கருமங்கையாரமருமத்தரேத்துசெங்காந்தளைநி கருமங்கையாரமருமத்தர்வாழ்கச்சிபோலவெப்பாங் கருமங்கையாரமருமத்தர்வாய்மைகதிர்ப்பச்சென்ற கருமங்கையாரமருமத்தமுங்கடந்தெய்தலென்றே. | 1 |
என்பங்கம்பங்கம்படச்சூழெனிலெங்குஞ்செல்சரணுக் கென்பங்கம்பங்கம்பதித்தபிரான்கச்சியெய்துவம்வா வென்பங்கம்பங்கம்பிகையுறச்சேர்த்தவனெம்பெருமா னென்பங்கம்பங்கம்பியாவண்ணமேத்துவமேழைநெஞ்சே. | 2 |
சேகரந்தோயமுடித்தோயிருள்சிந்தையார்க்கப்பரி சேகரந்தோயமலாகச்சியேகம்பசேரலர்நஞ் சேகரந்தோயனலாவென்றுசிந்தை செய்யாதமலச் சேகரந்தோயமனாள்வருங்காலையென்செய்குவரே. | 3 |
குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன் குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய் குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே. | 4 |
கைக்கடக்கும்பக்களிறாமைவாயிலுங்கைவசஞ்செய் கைக்க்கடக்கும்பக்கமேகவொட்டாதெமர்காள்பொன்னுல கைக்கடக்கும்பக்கபூஞ்சினைமாவுறைகம்பன்வெண்ண கைக்கடக்கும்பக்கதிர்முலைபாகனைக்கண்ணுமினே. | 5 |
மின்னலங்காரம்புபெய்யாதுறமிக்கிராசிகடம் மின்னலங்காரகனிற்பினுமென்மின்னனார்குமின்கு மின்னலங்காரம்பெறநடஞ்செய்வியன்கச்சியைச்சேர் மின்னலங்காரப்பணியான்கம்பந்தொழுவீரன்பரே. | 6 |
அன்பரவைக்களஞ்செல்லேன்கம்பம்பணியாதபுலை யன்பரவைக்களந்தீமழுவோயென்றரற்றித்துழா யன்பரவைக்களந்தன்புசெய்யேன்மெய்யறிவுகுறி யன்பரவைக்களங்கத்தேனெவ்வாறருள்கூடுவதே. | 7 |
தேங்கடியாரரவார்சடையார்திருக்கம்பந்தொழு தேங்கடியாரரவந்திகழ்காஞ்சியிற்சென்றுசிவந் தேங்கடியாரரவோசைசெவிமடுத்தேமினிமுந் தேங்கடியாரரந்தைப்படுங்கும்பியிற்செல்வழிக்கே. | 8 |
கேதனக்கேதனமன்வரிலச்சங்கெடுத்தருள்சங் கேதனக்கேதனவல்லார்மதிகெடக்கட்டியரைக் கேதனக்கேதனமாமுமைபாற்கிளர்வோன்கச்சிநி கேதனக்கேதனவானான்கம்பந்தொழக்கேடிலையே. ) | 9 |
கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன் கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக் கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங் கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே. | 10 |
திகழுமலத்தகத்தாளாடொழக்கம்பஞ்சேர்ந்துறைசோ திகழுமலத்தகப்பட்டுழல்குண்டரைச்சேர்ந்திடுமூர்த் திகழுமலத்தகத்தெங்கோன்றன்கோன்சிவஞானமளித் திகழுமலத்தகட்டாள்வாயென்பார்க்கருள்செய்திடுமே. | 11 |
செய்யவையம்புயம்வைத்தாளும்வேந்தர்திருவுங்கைப்பச் செய்யவையம்புயமன்போலுநோக்கியர்தீமையறச் செய்யவையம்புயமார்கச்சியேகம்பஞ்சென்றுபத்தி செய்யவையம்புயனேர்களத்தாயெங்கள்சிற்பரனே. | 12 |
பரவாதவந்தனையன்போல்வளர்த்துப்படித்துளறும் பரவாதவந்தனையந்தோவிடேனினிப்பார்வெறுந்தா பரவாதவந்தனைசெய்யடியார்தம்பணிசெயென்றம் பரவாதவந்தனையீந்தனையேபழங்கம்பத்தனே. | 13 |
