நேரிசைவெண்பா திருக்கோட்டி வாழ்துறைசைத் தேசிகனா மெங்கள் திருக்கோட்டுஞ் சுப்பிரமண்ய தேவன் - மருக்கழற்கு நான்மணிப் பொன்மாலை சொலநல்ல பதமருளும் நான்மணிக்கைக் குஞ்சரநற் றாள். |
நேரிசை வெண்பா தேன்மருவு கொன்றைச் சிவபெருமான் பொற்கமலத் தேன்மருவு நற்றுறைசை சேர்ந்துதுதி - வான்புவியில் மன்மாக்க ளுக்குயர்ந்த மாவீ டளிப்பனெஞ்சே மன்மாக்க ளுண்மலர்தாள் வாழ்த்து. | 1 |
கட்டளைக்கலித்துறை. வாழ்த்தும் வடிவந் திருக்கல்வி செல்வமிம் மண்ணினல்கும் ஆழ்த்து மறுமையிற் பேரின்ப வெள்ளத் தறங்கடையை வீழ்த்து மலைகட லிற்பெரி தாக விரிபிறப்பைத் தாழ்ததுந் துறைசைத் தயாசிந்து நாதன்பொற் றாண்மலரே | 2 |
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் தாளாலே யுதைத்தவற்குந் தந்தலையிந் தனமேற்றுத் தண்பா ணற்கும் வாளர்வெஞ் சிலையுடனே கொடுஞ்சிலையைப் புரத்தெறியும் வன்மை யோற்கும் மீளாத தலையளித்தீர் வெள்ளேற்றீர் புள்ளேற்றோ னிரந்து வேண்டத் தாளாகி லும்முதவி யாளாது துறைசையுற்றீர் தயையிற் சிந்தே | 3 |
நிலைமண்டிலவாசிரியப்பா சிந்தினை விந்தமாஞ் சிலையையு மடக்கிய சிந்தியன் முனிவனுக் கருளினை திருவருள் அந்திவான் பிறையையு மப்பிறை தொடுவரை அந்திவான் மலைநல் லாரையும் மணந்தனை உந்தியைத் தந்தியி னுரியினை முகிலினை உந்திபூத் தோன்முடி யொளிபெறத் தாறுகினை தந்தியி னிசைவல தாபத னுக்கும்வெண் தந்தியூர் சதமகன் றனக்குமன் றருளினை நந்திக் காரினி நாயக வுனையலால் நந்திக் கார்வய னறுமது வருக்கைமா குந்தியார் பொழில்வயின் மந்தியைங் கனிகொடு குந்தியார்ந் திடுவளங் குலவிய துறைசையில் வந்தியார்க் குந்தரு வானுளங் கொண்டனை இந்தியப் பகைதெறூஉ மியன்முனி வரருள இந்தீ வரத்திற் கிமகர னாயினை புந்தி யனைய புலன்மிகு புலவரின் புந்திக் கெட்டாப் புநிதனீ யாதலின் நந்திய வறிவுடை நாயினேன் றனக்கும்வெண் வந்திநா யகர்க்கரு ணற்பத முதவுவாய். | 4 |
நேரிசை வெண்பா உதவிற் பதமலரை யொப்பறுமால் போதன் பதவிக் கரும்பதியென் பாலாம் - மதமார் பெரும்பகட்டோன் வேதனரி பேணுவர்சீற் றங்கொள் கரும்பகட்டோன் கண்டுவணங் கும் | 5 |
கட்டளைக்கலித்துறை வணங்கா முடியரும் வந்து வணங்கிடுபா தர்வண்கார் வணங்கா முடிமதி தோய்துறை சைக்கிறை வந்தணுகா வணங்கா முடியி லகப்பட் டுழலு மெனக்கன்னையோ வணங்கா முடிக்கு மறலியென் றேநினை யாயிழையே | 6 |
அறுசீர்கழிநெடிலாசிரிய விருத்தம் ஆயிழைபங் கிடையன்னப் பெடைமானை யாறணியங் கணற்குத் தெவ்வன் சேயிழைமாப் பதியாதி கிலீமுகத்தா னிறஞ்சிதையச் செய்தா னந்தோ ஆயிழைநீ துறைசையில்வா ழருமறைக்கு மரையான வனநன் றன்பாற் போயிழைநற் றொடைவாங்கிப் போதுவா யோறுமிடை புரகத் தானே. | 7 |
