 | |
மேவியபதினாறாமொடுக்கத்தில்விழைந்தவரும்பதினறுவ ர் தாவியமோனங்கொண்டிருப்பதனாற்றங்கறைவாசலினிதமு ம் பாவியவன்னம்வைத்திடவேண்டிப்பகாதிருஞாசம்பந்த ர் றூவியன்சேழ்க்கச்சொற்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 42 |
கடையுகமென்றுநினைந்திடமழையுங்கான்றகாலததின்மதுரை ப் படையிலிற்பலகையொன்றினைப்பாடும்பத்திரற்களித்ததுபுரைய த் தடையிலம்மழையேயிலதெனக்கருத்திச்சந்நிதிநின்றன்துதிக்க த் தொடைக்ககரநீட்டிலிலக்கினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 43 |
ஆயகருங்குருவிகேட்டிடநீமூன்றட்சரஞ்செவியினிலோத ப் போய்கடம்படியிலிருந்துபின்னருளிற்புகுத்தியதன்மையைமான வாயமலர்ந்துரைக்கும்பைங்கிளிக்கைந்தாம்வகையெழுத்துரைத்துனதடியிற் றோய்ந்திடச்செய்துமாண்டனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே.. | 44 |
தறையினின்மைசூர்க்கர்த்தர்பாற்சென்றசம்பந்தசரணரானின் னை முறையொடுமொதக்கேட்டபிடேகமுறையினிலாகெனக்கரு தி மிறையினில்வருடந்தொறும்பசுவனுப்பல்விழைகுவானருளினைவாவி த் துறைதொறுஞ்சங்கமுலவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 45 |
திகழ்திருவனந்தலதிலபிடேகஞ்செய்தற்குப்பெருகினையமைக்க ப் பகபர்சுவினையேகறந்துவந்திருந்தபாலினையெடுத்துவாய்ப்பெய் த வகையினிலவையலமமசையாதுவகுத்தனைநினைத்துதித்தென்று ஞ் சுகர்முதற்பணியும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 46 |
கணையெனுங்கண்ணார்பெண்களிலிருவர்கடம்பமானைந்தனிற்கொண் ட விணையிலாயாழின்வாதினைநீகேட்டின்புறவுரைத்தவென்றியைப்போ ற் பணையுளமுநிவர்கலகங்கொள்போதிற்பகர்திருவம்பலவன்றா ன் றுணையெனச்சொல்லிமறைந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 47 |
பெரியவன்சுவர்க்கபுரத்தமர்முநிவன்பேசிடுநமதுகோமுகை யி லுரியநீர்சிரசிற்றாங்கியேநெருநலுவனவணடைந்துளானதனா ற் பிரியமோடதனைப்பாதலம்பொக்கப்பிரித்ததன்வேலையைமுடித்து த் துரியராவாழ்கவென்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 48 |
கிளையொடுசுவர்க்கபுரத்தவர்கூடிக்கேழகிலரிரதம்வீற்றிருக்கு ந் தளையவிழிலிங்கமெடுத்திடவந்ததன்மையிற்சித்திநாயகனா ர் விளைவழிகூடியிருந்தனரென்றுவிழிதுயில்தனையுநீக்கி த் துளையமர்காதிலோதினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே. | 49 |
விழையிலான்கறந்தபாலினிலெடுத்தவெண்ணெயென்றொருவனாற்சுட்டுக் குழைவினிற்றந்தசாந்தினைநினக்குக்கோலமார்நிவேதனஞ்செய் த வழகியதிருச்சிற்றம்பலவன்வாயன்றுவெந்திட்டதென்னுலக ர் சுழலல்கொண்டறியச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 50 |
51 | |
அந்தநலீசனும்பலவீனனாயிடினாலையமோச ம் வந்திடுமென்று வரைந்தநின்சீட்டைவாங்கியேநாவினுக்கரச ர் சொந்தநற்சிரசிலேற்றிவாசித்துச்சோகமுந்திர்ந்திடப்பின்ன ர் தொந்தொமென்றொலியுங்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 52 |
நின்றளிகண்டுதரிசனஞ்செய்தநிருபனுக்கமைச்சனாம்பனவன் பொன்றினரடங்குசமாதியென்றுரைக்கப்பொருசினந்தன்னுளங்கொண்டு மின்றிகழதனைத்தகர்தனாடென்னவிருப்பொடுவந்தவனய ந் துன்றிருளடையச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரமசிவமே | 53 |