பத்திக்கணங்கணமாநின்றுபோற்றும்பழவடியார் பத்திக்கணங்கணவேகம்பத்தாய்பத்துமுற்றுகருப் பத்திக்கணங்கணங்கெய்தலென்றன்னைபண்பாகியென்னா பத்திக்கணங்கணபாதவிர்த்தாண்டருள்பாலிப்பையே. | 14 |
பாலிக்குமரிக்குந்தாணிழல்வெப்பம்பணிமொழியாற் பாலிக்குமரிக்குமாறுசெய்வார்படிந்தாடிடத்தன் பாலிக்குமரிக்குடிஞைக்குமெய்தரும்பாக்கியங்கொள் பாலிக்குமரிக்குவாழ்வானகச்சிப்பதிக்கம்பனே | 15 |
பதிகம்பரம்பரர்காவதுகாஞ்சிபணிபணியென் பதிகம்பரம்பரசாயுதமாம்பத்திசெய்பவரேற் பதிகம்பரம்பரவுந்தொடைமூவர்பகர்ந்தருளும் பதிகம்பரம்பரமானந்தமேயுருப்பார்ப்பவர்க்கே | 16 |
பவனனகன்றலைவன்காஞ்சிவாழ்பழங்கம்பமெனும் பவன்னகன்றலைஞாலமெலாந்தொழப்பட்டகடம் பவன்னகன்றலைவற்றநெஞ்சோர்வினைப்பஞ்சினுக்கின் பவன்னகன்றலைமாலையனென்றென்றுபாடுதுமே. | 17 |
பாடலம்போதுநிறைசிவகங்கைபடிந்துநித்தம் பாடலம்போதுதொறுமீசன்கம்பன்பரனெனும்வாய் பாடலம்போதுகுழல்விழிநாலெண்பகுப்பும்வளர்ப் பாடலம்போகுதுமென்னேமெவ்வாறருள்பற்றுதுமே. | 18 |
மேதகரக்கருந்தேவரும்யாவரும்வேட்கும்பரி மேதகரக்கருமன்பருள்வாய்வெண்டாளம்பொன்கோ மேதகரக்கருந்துன்றியகாஞ்சியின் மிக்ககம்ப மேதகரக்கருங்கூந்தலுநீயும்விரும்பினையே. | 19 |
9
விரும்பாவலருடம்பாய்மங்கைமார்கொங்கைமெல்லிதழ்க்க விரும்பாவலருடங்கும்படிகேண்மனமேயச்சந்த விரும்பாவலருடனார்த்தழைவேயந்தவமெய்யறிவ விரும்பாவலருடங்கேத்துகம்பாவென்றுவேண்டுவையே. | 20 |
வையம்பணிசிலைவேதற்குன்பாலினிவாழியென்றான் வையம்பணிசிலைதென்காஞ்சிகாற்றனன்மாலென்பறம் வையம்பணிசிலைவாழிடமீர்க்குவட்காரைவெல்லும் வையம்பணிசிலையேறாகக்கொண்டுவளர்கம்பனே | 21 |
கம்பரந்தாதிநிலம்வலென்றாதிகளங்கண்முகங் கம்பரந்தாதியைகஞ்சமன்னாள்பங்கனேமுத்தியே கம்பரந்தாதிருப்பூங்கொன்றையோடென்புங்கட்டியென்சொற் கம்பரந்தாதியுங்கைக்கொண்டவாகச்சிகாவலனே. | 22 |
வலங்கொடியானத்தன்பாளர்கள்சூழ்செந்தின்மாநகர்ச்சே வலங்கொடியானத்தனாங்காமக்கோட்டிமணாளனைநா வலங்கொடியானத்தன்போலானென்றேத்தல்செய்வாமினிக்க வலங்கொடியானத்தன்மன்வாதனையைமருவலமே. | 23 |
வலமாயக்கண்டகரளவென்றேத்திடின்வல்வினைய வலமாயக்கண்டகத்தேகுடிகொண்டுமநக்களைய வலமாயக்கண்டகத்தான்பானுவாநின்றுவாழ்வித்திடும் வலமாயக்கண்டகரூரெரித்தேகம்பம்வாழ்முதலே. | 24 |
முதலையையாவிகரந்திபங்காத்தவன்மொய்மலர்த்தாண் முதலையையாவிகவானஞ்சுமாடிமுழுமலர்விம் முதலையையாவிகமழ்கஞ்சனாடவுமுற்படுமம் முதலையையாவிகலனையென்னாண்டமுறைகம்பனே. | 25 |
பன்னந்தனவனமாக்கேங்கம்பன்பழையோனெனும்பேர் பன்னந்தனவனப்பிற்கழிவேம்பசுந்தாமரையின் பன்னந்தனவனம்போற்பற்றறேமெப்படிகொல்வெள்ளி பன்னந்தனவனம்போதனெய்தாப்பதஞ்சார்வதுவே. | 26 |