நிலைமண்டிலவாசிரியப்பா. புரந்தரன் மானயன் போத னாதியோர் வரந்தரு வாயென மலரடி பரவிட வேத புருடனும் பாதுகை யாகியே பொன்னடி யதனைத் தன்முடி மேற்கொள பணிமுனி புலிமுனி பதபலர் பழிச்சிட மணிமுடி னரனீவர் மாதவர் வணங்கிட மணியொளி பாற்சுவை மலர்மண மென்னவும் அணிபுனல் குளிரெனத் தனையக லாதே ஒன்றிய வரைமகள் கண்டுவப் பெய்த மன்றின டம்புரி யெண்டோட் பண்ணவன் கயிலை யென்னுஞ் சயிலந் தனையொரீஇ இப்புவி செய்த நற்பெருந் தவத்தாற் சுப்பிர மண்ணியத் திப்பியப் பெயர்கொடு அப்பிர மெனவைந் தக்கர வமுதைப் பவமெனுங் கோடை பாறிடச் சொரிந்தே சிவமெனும் பயிர்செழீஇச் சிறக்கச் செய்தனன் அவனடி காணின் னமனடி காணீர் அவன்படி மிதிக்கின் னமன்படி மிதிக்கீர் அவன்புரங் காணின் னும்புரங் காணீர் அவன்முகங் காணின் சிவன்முகங் காண்பீர் நல்லவ ருக்கு மல்லவ ருக்கும் இல்லை யென்னச் சொல்ல வறியான் போந்தவர்க் கருள்பவன் பொற்பதி யாதெனின் ஆய்ந்த வளமலி யகன்புன் னாட்டினில் காவிரி கூலமார் காவிரித் தென்கமர் ஓவறு பல்வள மோங்கிய சோலையும் வண்டார் துளபமும் வன்சமு முவணமும் அண்டர் தருவு மன்னமு மானும் சிந்தா மணியு நந்தா நிதியும் ஆரும் போந்துஞ் சீர்பெறு நிம்பமும் தொண்டையுங் கெண்டையுந் துரோணமும் வேங்கையும் அத்தியு மாவு முத்தம வரகம் அரம்பைக் கூட்டமும் வரம்பில நிரையும் ஆண்டுநீர் சென்றிடின் வேண்டின பெறுவீர் அப்பதி கோமுத் திப்பதி யென்ப | 8 |
நேரிசைவெண்பா என்பணியும் வன்பணியு மேற்ற மணிப்பணியும் என்பணியுங் கொண்ட விறையவனே - மின்பொருந்தும் மாசடையா காசமுறு மன்னு பொழிற்றுறைசைக் காசடையா காசடையா வாறு. | 9 |
கட்டளைக்கலித்துறை ஆறணி வேணியர் தென்றுறை சைப்பதி யாளரெங்கள் நீறணி மேனி நிமலரைச் சேர்த்தில ணேர்ந்தசந்தச் சேறெனத் தீயைக் குழைத்துத் தனத்தினிற் றீட்டுமன்னை வேறினி யென்செயத் தான்றுணி யாள்சொலு மெல்லியரே | 10 |
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். மெல்லிநல்லாட் கோர்பால்வெள் விடைக்கோர் பால்வெம் விறன்மறலிக் கோர்கான்மற் றரைப்பாம் பிற்கும் கொல்லுசிறு காற்புலிக்கு மறுகால் கோதில் குலமுனிவன் றனக்குமுக்கால் கோடீ ரத்தின் வல்லரவு வாழ்சிரத்தை வரந திக்கும் வழங்கினீர்பிள் ளைமதியு டையீ ரும்மை நல்லவர்கண் மதியுடைய நம்ப ரென்பர் நாயினே னாண்மதியி னாத ரென்பேன் | 11 |