அரசனாற்றந்தவாக்கினையான்மற்றமைச்சனுமாளினைக்கொண் டு விரசுமாலையத்தின்கற்கவரினையேவேண்டுகோடரியினாற்பிளக்க ப் பிரசமேயென்னவிரத்தமும்பெருகிடபீரிடக்கண்டவன்மயங்கி ச் சுரர்பதியென்னக்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 54 |
சங்கமமடைந்துதிரும்பியபோதுதாங்குமிந்நகரினதெல்லை த் தங்குறவரசனயனமுந்தெட்டுத்தளர்ந்தனனாடாதனவுங்கே ட் டிங்குறுந்தளியைப்பெருகிடச்செயவுமென்றுநிவேதனங்செயவு ஞ் சுங்கமின்மான்யம்பெற்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 55 |
தந்தையைமோக்ஷத்தனுப்பிடவந்தனையன்னமனையையாலையநி ன் றுந்திபினின்முன்னுறுசிவஞானவுத்தமன்றனசெவிப்படந ற் சிந்தனைப்படியேசெய்தனமென்றுதெரிந்துடனறிகுறியாக த் துந்துபியொலியுமெழுப்பினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 56 |
நிணங்கிளர்வேலினயனமாரொருத்திநீடியதீக்ஷையையுன்னி க் கணங்கொளுநினதுசந்நிதிகூடிக்கரையநலவிருத்தையாச்செய் து குணமலிவெளியில்விடுத்தனையென்றாகூறுவதென்னினியாகு ந் துணங்கறமதியந்தவழமதிற்றருமைச்சொக்கநாதப்பரசிவமே | 57 |
வயலினிலரியையுரியவரறியாவகையினிற்கரத்தினாலெடுத் தே யயலிடம்பதுக்கிப்பின்சிரந்தனிற்கொண்டரியதன்மனையினிற்சேர்க்க க் கயலமர்விழியாள்கைகொடுபிசையக்கருதியேயெடுத்தவணடுங்கி த் துயர்தரவரவங்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 58 |
தீட்டியதங்கக்கவசமொன்றினையேதிருடினவன்மனந்திகைத்து ப் பூட்டியகதவந்திறந்திடுவரையும்புகழுநின்னாலையத்தமர்ந் து காட்டியவுதையங்கண்டெரியாமற்கரையுநினசந்நிதிகொணர்ந் து சூட்டிநின்றமரச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 59 |
வாதவூரடிகண்மகிழ்தலைவிரும்பிவையையினீரழைத்ததுபோ ற் கோதமையாதசச்சிதானந்தாகுலவுகாவிரியினினன் னீ ராதரவாகவருதலைவேண்டவவ்விதம்வருத்திநற்புகழை ச் சூதருமுரைக்கநிறுவினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 60 |
61 | |
போற்றபி டேககங் காளங்கள் சுத்தி புரிந்திடா ததனிடைக் கங்கை யூற்றிய கருவி யோடுதங் கரமு மொன்று பட்டெடுத் திடப்படாம லாற்றிய வதனாற் கண்டவர் யாருமச் சமிக்கடைந் திடச்செய்தாய் தூற்றலில் கவிஞர் போற்றிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 62 |
அயலிடம் வைத்த நிவேதனக் கனியை யருந்தியே லந்த வன்வயிறு புயலென வாக மகோதரங் கொண்ட போததை நோக்கிய பின்னச் செயலினை நாடி யுலகவ ரறியத் தெரிந்தனை நின்னடி பணியாத் துயரிலார் பொலியு மாடமார் தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 63 |
சிங்களத் தரச னனுப்பிப் பினகனி யைச்சீ ரோடு நிவேத னஞ்செய்த மங்கள முத்துக் குமாரனுக் கிரவி மையமர் காரைக் காலம்மை யிங்கினத் தோடுந் தந்தா மென்றே யியம்பினை மேனி லைகற்பந் தொங்கிடு கனியு முதிர்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 64 |