சாறுவதீர்த்தநறுநீரிலேகம்பர்தாமுலவுஞ் சாறுவதீர்த்தனென்றேத்திடுமேதியைத்தண்கருப்பஞ் சாறுவதீர்த்தலைக்குங்காஞ்சிகாசிகமலைதண்கஞ் சாறுவதீர்த்தவொப்பின்பெயர்நீங்கிடச்சார்மனமே. | 27 |
மனவகங்கைக்கனத்தானனற்போற்றிமறுக்கவெய்யா மனவகங்கைக்கனற்காரற்குமைக்குமகவைத்தொழ மனவகங்கைக்கனக்கோனன்பர்தாடொழவைத்திகம்ப மனவகங்கைக்கனத்தார்முத்தஞ்சேர்கச்சிவானவனே. | 28 |
வானங்கனைகடலாய்ப்பரந்தான்வன்கரிகரக்க வானங்கனைகடவாநடஞ்செய்கச்சிவாணன்பொன்னேர் வானங்கனைகடமாவுரியான்கம்பமாவடிவாழ் வானங்கனைகடனீதெனக்காட்டிவந்தாண்டனனே. | 29 |
ஆண்டவனாரணன்கம்பனென்றேத்தவயன்சுரர்பல் லாண்டவனாரணனோடடியேனுமணைந்திடிற்பே ராண்டவனாரணந்தீசன்கணங்களிவ்வாலயத்து ளாண்டவனாரணவுற்றானென்னாதுள்ளழைத்தருளே. | 30 |
உள்ளலைவாளைதலைப்படுமோடையுடுத்தகச்சி யுள்ளலைவாளைநன்னீலஞ்செங்காசுமிழ்கம்பத்தனே யுள்ளலைவாளையரிக்கண்ணிகாமனுகுக்குமம்புக் குள்ளலைவாளையதார்க்கொன்றையீந்தவளுய்வண்ணமே. | 31 |
வண்ணஞ்சிவந்தவரேகம்பர்க்கார்மொழிவார்மறையின் வண்ணஞ்சிவந்தவமானார்பிரான்முடிவாழ்மதிக்க வண்ணஞ்சிவந்தவமேயீரவாடிநன்மாமைசெடும் வண்ணஞ்சிவந்தவநங்கனுக்கேங்கிவருந்துவதே. | 32 |
வருந்தலைவாமனனேமதன்சாபம்வணக்கியெய்ய வருந்தலைவாமனனேயயனேமற்றைவானவர்யா வருந்தலைவாமனனேகம்பனென்னுமெம்மான்கரந்தை வருந்தலைவாமனனேகனுதற்கணைவாழ்த்துதியே. | 33 |
துதிகானனந்தலையேகம்பவாழ்வையந்தோமிக்கிரந் துதிகானனந்தலைமூன்றாளரைத்தொழுந்தேவெனவாழ்த் துதிகானனந்தலைநீர்த்தடந்தீத்தன்மைசூளையருந் துதிகானனந்தலையாம்பதியென்றெண்ணிச்சூழ்மன்னே. | 34 |
மனமாலையாற்றவலைகடல்வீரமடியநல மனமாலையாற்றனலியத்தருமன்மதன்மதச மனமாலையாற்றண்ணளிசுரந்தாள்கச்சிமாநகர்க்கு மனமாலையாற்றவனேகம்பமேவியவான்பொருளே. | 35 |
பொருந்தங்குமரிக்குறும்பற்றிருவர்புகழ்சிவந்தாய் பொருந்தங்குமரிக்குமுள்ளேவினையென்றுபோய்க்கம்பமே பொருந்தங்குமரிக்குங்காறுமமர்பொன்னிசானவிதண் பொருந்தங்குமரிக்குமேலாங்கம்பைப்புனலாடுநெஞ்சே. | 36 |
சேயரியம்பகமானேபொருள்வயிற்சென்றவர்தாஞ் சேயரியம்பகவார்த்திடுங்கார்வரிற்செய்வதென்னாஞ் சேயரியம்பகவற்கீங்கெனாச்சிறுத்தொண்டர்தந்தஞ் சேயரியம்பகம்பாவென்றென்றேத்துந்திறனல்லதே. | 37 |
அல்லாக்குமாரணங்குற்றுயிர்த்தேங்குமருள்பொறைதை யல்லாக்குமாரனன்னாரருளாரென்னுமம்பகலை யல்லாக்குமாரமடர்கச்சிக்கம்பரருட்குரிய னல்லாக்குமாரனையீன்பயனீதென்னுமாயிழையே. | 38 |
ஆயாதிருக்கச்சியேகம்பநின்னடியார்க்கடியே னாயாதிருக்கச்சிவமென்பதென்றதையாய்ந்துமற்றொன் றாயாதிருக்கச்சிதானந்தமாயமர்வண்ணமளி யாயாதிருக்கச்சிதுநீத்தறிவுருவாந்திருவே. | 39 |