நிலைமண்டிலவாசிரியப்பா நாத வுருக்கொளு நாயக மாசிலா நாதவிப் பூதல நண்ண வெண்னுபு சீத மதிக்கலை நீத்தனை யொப்பறு போத மதிக்கலை பூண்டனை தீதுசெய் வன்பணி தீர்த்தனை நன்பணி யேற்றனை மின்பணி திருத்தினை யென்பணி திருத்தினை மாதவர்க் கருளினை போதமெற் கருளினை நடமிடு பரியிவர் வடதிசை வாழுமோர் சக்கிலித் தோழமை தக்கதன் றெனவுனாப் பக்குவ வுளதினர் தொக்கவீற் றிருந்தனை சூலியென் றிடுபெயர் நீலியைத் துறந்தனை புல்லாடை நீக்கினை கல்லாடை வீக்கினை அக்கணி யொருவினை யக்கணி மருவினை கயிலை துறந்தனை துறைசை யுறைந்தனை அன்புடை யடியர்மே லன்பையு மளவறு ஓகையு மீகையு மோட்ட மறந்தனை ஆதலி னடியேற் கருமறை யறிவரு பாத மளித்தருள் பாலிப் பாயே | 12 |
நேரிசைவெண்பா பாலாழி யைப்புலியின் பாலனுண வன்றளித்தென் பாலா ழியவினையின் பற்றறுத்தாய் - தோலாது சங்கெடுத்தாற் குத்திகிரி தானளித்துத் தானவார் சங்கெடுத்தாண் டாய்துறைசை சார்ந்து. | 13 |
வெறிவிலக்கல் கட்டளைக்கலித்துறை சார்ந்து துறைசைப் பதியுறை நாயகன் றாண்மலரைத் தேர்ந்து கொடுவென் னுதலினிற் றீட்டில டீயவன்னை ஓர்ந்து பழிவர லுன்னாது பாலக்கண் டாங்கியைக்கொண் டீர்ந்து மயறெற வெண்ணிய வெண்ணமிக் கேழைமைத்தே | 14 |
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் ஏழையருக்கிருநிதியுமிமயவருக் கீரமுதுமியையத்தந்தாய கூழையாயினுமெனக்குக்கொடுத்தளிக்கக் கூடாதோகோவைத்தாவும் தாழைமதுத்தண்டுநிறைமாத்துறைசை காத்திறைசெய்தவக்குன்றேவன் கூழைபுரியைவர்தனம்மாற்றியடி யாருளத்திறரகுடிகொள்வோனே. | 15 |
நேரிசையாசிரியப்பா ஓராழிவெய்யவ னொளிசெயுமுலகினில் சீரார்துறைசைச் செழும்பதியுறைவோய் ஐந்தணுவுற்றிடு மங்கமொன்றிரண்டும் உந்துமுறவி யொழிகடமொன்பதும் மூன்றுபூதமு மும்மூன்றுருவும் ஏன்றவோர்கூத்தனு மீரறுபூட்சியும் ஓர்சேதனமுறு மொருபதுமூர்த்தமும் சீர்மூன்றாவியார் சிறந்தவாறுறுப்பும் பன்னொருபடிவமூர் பகருமோருயிரும சொன்னவீரொன்பான் றோமறுதேயமும் பொன்பெறுநிறமுடைப்புநித நின்பெயர்புகன்றிடுநிமலதேசிகனே. | 16 |
நேரிசைவெண்பா தேசிகனே தேசின் கொழுந்தே சிவபுரனே ஆசிலாத் தென்றுறைசை யண்ணலே - மாசிலா நற்பதத்தை நீதரினே நாடேனென் வற்புரத்தை நற்பதத்தை நானடைவே னன்கு. | 17 |
வெறிவிலக்கல் கட்டளைக்கலித்துறை நன்செய லாகக் கருதுநல் லீரிந்த நானிலத்தில் வன்செய லந்தக ரைத்துணி கொண்டு வருத்தலென்னைப் பொன்செய லாக்கிய பாசத்தைப் போக்கிடும் பூங்கடுக்கை மன்செய லாந்துறை சைப்பதி நாயகன் மாலையொன்றே. | 18 |
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் மாலையளித்தாரெனக்குமலரைந்துங் கனல்வில்லுமதப்பயற்குக் காலையளித்தேர்நாரிகடன்முரசு மதிக்குடையோர்கங்குன்மாதற் சேலையளித்தார்கொடியார்வன்கண்ண ரென்கண்ணர்சிவசிவாதங் காலையளித்தானாரேற்றுறைசைமின்னே வழக்கிடுவேன்கருதுவாயே. | 19 |