வஞ்சிமன் னவனு நின்னிடங் கொண்ட மகிழ்வி னாலனுப் பினதான மஞ்செனு மாரந் தன்னையும் வாங்கி மகிழ்ந்து லக்காட் டியபின்னர் பஞ்சரக் கிளையோ டுனைத்துதித் தணியப் பகர்நி லம்பொலி முனமேற்ற துஞ்சொலிக் காட்டி நிறுவினை தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 65 |
பத்திர னைக்கண் டுபசரித் திட்ட பான்மை யோனின் பணிசெய்த மித்திர னென்று சொன்னவோர் முநிவர் வியந்திடத் திரும டங்கட்டிப் பத்திமை கொண்டா னென்று செயளித்துப் பாதுகாத் திடவு நீசெய்தாய் துத்தனும் பணிந்து வாழ்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 66 |
இந்துள வனத்திற் கொய்யடி தனக்கு மெழிலுறு மருளை யீந்ததுபோ லந்திலேழ் நாளுன் சந்நிதி நின்று மகன்றி டாப்போத் தின்நன்மைச் சிந்தைகொண் ஞான சம்பந்தர் காணச் சீர ருள்செய் தனையென்றுஞ் சுந்தரன் பணியு முநிவர்சூழ் தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 67 |
ஆலைநேர் மெழியார் தெரிந்திட வணிமா வாதியா யுள்ள வையனைத்துங் காலையே வேண்ட மதுரையி லுரைத்த கடவு ணீயென் பதுதெரிய மாலையில் வாழ்கந் தப்ப தேசிகனு மகிழ்ந்தி டவளர் மகிமாவைச் சோலையி னடுவிற் சொற்றனை தருமைச் சொக்க நாதப் பரசிவமே | 68 |
வாலியினனைத்தகோட்டையிலொன்றைமறைத்தலிற்கொண்டுபோய்ச்சேர்த்துக் கூவிநன்மனையையருகினினிறுத்திக்கொட்டுபோத்தனிடையிருந்து பாவிகண்மனம்போற்கருமணல்விழப்பண்ணினையென்றுசூழபொங்கா தூவியலன்னந்தங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 69 |
சந்நிதிநின்றுஞ்சாரங்கிவாங்கித்தன்கரங்கொண்டுவாசிக் கு முன்னிடமரவம்வந்துநின்றாடமுன்மணிமாசிலாமணி யு நின்னதின்னருளுமிறதெனக்காணநிறுவினைநல்லருளினை யே துன்னலாபணியும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 70 |
71 | |
உக்கிரகுமரன்கரததில்வேலவலனைசெண்டுற்றிடச்செய்ததுபோல ப் பக்கலவாழ்சச்சிதானந்தற்கொண்டுடணபமாசாமிநாதப் போ தக்கவனமகிழமூன்றையுங்கொடுக்கத்தாதுவீற்றிருந்தனைசீட் டு துக்கிருத்த சொக்கநாதப்பரசிவமே | 72 |
சாத்திடவாரந்தனை யரைத்தவனுத்தாங் கொணாவருத்தமிக்கென் று கேத்திரமணலைச் சேர்த்தரைத்தளிக்கக் கெழுமியமேனிசாத்திட லு நேத்திரம்பார்க்குந் தொழிலினை நீக்கி நிறுவினை முதிவரர்கூடி த் தோத்திரஞ்செய்யும் புகழுடைத்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. | 73 |
சுந்தரமன்னன்றன் மகற்கரியசுமதியென் மந்திரிதனை யு கந்தளித்ததுபோன் மாணிக்கவாசகனாலொளிர் சாமிநாதப்பே ர் தந்திரன்காறுவாறென வழைக்கச் சாற்றினைச் சீட்டை முன்னளித் து சொந்தந்ன்முன்வருவந்திடுந்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. | 74 |
கதவரகுணன்றனன்பினாற்சிவ லோகந்தனைக் காட்டியதுபோ ன் மதிவளர்சாமிநாதமாமுநிவன் மகிழ்தரப்புவியமர்ந்துரைக்கு ம் விதிசிவஞானதேசிகன்றன்னை விருப்பொடுகாட்டினையதனா ற் றுதமலியருளை வியந்தனர் தருமைச் சொக்கநாதப் பரசிவமே. | 75 |
ஆவணி மூலநாளிற்சாதனத்தாலாட்டுபோதிடைவிடாதொளி மாவணியசியார்பலர்களுங்காணமதுரையினடைந்தனமா தாவணிநரியுன்சந்நிதிநின்றுந்தரிசிக்கச்செய்தனையென்று தூவணிந*கையார்மேவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 76 |