திருக்காமக்கோட்டமுதல்விபங்காண்டருள்செல்வன்வினை திருக்காமக்கோட்டமமாற்றிடுங்கம்பன்றிருந்தெழின்மு திருக்காமக்கோட்டகளித்தானென்றேத்திநந்தீவினைப்பி திருக்காமக்கோட்டமுறும்பாம்பரைக்கசைதேவனையே. | 40 |
வசனத்தவன்புரவாளனவன்மதியம்பசிய வசனத்தவன்புரவிப்பகலோனவன்மன்னுசத்த வசனத்தவன்புரம்வென்றோனவனவனேநலஞ்சு வசனத்தவன்புரவோர்வாழ்கலிக்கச்சிவாழ்கம்பனே. | 41 |
கங்கணம்பன்னகஞ்சாந்தமுநீறுகருதொருபா கங்கணம்பன்னகருங்குழன்மேனிகழுதுகழ கங்கணம்பன்னகமேகம்பமன்பரகங்கள்சிரங் கங்கணம்பன்னகவில்லானுக்கோதக்கடவனவே. | 42 |
கடவாதவன்பருவராதவன்பரகந்தொறுஞ்சங் கடவாதவன்பருவராவினையிருட்கார்க்குவன்றேர் கடவாதவன்பருவராலுகள்கம்பைக்கம்பனலங் கடவாதவன்பருவராதளித்தெனைக்காத்தனனே. | 43 |
தனம்பொடியாதுமுளையாதெயிறிந்தத்தையல்கம்பத் தனம்பொடியாதும்வளராப்பிறைமுடித்தானுக்கென்பா தனம்பொடியாதுதைசாந்தமெனுங்கொன்றைதந்திடின்ம தனம்பொடியாதுதையாதென்னுமென்கட்டனித்துவந்தே. | 44 |
வந்தனையாவதுஞ்செய்தறியாமனமேமறலி வந்தனையாவதுபார்நரகென்னுமுன்வாய்த்திடுத வந்தனையாவதுசெய்தார்க்கருண்மயிலூரருட்ப வந்தனையாவதுலாகம்பனேயென்றுவாழ்த்துவையே. | 45 |
வைகாத்திருப்பதிநாள்கோள்வழங்குங்கதிகளென்ற வைகாத்திருப்பதிகைப்பதிகாசிதன்மார்பமன்றி வைகாத்திருப்பதிமாற்பேறுமுன்வரைப்பாயினுஞ்செய் வைகாத்திருப்பதியான்கச்சியேகம்பமாவடியே. | 46 |
மாவடிவாயவதாரஞ்செயேகம்பவாணர்கெடு மாவடிவாயவம்பிஞ்சியிலேவியமன்னர்புள்ளு மாவடிவாயவர்காணாதஞானவரோதயர்த மாவடிவாயவந்தீர்சிந்தையாரெம்மையாள்பவரே. | 47 |
ஆனந்தவெள்ளம்புயத்தாள்பணிகம்பவாணவத்தீ யானந்தவெள்ளமலவுடற்பாரமறிவுமிகை யானந்தவெள்ளவதியேனுங்கன்மமடாதுருப்பட் டானந்தவெள்ளந்துளைந்தாடவைத்தியருமணியே. | 48 |
மணிகண்டவாதிரைநாளானரன்கம்பவாணனென்கண் மணிகண்டவாதினிதாள்வோன்றனைப்புத்தர்வாமிகள மணிகண்டவாதியைவென்றுண்மைதேர்மன்வியாகரண மணிகண்டவாதிவிபுதர்கணாடொறும்வாழ்த்துமினே. | 49 |
வாராரிடைமருமான்றொழவேகம்பமன்னிவளர் வாராரிடைமருதூரார்தமதன்பர்மாரருங்கொல் வாராரிடைமருவிப்புகல்வேனிவ்வருத்தமந்தோ வாராரிடைமருளப்பணைபூண்முலைமாதரசே. | 50 |
மாதேவனீசர்மொழியாற்சிறுதெய்வம்வந்தித்துவிம் மாதேவனீசர்சதுர்வேதங்கடாமன்னுதற்புருடன் மாதேவனீசனெனவுரியானவனன்பர்கட மாதேவனீசலியாதுசெய்யேகம்பவைப்பிற்சென்றே. | 51 |
வைப்பதுமத்தமுடிமீதுநாடகவர்க்கமெண்சு வைப்பதுமத்தகமேலதுநாட்டமருவுகம்பம் வைப்பதுமத்தமறுப்பதுபார்வையப்பாகன்வெண்பா வைப்பதுமத்தனென்றாலென்னையோநங்கைமால்கொள்வதே. | 52 |
மாலையடியடிகேண்முனந்தேடவைத்தாய்சமனா மாலையடியடியென்னாமற்காத்துவளந்தருபா மாலையடியடிதோறுஞ்சுவைபெறப்பாடமையின் மாலையடியடியோங்கட்கருள்கச்சிவாழ்கம்பனே. | 53 |