நிலைமண்டிலவாசிரியப்பா கருவிளங்கூவிளங் கண்டுகருப்புவில் பொருவிழிகொங்கைசொல் பூருவென்னவும் நடையிடைதொடைநுதனறுங்களமுகஞ்செவி பிடிதுடிகதலிவெண்பிறைவளைமரைவளை பல்லிதழ்நாசிவாய் பண்டிதோளுந்திவெண் வின்மணிதுவர்திலம் வீழியால்வேய்மகிழ் என்னநாரியர்தமை யேத்துமென்னேழைமை தன்னைநீக்கிநற் றாளளைத்தாண்டவன் பிறப்பையுங்கரப்பையு மறப்பையுமொறுத்திட அறப்பொருளாதிய சிறப்புடனுறச்செய் வான்கலைப்பொருளையும் வான்றலைப்பொருளையும் வானிலத்தமுதையு நானிலத்தமுதையும் வேண்டினர்க்கருளிட வீண்டியேதுறைசையில் போந்ததேசிக னாந்திருமணியினைக் காணுங்கண்ணே யொளிபெறுகண்ணாம் காணாக்கண்ணூ னீர்பொழிபுண்ணாம் அவன்புகழ்கேட்டிடுஞ்செவிபுலன்கொளுஞ்செவி அவன்புகழ்கேட்டிடாச் செவுபுவியுறுகெவி அவன்றாள்வணங்குந் தலையேவண்டலை அவன்றாள்வணங்காத் தலையேவெண்டலை அவன்பணிபுரியுங் கையேமலர்க்கை அவன்பனிபுரியாக் கையேயுலக்கை அவனைத்துதிக்கு நாவே செந்நா அவனைத்துதிக்கா நாவெபுன்னா அவனை வலங்கொளுந் தாளேநற்றாள் அவனைவலங்கொளாத் தாளேபுற்றாள் அவன்பணிக்குதவும் பொருளேயறப்பொருள் அவன்பணிக்குதவாப் பொருளேமறப்பொருள் அவன்பெயருன்னு மனமேநன்மனம் அவன்பெயருன்னா மனமேகன்மனம் ஆரணமாமென வநேக சாகைகளால் காரணன்பெருமையைக் கழறிடுமதனால் பாணிக்காமற் பனிமலர்கொடுதூஉய்த் தாண்மலர்துதித்துத் தனிப்பதம்பெறுகத் தொண்டரேயின்றே கண்டுய்வீரே. | 20 |
நேரிசை வெண்பா உய்ய வுலக முயர்தந்தைப் பேரொரீஇத் துய்ய மகன் பேர்கொளீஇச் சோதிமிகு-வய்யகத்தில் வண்டுறைசை மேவியே மாந்தர்க்கருள்புரிவான் வண்டுறைசெஞ் சேவடியே மன்னு. | 21 |
கட்டளைக்கலித்துறை மன்னித் துறைசை மருவிய நாதன் மலரடியை உன்னித் துயிலைத் துகிலைத் தொடியை யொருவியென்றன் கன்னித் துடியிடை யாள்படும் பாட்டினைக் கண்டிலரே பொன்னித் துறைபடி யுங்குரு கீர்சொலும் போயவர்க்கே | 22 |
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் அவர்புகன்றநன்மொழியாமரியெச்சில் கொடுதேம்பியறிஞர்மேன்மைத் தவர்புகழுந்துறைசையிறைதாண்மருவு மெனைவரையத் தவறிலாத எவர்புகுந்துகூறிடினுமெட்டுணையு மிசையாதவிருப்புநெஞ்சர் இவர்புரிந்த செயலனைத்துமிப்புவிதப் பறவுணரவியம்புவேனே | 23 |
நிலைமண்டிலவாசிரியப்பா இயம்பருநான்மறை நயம்பெறவொலித்திட வயம்பெறுமிருமுனி வரருளமகிழ்ந்திட மதிநதியாடிட வானவர்பாடிட நதிபதிய்லிகெடத் துதியொலிமிகைபட நந்திமுழவமு நான்முகன்கஞ்சமும் கந்திருவரரிசை முந்துறுநாரதர் தும்புருமாடக மன்புடன்கைக்கொடு உம்பர்கடம்மனம் பம்பரமாடிட இசைத்திடுமின்னொலி திசைப்புலமன்னிட முயலகன்மிசைவல மிலகியதாணிறீஇக் கதிர்முனாந்தாமரை மதிமுனாஞ்செயலென