கச்சிவாழபயனுனைத்தரிசித்துச்சடைசெலப்புதவினின்விடை யி லச்சினைவைத்தபோற்சிவஞானவாரியனாற்பனைசைக் கு மெச்சிடுசாமிநாதமாமுநிவன்வியந்திடவாறுகட்டியையு ந் துச்சியென்றளிக்கச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 77 |
நற்றவர்புகழும்பனைசைவாழ்சாமிநாதமாமுநிவரர்பிரான்பா ல் விற்றவழநாகத்தகட்டினாற்கூரைவேய்ந்திடுபந்தரைநம து முற்றமேற்செய்யவேண்டுமென்றன்பின்முதியனாச்சென்றெழுகனவி ற் சொற்றனையவ்வாறியற்றினன்றருமைச்சொக்கநாதப்பரசிவமே | 78 |
நேயமோடுன்னைத்துதித்தான்மறவானிள்பழிதீர்த்தநின்மல னே யாயநல்வெள்ளையானையின்சாபமகற்றுபுராதனநிலை யே காயமர்கடம்பவனமுதுநகராக்கண்டிடச்செய்தசிற்பர மே தோயமார்பண்ணைசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 79 |
பருங்கயற்கண்ணிதடாதகையாகப்பார்த்தபேரொளியின்சின்மய மே தருந்திருமணத்தையவ்வயிற்செய்துதழைத்திடுஞானதற்பர மே யருங்குலவெள்ளியம்பலத்திருக்கூத்தாடிநின்றொளிர்தருபத மே சுருங்கைநீர்பாயும்வயலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 80 |
81 | |
ஆன்றநன் மலையத்துவசனை யழைத்து மாடிடச்செய்தகாரண மே யேன்றவுக்கிரனும்பாண்டியனாவந்திருந்திடச்செய்தபூரண மே சான்றவணவற்குவேல்வலைசெண்டுதந்துவாழ்ந்தொளிருமாரண மே தோன்றநல்லறிவுதரும்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 82 |
மிடைந்திடுகடலைச்சுவறிடச்செய்யவேலினைவிடச்செய்யும்பொரு ளே யிடையிலிந்திரன்றன்முடியின்மேல்வளையையெறிந்திடச்செய்பரநிதியே யடையுநன்மேருவினையுஞ்செண்டாலேயடித்திடச்செய்தநல்வரமே தொடைமதுவொழுகும்பொங்கர்சூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 83 |
நிறையரபத்தன்வேண்டவேதத்தினிலைப்பொருளுரைத்தநன்மன மே கறைதபவொளிருமணியுண்மாணிக்கங்காட்டிவிற்றிட்டநற்றெளி வே சிறையமர்வருணன்விடுகடல்வற்றச்செய்திடுங்கருணையங்குன் றே துறையினிலன்னஞ்செறிந்திடுந்தருமைசொக்கநாதப்பரசிவமே | 84 |
கேடமர்வருணன்விடுமழைநடுக்கக்கிளருநாலாகியமாட க் கூடலாயாக்கியடியவர்மனத்திற்கூடிவாழ்ந்திடுந்னிட்கள மே தேடிடுமெல்லாம்வலசித்தரென்றுசெப்பிடநின்றுவாழறி வே தோடலர்கொண்டுசரத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 85 |
பொழுதிற்கல்லானைவாயிலிக்கினையும்புகுத்தியுண்ணச்செயுஞ்சித் தே யிழுதையென்சமணர்விடுத்தயானையினையெய்துநின்றிலகுமாமணி யே பழுதிலாவிருத்தகுமாரபாலகனாப்பாலிக்கநின்றதற்பத மே தொழுதினிற்பவரும்வழுத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 86 |
உள்ளகைதவனுக்காவிடக்காலையூன்றியம்பலப்பதமெடுத்து ந் தெள்ளுறவாடுநிபுணமெபழியைச்செட்டியிற்சென்றறியிறை யே நள்ளுமாதாவைப்புணர்ந்தபாதகத்தைநலிந்திடச்செய்தசிற்குண மே சுள்ளகம்மில்லார்நள்ளிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 87 |
ஆசிரியன்றன்மனையையிச்சித்தானங்கம்வெட்டினவருளுரு வே யேசியசமணர்விடுத்தநாகத்தையெய்துநின்றருளியவழ கே தேசமர்மாயப்பசுவினையிடபஞ்சென்றுமாய்த்திடச்செயுமரு ளே சூசனமுடையார்வாசஞ்செய்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 88 |