வாதங்கமண்டலநீரழலாய்க்கம்பமன்னிநின்ற வாதங்கமண்டலம்பாயுறிபோய்வன்கழுப்பொருந்த வாதங்கமண்டலத்தார்செய்யவென்றவர்வாழ்த்துமத்தா வாதங்கமண்டலமூன்றுங்கடந்தென்மனத்தகத்தே. | 54 |
அகத்தியனாரதன்பூவிற்குநாசியரிந்திடுசெய் யகத்தியனாரதவத்தியென்னாதறுத்தான்முதலோ ரகத்தியனாரதனாற்றொழுங்கம்பரறிவிற்செம்போ தகத்தியனாரதமர்க்கொளித்தேமன்றிலாடுவரே. | 55 |
ஆடானையம்பலமேயானைக்கம்பனையன்பிலர்பா லாடானையம்பலமீவானைக்கண்டனளாகிமங்கை யாடானையம்பலகொண்டுசென்றாளங்ஙனேநெகிழ்ந்த தாடானையம்பலந்தோவெங்குமாயதலர்த்திருவே. | 56 |
திருமேற்றளிவளர்கம்பன்பனியுந்திண்கோடையுங்கூ திருமேற்றளியுடன்செய்தவத்தோர்க்கிறைசீரெழின்மு திருமேற்றளிமுரல்கொன்றையன்றாள்சிந்தியார்சமன திருமேற்றளிவிடவேறேதுறுதிதிருந்துவரே. | 57 |
திருவோணகாந்தன்றளிவளரேகம்பன்சீர்க்கருக திருவோணகாந்தன்றன்கோன்வரைப்பாற்சென்றியான்முன்கண்ட திருவோணகாந்தனிபேசாமெனுந்திண்விரதத்தின்மு திருவோணகாந்தம்பிறிதொன்றொவ்வாணண்பிற்சீரியனே. | 58 |
அனேகதங்காவதமப்புகழக்கம்பவறுத்தருள்வா யனேகதங்காவதம்பற்பலவோடியலைந்துவறி யனேகதங்காவதன்பால்வரைப்பாற்றவமாற்றிக்கச்சி யனேகதங்காவதனேயலையாவகைநன்னெறியே. | 59 |
நெறிக்காரைக்காட்டுகுழலார்பின்சென்றுநிற்பீருயிர்போ நெறிக்காரைக்காட்டுவிர்கம்பனுக்காலையினேர்ந்தநெறு நெறிக்காரைக்காட்டுப்பள்ளிக்கோவுக்கன்புநிகழ்த்திக்கச்சி நெறிக்காரைக்காட்டுச்செல்லீர்துனையாவருநீர்மையரே. | 60 |
மையானப்பதிவளர்கச்சிப்பிரான்வருமேறெனுந்தன் மையானப்பதியினையூர்ந்தருளேகம்பவாணனிள மையானப்பதிநன்னிலாநீந்துவேணிமௌலியன்க மையானப்பதினைந்துமூவேழுநீக்கவரந்தருமே. | 61 |
தருமந்தரதமந்தேர்கல்விவேட்டுத்தரையினுருத் தருமந்தரதமங்கெய்தர்ரெனுஞ்சொற்றனைக்கம்பம்வாழ் தருமந்தரதமர்க்கெட்டார்வரைதனிற்கைபுயமாந் தருமந்தரதமக்கூந்தற்குநீசென்றுசாற்றுகவே. | 62 |
கவளக்கரியன்றுவேன்றாரன்பாற்சொன்னகட்டுரைக்காங் கவளக்கரியன்றுகொல்லாமித்தெய்வங்கனையிருளாங் கவளக்கரியன்றுதந்தநஞ்சுண்டிருள்கண்டனொன்றா கவளக்கரியன்றுறைசூழ்கம்பன்வரைக்காரிகையே. | 63 |
காரியங்காரணமாம்பஞ்சபூதக்கலப்பின்மயங் காரியங்காரணங்கெய்தாவகையருள்காட்டுமவி காரியங்காரணஞ்சூழ்கம்பனூரல்லுங்காய்பகலுங் காரியங்காரணவோசையைக்காட்டுங்கலிக்கச்சியே. | 64 |
கச்சித்தெருவில்வந்தார்நெகிழ்த்தாரென்களபமுலைக் கச்சித்தெருளினர்யாவரென்பேற்குக்கல்லாலமர்யோ கச்சித்தெருதினையூருஞ்செயுங்கன்னல்கல்லிபந்துய்க் கச்சித்தெருவையுறுஞ்சூலமேந்திடுங்காணென்பரே. (65) | 65 |
பராரைவரைவரைபோல்வளைக்குங்கம்பரைத்திருவம் பராரைவரைவரையோவறியார்பன்னெடுங்கணக்கும் பராரைவரைவரையத்தெரியார்படித்தோரிற்செம்மாப் பராரைவரைவரையிட்டொழிப்பாரவ்விதண்டையர்க்கே. | 66 |