வாமத்தாளுள மகிழ்தலைசிறந்திட வாமத்தாளினை வானிற்றூக்கிதித் தோமென்றாடிடச் சுவணச்சபையையும் மாமதிமரபினில் வருராஜகேசரன் மனப்படுபுழுக்கந் தனைத் தெறவிடத்தாள் தனைக்குறண்மிசைநிறீஇச் சாம்பூந்தச்சபை தனகுக்கான்மாற் றதிகமெனும்படி தேனமர்கூடலின் மீனவன்காண வலத்தாடூக்கிதத் தோமென்றாடிட நலத்தகுவெண்பொன் னாகியசபையையும் கொண்டுதண்டுறைசையிற் குலவியநாயக தொண்டனுளத்தின் றுருசினையகற்றி இருப்புச்சபையா விருப்புற்றுறைகவே. | 24 |
நேரிசைவெண்பா உறையோங்கு தென்றுறைசை யுற்றே னெனக்கோ உறையோங்கு நற்பொருளு மோங்கும் - சிறையோங்கு கால்புரங்கா ணாதொழிவேன் கந்தன் கயிற்புரியும் மால்புரங்காணா தொழிவேன் மற்று. | 25 |
கட்டளைக்கலித்துறை மற்றென்பொருடரு வார்மலர்த் தாளின் மறலிதனைச் செற்றேன் பரிபவநீக்குதலின்றிச் சிறுமதியர் நற்றென் றுறைசைப் பதியுறைநாயகர் நாகவிறை பற்றென் பணிபணி மான்மழு நீத்த படிவத்தரே | 26 |
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். படிவம்பல்செய்தவர்க்கும்பனிமலரைப் பெய்தவர்க்கும்பன்பார்மகட் படிவங்கொண்டருடுறைசைப்பதிகரசை நதிக்கரசைப்பணியவிந்தப் படிவம்மின்னிருமறைபன்முறைதெரிய வவனடியைப்பரவச்சொன்ன படிவம்பார்மலர்தூவிப்பழிச்சிடுமின் னொழிச்சிடுமின்பவப்பவ்வத்தை | 27 |
நிலமண்டிலவாசிரியப்பா பவ்வம்படப்பைபருநகர்மலைகான் எவ்வியினுள்ள வின்பமார்பொருள்களும் ஒன்றியதுறைசை யென்றுரைபதியுள் துறவரசாகிய புரையறுமணியினை எந்நிலத்தவரு நன்னிதியென்றும் அருட்கடலென்றும் விருப்புடனுரைப்பர் பவக்கடறனக்குத் தவக்குறுமுனியும் மிடியெனும்வரையிற் கடுதிறலிடியும் ஆலயத்திருட்கு மாலையாமொளியும் பசிக்கன்றனக்குச் சுசிப்புனலாயும் அவிச்சைவிடத்திற் காரமுதாயும் கேடெனும்பழுவக் கோடரியாயும் காமக்கரிக்குத் தாமரியாயும் உரமார்பாசக் கரவாளமாயும் அகிபிசிதனக்குக் ககபதியாயும் பொறாமைகடிக்கு நறாநிம்பமாயும் சினமெனுமரிக்குக் கனவன்சிம்புளும் ஆகத்தோன்றி வாகைகொண்டிடுதலின் எப்பொருடமையுமொப்பகடத்தா ஏதுவினாலே யேனையோர்போல எல்லவருக்கும் நல்லவரென்ன இல்லதுபுகலே னிந்நிலத்தோர்க்கே | 28 |
நேரிசைவெண்பா தோலுடையான் மால்விடையன் றூயன் துறைசையுளன் தோலுடைய னென்றார் சுகம்பெறுவர் - தோலுடையக் கூடலிலம் பாலெய்தான் கோல மலர்ப்பதத்தைக் கூடலிலம் பாலெய்தான் கூத்து. | 29 |
வெறிவிலக்கல் கட்டளைக்கலித்துறை கூத்த னுலகுய்ய மன்றிற் குனித்துத் துறைசையுற்ற ஆத்த னடிலமர் சூட்டிடத் தீரு மணங்குக்கொரு கூத்தனைக் கொன்று விருந்தீய வன்னை குறித்தல்கொலை பூத்தலல் லாமற் பொருளொன்று மில்லைநற் பூவையரே. | 30 |