திட்டவட்டாலைமண்டபத்தேறிச்சேவகஞ்செய்தொளிர்மெய்க்கா ட் டிட்டநற்பரமேவறுமையிலுலவரக்கிழியருளியவெழிலித மே செட்டிவீதிகளினின்றுநல்வளையல்செப்பிளிற்றிடுதரிசன மே தொட்டநற்கடல்சூழபுவிபுகழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 89 |
அடிமையின்முதலாம்பெண்கணால்வருக்குமட்டமாசித்திசொலுயி ரே மிடியிலாச்சோழன்றனைவெளிப்படுத்திவிடையிலச்சினைசெயுங்கர மே படியில்கைதவனுமகிழ்ந்திடத்தண்ணீர்ப்பந்தரைவைத்த நுண்ணியாலே துடியிடைமகளிரூசலார்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 90 |
91 | |
மதுரையம்பதியிற்றனபதியாகிவழக்கினையழித்தருளுரு வே சித்றுடைப்பழியைநீக்கிக்கைதவற்குச்சிவனகர்காட்டியசீ ரே வீதியிற்பத்திரனைக்காத்திடவிறகைவீற்றிரவருளியவிகற் பே சுதியளிநிறையுஞ்சோலைசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 92 |
பத்திரன்மகிழச்சேரமான்றனக்குப்பண்பொடுதிருமுகங்கொடுத் த சித்தமேமழையினனைந்திடாவண்ணஞ்சீரியபலகையையளித் த முத்தனேயவன்றன்மனைவிபால்வெற்றிமொழிந்திடநின்றவிச்சையனே சுத்தநற்றவத்தார்துதித்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 93 |
கிருட்டிடின்குருளைப்பசிதணிந்திடவேகிளர்முலகொடுத்தகற்பக மே தெருட்டியுமவைகளமைச்சரேயாகச்செய்துநின்றருளியதிற மே கருக்குரீஇயொடுதாரைக்குபதேசங்கழலடிதந்துவாழொளி யே துருக்கையும்பரவும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 94 |
மதுரையினெல்லைகாண்பிக்கப்பாம்புவளைந்திடவிட்டகங்கண னே ததியினிற்சோழன்படைமடிந்திடவேதம்பெயரம்புவிட்டவ னே பதியினிற்றானும்புலவனாய்ச்சங்கப்பலகைதந்தளித்தபுண்ணிய னே துதிமலிபுலவர்வணங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 95 |
கொங்குதேர்வாழ்க்கைப்பாசுரர்தருமிகொண்டிடவெழுதியகர னே மங்கியகீரன்றனைக்கரையேற்றிவைத்தருளியவிசித்திர மே நங்கணாரசத்தியன்றனாலிலக்கணந்தெரிந்திடச்செயுமரு வே சுங்கனும்பணியும்புகழ்மலிதருமைச்சொக்கநாதப்பரசிவமே | 96 |
ஊமனாமுருத்ரசன்மனாற்சங்கமுறுகலகந்தெறுமுற வே மாமைசேரிடைக்காடன்னோடுஞ்சென்றுவளர்பிணக்கழித்தருட்பே றே தீமைச்செம்படவரொடும்வலைவீசித்தேவியைக்கொண்டசெம்மலை யே சோமையுந்தவழும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 97 |
வாதவூரகடிகமக்குபதேசமனனிடச்செய்தும்பின்னரியை க் காதலிற்பரியாயவைகளைநரியாய்க்காட்டியும்வையைநீரடைக்க ப் பூதலமறியமண்ணெடுத்துழன்றும்பொலிந்திடநின்றமுக்கணனே சூதமார்பொங்காசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 98 |
கூனலார்வழுதிசுரத்தொடுதணித்துங்கூடியவமணரைக்கழுவி ல் வானவரறியவேற்றியுங்கிணறும்வன்னியுமிலிங்கமுமழைத்து த் தானமர்சாட்சிகாட்டியுநின்றதற்பராபரத்துறுபொரு ளே சூனமிக்குலவும்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே | 99 |
செப்பிடுகல்வியோடரும்புகழுஞ்செல்வமுமில்லறத்தோ டு கப்பிடுமனமுமணிந்திடுகலமுங்கண்டவர்களித்திடுசுத னு மொப்பிடுமனத்தில்வந்திடுதுறவுமொன்றொழியாதுளவாக த் துப்பினோடனைத்துந்தந்தருடருமைச்சொக்கநாதப்பரசிவமே | 10 |