தண்டகநாடகமாடுமெந்தாய்தண்குறங்கரம்பைத் தண்டகநாடகலல்குல்பங்காபொற்றடவரைக்கோ தண்டகநாடகராதிமண்காற்றங்கித்தண்புனலாந் தண்டகநாடகம்வாழ்கம்பனேநின்சரண்சரணே. | 67 |
சரமைந்தனங்கனொருங்கேவுமுன்கொன்றைதந்திருட்குஞ் சரமைந்தனங்கண்மெலியச்செய்யார்பொய்மைசாற்றுபரா சரமைந்தனங்கணபோற்றியென்றேத்தக்கைதந்தருளீ சரமைந்தனங்கண்மகிழ்கம்பைசூழ்கம்பஞ்சார்ந்தவரே. | 68 |
தவந்தானங்காலந்தொறுமறவார்தங்குகச்சியினெய் தவந்தானங்காலன்றிறல்வாட்டுகம்பன்றன்வெற்பினர்கை தவந்தானங்காலந்தருமென்செய்கேன்சந்தக்குன்றினும்வந் தவந்தானங்காலன்பிலாமதன்றானும்வருத்துவனே. | 69 |
வரகந்தமாதனவாழ்வோருணற்குமற்றின்பம்விற்ப வரகந்தமாதனமாயதென்னேகம்பர்மைந்தமெய்த்த வரகந்தமாதனவள்ளிகொண்காவென்றுவாழ்த்தவருள் வரகந்தமாதனவெற்பாளர்போலுநம்மன்னவர்க்கே. | 70 |
மன்னாதபோதனர்வாழ்கம்பவாணநின்வான்கருணை மன்னாதபோதனகாபுகலேதென்முன்வந்துதரு மன்னாதபோதனதாநரகாரவருந்துகென்னா மன்னாதபோதனரியறியாதமெய்வாழ்வருளே. | 71 |
வாவிக்கமலத்தடவாளைமாங்கனிவாய்கிழித்து வாவிக்கமலச்சுரைதேக்கிநீந்தும்வண்கச்சிக்கம்பா வாவிக்கமலக்குநாச்செற்றுக்காலன்வந்தெய்துமுன்ன வாவிக்கமலத்துணைத்தாடந்தாட்கொளவல்விரைந்தே. | 72 |
வல்லியங்கோட்டுமலைதிரிகானிருள்வாய்வருவான் வல்லியங்கோட்டுவில்லார்மொழிவார்மலையீன்றமுலை வல்லியங்கோட்டுநன்னீர்க்கம்பைவாய்த்தழுவக்குழைந்தார் வல்லியங்கோட்டுடனார்த்தெழுமேகம்பம்வாழ்வரைக்கே. | 73 |
வரையும்வரையுமுள்வாடாதிருந்ததடியவர்யா வரையும்வரையுமவ்வேட்டன்பர்பார்த்திவனாரிவனை வரையும்வரையுமென்னாதெனைச்சேர்த்துவரையுங்கம்பர் வரையும்வரையுந்திடமுமுள்ளார்தந்தமாந்தழையே. | 74 |
மாந்தருமங்கலவாவிடமாந்தியவ்வானவரு மாந்தருமங்கலரிட்டேத்தவாழ்கம்பவாணனொற்றை மாந்தருமங்கலவைப்பாக்கொண்டானடிவாழ்த்துபுவிம் மாந்தருமங்கலமாகக்கொள்ளாம்வம்பின்மாழ்குதுமே. ) | 75 |
மாவலியேவலையாப்பகைமீன்களைமாட்டிமண்மேன் மாவலியேவலைமாற்றினன்றாழ்கம்பமஞ்சுளரோ மாவலியேவலைநோக்கிபங்காமகன்பெண்ணெனுநா மாவலியேவலையேகொடியேன்வினைமாய்த்திடவே. | 76 |
வேதனைவாய்ப்பணிவுற்றவமேமெலிவேனுமுற வேதனைவாய்ப்பணியார்கம்பத்தேவெளிநின்றுவிண்டு வேதனைவாய்ப்பணிசெய்துமெட்டாதெங்குமேவுசம வேதனைவாய்ப்பணீயான்றடுத்தாண்டனன்மேதகவே. | 77 |
தகரங்கந்திக்குங்குழலாயினியுயிர்தாங்கெனுஞ்சொற் றகரங்கந்திக்குமருள்வாரலர்தபனன்றனைச்சேந் தகரங்கந்திக்குமுகனைக்கொய்கம்பர்தடவரைப்போ தகரங்கந்திக்குமரம்போற்கொல்யானைத்தனிமன்னரே. | 78 |
தனித்தனமேயன்பர்க்காகிநின்றோன்றமிழ்க்கச்சிக்கம்பத் தனித்தனமேயன்பராசத்திபூசனைகொண்டபுனி தனித்தனமேயபசப்பொழியான்மற்றொர்சார்புமில்லேந் தனித்தனமேயனமேயினியேதுய்யத்தக்கதுவே. | 79 |
வேதாகமங்கலைகற்றதனான்முத்திவேட்பதறி வேதாகமங்கலைநீர்போக்குமேவியன்பத்திவிளை வேதாகமங்கலைமாமதிவேய்ந்தவெண்ணிற்றொளிச்சு வேதாகமங்கலையாத்திசைகொண்டமெய்யேகம்பனே. | 80 |