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் பூவரசுசெய்யவுநான்வேண்டிலேன்விண் புவியரசுசெய்யமனம்பொருந்திலேனைங் காவரசுமாவரசுகமலனென்றுங் கருதுபதமலர்துதிக்கக் கண்ணினேற்கு நாவரசுபாவளித்துப்பாலித்தாண்டு நற்கருணைபுரிந்தருள்கநறுந்தேன்பில்கி மாவரசுநிறைதுறைசைக்கரசேநாவின் மன்னமுதேயின்னமுதேமணியேபாகே | 31 |
நிலைமண்டிலவாசிரியப்பா. பாகப்பாவையைப் பண்ணுறமூவர்சொல் பாகப்பாவுமென் பாவுமணந்தனை அரிக்கணைபரித்தனை யரிக்கணைத்தரித்தனை அரிக்கணைவிரித்தென தகப்பகையொறுத்திலை திருக்கின்மலர்க்கணைத் தெவ்வனையெரித்தனை திருக்கினைமுருக்கியென் சிந்தைநோய்செறுத்திலை அடிமலரளித்தகண் ணர்கருளுதவினை அடிமலரளித்தென தலமரலகற்றிலை வந்தனைமாநில மகிழ்வுறத்துறைசையில் வந்தனைகொண்டெனுண் மன்னிவதிந்திலை முக்கரணங்களுமகிழ்வுறுமுனதருள் முக்கரணஞ்செய்து முயங்கிடப்பெற்றிலேன் ஆண்டவன்ன*** * யடிமைகொண்டடியனை ஆண்டவமாக்ருத லடிகளுக்கழகல கண்டவன்கரத்தினிக் கருணைசெய்யாவிடின் கண்டவரென்றனைக் கணக்கிடுவார்களோ எத்திக்கும்புக ழிறைவநீ கைவிடின் எத்திக்கும்மிலா வேழையெவ்வாறுய்வேன் பருத்தியல்பவப்பிணி யென்னும்வன்பகைப் பருத்திக்கெட்டி யாகியப்பதத்தோய் நடுவனையடுமிகு கடுவெனக் கருதியோ நடுவனாளுணர்த்திய நலனிலான்மொழியினோ அறங்கடைக்குதாரண மாக்கவெண்ணியோ அறங்கிடவுறையு ளாக்கநினைந்தேர ஐயநெஞ்சின் னாமெனவுன்னியோ ஐயம்பின்னடிக் கடிமையென்றோர்ந்தோ ஈந்திலைபோலவென்றுமுன்றிருவருள் ஈந்திலைபோலு மிணையடி யுதவிலேன் போந்திடுகென்னப் புகலினும்புலரேன் போந்தவர்க்கருளும் புநிதநீயாதலின் உன்னடிகாணின் மன்னுமென்மும்மலம் உன்னுமொளிமுன மிருளெனவிரியுமே | 32 |
நேரிசைவெண்பா . இரியும் பவப்புணரி யீர்ந்துறைசை மன்னா நரியைப் பரியாக்கு நாதா - அரிபிரமர் என்றுதொழு முன்னடியை யேழையடி யேற்கும் இன்றுதரி ற்றாழாதினி | 33 |
இனிக்குஞ் சுவைத்துறைசைக் கரசேபொன் னெழிற்சபையில் குனிக்குஞ் சிவபர நின்கோ கனக குலமலரென் செனிக்குச் சிறப்புறின் றென்றிசைக்கோ மகன்போதவுன்னத் தனிக்குஞ் சரமத்தி லன்னேனு மென்றனைச்சார்கிலனே | 34 |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் சாரானே வன்மறலி சாற்றுலகமணீ புதுக்கோள் சண்டன் விண்டின் சீரான பவஞ்சுவைருத் திரரறநா லாமெட்டுச் சிறந்த மெய்யில் ஏரான வீறுமுதலயனீக்கி யேனைமெயி லுவ்விவ்வளவும் நேராக வல்வில்வன் வுடனிறீஇநெறியுடனே நினைந்திட் டார்க்கே | 35 |
நிலைமண்டில வாசிரியப்பா கேளா தவர்க்குநீண் மீளாக் கதியருள் கேளா கியபா கிளர்கயிலை யையொரீஇ ஆனிட நீத்துநன் மானிட மேற்றனை மடத்தினைக் கருக்கமின் மடத்தினி லிருந்தனை தோலாடை போக்கிமென் னூலாடை வீக்கினை இடத்தாளைநீக்கிமா வலத்தாளைத்தூக்கினை இடத்தாளென் முடிவையா திருந்தனை போலுநீ நாதமூன் றெழுத்தையும் போதமாற் றியதையும் ஓதுமண் ணாதி யெண்ணுருக் கரந்திட்டதும் நின்பெய ருறுப்புக ளன்புடன் றெரித்தன நீதரு மோதியா னாதவு ணர்ந்தனன் வல்லுரு மூன்றையு மெல்லுரு மூன்றையும் புல்லு மிடையுருப் பொருந்து மிரண்டையும் கொண்டவி லச்சினை மண்டல மறியா வல்லுரு புவிகனல் வான்மணி மூன்றாம் மெல்லுரு கால்வெளி விளங்கிய மானனாம் இடையுருமதிபுன லெனவிரண்டாகும் முடியுலகுடையநீ யிடைவுலகடைந்தனை மெய்ப்படுபுலவர் விளம்புமாயிரத்துள் நெய்ப்படுநியாய நீகொளற்குரித்தே முறைதெரிபகவநான் மறைபுகழ்துறைசையில் உறைதருசிவபர வோர்மொழிகேண்மோ அருத்திகொண்டிட வைந்துலோகத்தையும் அருத்தஞ்செயுமுன் னடியாம்பரிச வேதிசேர்ந்த வினையினேனாகிய ஓதுலோகத்தை யொளிர்மாழையாக்கா துற்றிடுமாயிற் குற்ற மியார்மாட்டதோ உன்னைத்தடுப்பவ ருலகினிலிலையே. | 36 |
நேரிசைவெண்பா இலையணையன் போதணைய னீரிருகோட் டும்பன் மலையணைய வூர்வோன் மலர்தூஉய்-நிலையணைந்தார் அன்மனக்கா வார்துறைசை யண்ண றுதியாத வன்மனக்கா வானோ வட. | 37 |
கட்டளைக்கலித்துறை வடத்தை யணிகரன் வந்தனை செய்குவன் வந்தெனைப்பூ இடத்தையன் மாலரி யேத்தி மலர்கொடு வெம்பவத்தைக் கடத்தைய வென்றுபன் னாளுந் தொழுந்துறை சைக்கரசன் இடத்தைய னித்தவன் பொற்கழல் லென்ற னிதயத்தவே. | 38 |
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் இதையச்செறுத்தன்னிலின்பநீர்தேக்கியே யேதறமறுசிவதீக்கையாம் இதைகொண்டுதொளிசெய்துநன்மொழியெருத்தூவி யெழிலுற்றபஞ்சாக்கர விதையிட்டுகாமாதிகளைகட்டுசைவம் விளைத்துறைசைப்பதிசெயும் இதையெட்டுவிழிவேதன்முதறொட்டவிமையோர்க ளிமையோரைமறவார்களே. | 39 |
நிலைமண்டிலவாசிரியப்பா மறவேன்கனவிலு மலரடிப்போதினை நறவார்கொன்றையு நதிமதிமிலச்சினை அழலுருவேற்றனை பழமலைகாத்தனை ஆடலுவந்தனை கூடல்புகுந்தனை பூபாலனாயினை கோபாலனாயினை நாயகமாயினை தாயகமாயினை கயிலைச்சயிலமார் கண்ணுதலொருவ கயிலைக்கனியெனக் கண்ணுறமறைபொருள் தெரித்திடப்பரம தேசிகமூர்த்தமாத் தரித்தனைதுறைசையிற் றவர்க்கருடந்தனை அடியேன்மலக்கனலவிந்திடவதிந்தனை முடியினிற்றிருவடி முனிவரச்சூட்டினை சேயனாத்திரிந்துழ றீயனைச்சீரடிச் சேயனாக்கொண்டனை திருவுளமகிழ்ந்தே மருவாவென்றனை மார்ச்சாலநியாயமாய் மருவார்கழற்றுணை மகிழ்ந்தளித்தாண்டனை மூனர்புகழ்ந்திடு முதுமொழிகொண்டநீ பாவலர்போலியேன் பரவையுங்கைக்கொள்வாய் அம்பலவாணனடி மலர்வாழுக செம்பொற்சிகரத் தினகரம்வாழுக சுப்பிரமண்ணிய தூயதேசிகனடி செப்பிடுமென்முடி வாழுகசிறந்தே | 40 |