ஏகம்பத்தானையரிதிசையூர்புகழேறுகச்சி யேகம்பத்தானையுரிபோர்வைவாழிடஞ்சூதமதா மேகம்பத்தானையுகைத்தடியார்க்கெளிவந்தருளு மேகம்பத்தானையரிக்கண்ணிபாகனுக்கென்பர்களே. | 81 |
பரம்பரமானந்தவாதவர்சூழ்கம்பனேயிம்பரும் பரம்பரமானந்தமாநிறைந்தோய்பசுஞ்சாபக்கரும் பரம்பரமானந்தமொத்தகண்ணார்திறம்பாறவெங்கும் பரம்பரமானந்தமுத்திதந்தாண்டருள்பாலிப்பையே. | 82 |
பாலனஞ்செய்துதவார்கொன்றைமாலைதண்பாசடைமேற், பாவனஞ்செய்துறுதென்கச்சியேகம்பர்பானுவுமேற்,பாலனஞ் செய்துதல்போலெய்துமாலையின்பைந்துளவோன், பாலனஞ் செய்துகொல்வானென்றென்றேங்குமென்பான்மொழியே. | 83 |
பாதகமஞ்சனவெற்பாகவீட்டுநற்பண்புவிரும் பாதகமஞ்சனமாட்டாதுகைபன்னுநாப்புகழ்செப் பாதகமஞ்சனகண்டாகம்பாபன்றிநாடரிய பாதகமஞ்சனமின்னமுங்காணரும்பண்ணவனே. | 84 |
வனப்புண்டரிகமுகத்தார்தமுற்பலமாமலரின் வனப்புண்டரிகவர்கண்விரும்பேல்வணங்காயுரைசெய் வனப்புண்டரிகலவாமலருண்டுவண்கம்பமுண்டு வனப்புண்டரிகவுரியானுண்டேமனம்வாய்கையுண்டே. | 85 |
கைத்தாயினையகன்றாயமும்யானுங்கவலமறு கைத்தாயினையவருகாலன்போலுமோர்சண்டகன்றன் கைத்தாயினையவென்கண்மணியேகக்கடவியெனைக் கைத்தாயினையநற்கம்பந்தொழாரிற்கடுந்தெய்வமே. | 86 |
கடமாதங்கம்பப்பிரானைச்சிவநிசிக்கண்வணங்கிற் கடமாதங்கம்பற்பலசூழவாழ்ந்தங்குங்கஞ்சர்கண்ணர் கடமாதங்கம்பணியாப்பூண்டுவைகிப்பின்கார்மலச்சங் கடமாதங்கப்பற்றறப்போய்க்கலப்பர்திருவடியே. | 87 |
திருக்கோவையாரணனைப்படைத்தேகம்பத்தேமகிழ்வோய் திருக்கோவையாருளத்தோரன்பர்கூறிடச்சிற்றம்பலத் திருக்கோவையார்கரத்தால்வரைந்தாண்டசெல்வாவருள்கூ திருக்கோவையார்படைவேட்கோவின்றாற்றுமென்சேல்விழியே. | 88 |
விழுமந்தவாதவர்சார்பேநயந்துவிவேகங்கள விழுமந்தவாதவவேனோர்மதங்களைமேற்கொண்டங்கண் விழுமந்தவாதவமென்றுமைகாட்டிவிளக்கினைநல் விழுமந்தவாதவர்வெற்பாகம்பாவென்விளம்புவனே. | 89 |
புவனம்பவனங்கமண்ணழலாவன்புள்ளூர்களர்காம் புவனம்பவனங்களாவமர்வோன்வினைபொய்மலந்த புவனம்பவனங்கணன்கம்பனென்றென்றுபோற்றிவிரும் புவனம்பவனங்கனத்தனென்றேகொண்டபோதனையே. | 90 |
போதுமினையம்பரேநடவாதிங்கும்பூம்பகழிப் பொதுமினையம்பரத்தைப்பொருமிடையார்வசையும் போதுமினையம்பரிகம்பர்தார்புரிந்தாரினியோர் போதுமினையம்பரவையின்வீரமும்பொன்றுகவே. | 91 |
கவலைக்கரும்பரவப்பூம்பகழிக்குங்கன்னியர்நோக் கவலைக்கரும்பரவேர்நகையல்குலுக்காசைகொண்டு கவலைக்கரும்பரவைக்குள்விழாதுகருணைபெரு கவலைக்கரும்பரமானந்தமீந்தனன்கம்பத்தனே. | 92 |
கம்பாகம்பாநதிப்பாற்பூசைசெய்கவுரிக்கருணோக் கம்பாகம்பாலித்தகோவேமகளிர்கடிதடநா கம்பாகம்பாமொழிகண்களென்னாதுன்கழலைமுறுக் கம்பாகம்பாகமுறுந்தமிழ்பாடுங்கடன்பணியே. | 93 |
பணியாதனந்தம் பரிசடியாரெதிர்ப்பட்டிடிற்செய் பணியாதனந்தன் புகழநிற்பீரென்றுபாடிப்புத்தி பணியாதனந்தந்து பசரியாதுகம்பாவரவப் பணியாதனந்தஞ்ச மென்றழிவேனெப்படியுய்வனே. | 94 |
திருத்தங்குமாமுல்லைவாயிற்பிரானிருசேவடிநீர்த் திருத்தங்குமார்க்கத்திற்செல்லாமலாடப்பெற்றேமினிமால் திருத்தங்குமாரனென்றோதிப்பிறரைப்பின்சென்றுநின்று திருத்தங்குமாதுமுனிந்தாலுநைந்துளந்தேம்பிலமே. | 1 |
தேங்கொன்றையாரணவுஞ்சடைவாழ்வைத்திசையனைத்துந் தேங்கொன்றையாரணவல்லாரெமைச்சினஞ்செய்துபொறி தாங்கொன்றையாரணஞ்செய்யாதுமுல்லைத்தலத்திறைவா தாங்கொன்றையாரணவென்றிரந்தேத்துந்தவம்பெறினே. | 2 |
தவலரும்பல்கலைதேர்முல்லைவாயிற்சயிலவில்லார் சுவலரும்பல்கலைதந்திடக்கொண்டவர்தூயமதி நுவலரும்பல்கலைநீர்முடியாரைநுவன்றறியா வவலரும்பல்கலைவேண்டியென்வீணிலலைவதுவே. | 3 |
அலைவனமந்தரங்காற்றங்கிமண்ணெனுமைந்துமல்லாத் திலைவனமந்தரங்கத்தானமாத்திருமுல்லையின்வாழ் தலைவனமந்தரங்காட்டுநஞ்சுண்டுதருவிசும்பிற் கலைவனமந்தரங்காப்பினைமாற்றுங்கருணையென்னே. | 4 |
கருமமலங்கொடுமாயையுநீக்கிக்கதிர்த்துவரா றருமமலங்கொடுபாய்தடஞ்சூழ்முல்லைதன்னிலொன்னார் மருமமலங்கொடுசெற்றோன்பரசவரும்பெருமா னருமமலங்கொடுமாமாசிலாமணியாண்டகையே. | 5 |
கைதவநாடகங்காட்டியறிவைக்கமரகத்தே பெய்தவநாடகவாக்கழித்தாய்புகழ்பெற்றதொண்டைச் செய்தவநாடகமுல்லைப்பிரான்பதஞ்சிந்தைசெய்தே கைதவநாடகமேயெங்குளானெங்கணம்பனென்றே. | 6 |
எங்கணம்பன்பரசேரடியாரினிணைமலர்த்தா ளங்கணம்பன்பரசேமுல்லையாயருளென்றமரர் தங்கணம்பன்பரசேய்கரத்தான்முல்லைதன்னிறையாஞ் செங்கணம்பன்பரசேதனன்பாதமென்சிந்தையதே. | 7 |
சிந்தைத்திருக்குமரமுங்களவுஞ்செறிந்தவஞ்ச கந்தைத்திருக்குமரநேர்விழியவர்காமங்களு முந்தைத்திருக்குமரன்மாயமுமுடித்தாளுமொரு விந்தைத்திருக்குமரபறியாமுல்லைமெய்ப்பொருளே. | 8 |
பொருப்புக்குழைத்தகரத்தார்வமுல்லைப்புரத்ததியான் கருப்புக்குழைத்தகரத்தார்நகக்கலங்காதருளும் விருப்புக்குழைத்தகரத்தார்மலர்குழன்மெல்லியலா மருப்புக்குழைத்தகரத்தார்தலைமைத்தென்வாழ்முதலே. | 9 |
வாரம்படைத்தகருநீலக்கண்மயில்பாகரயில் வாரம்படைத்தகருவந்தகோன்றொழுமன்னர்செய்யின் வாரம்படைத்தகருவறுப்பார்க்கிடம்வண்டொழில்செய் வாரம்படைத்தகருவாற்குலைசெய்வளமுல்லையே. | 10 |
முல்லைப்பதிகமஞ்சூற்கொண்டல்சூழ்முதுகின்றினும்வாழ் தில்லைப்பதிகமடமார்பன்மூவர்திருத்தமிழின் சொல்லைப்பதிகமலர்த்தொடையன்றன்றுணைமலர்த்தா ளொல்லைப்பதிகமனத்தேயமன்வருமுப்பொழுதே. | 11 |
தேங்கடம்புந்திகழுமலர்ச்சென்னிச்செவ்வேளைப்பெற்றோய் தாங்கடம்புந்திகழுமலக்கோன்றமிழ்சூடியடி யோங்கடம்புந்திகழுமலற்றோங்கவுயர்முல்லையா யாங்கடம்புந்திகழுமலத்தெவ்வறவாணைகொண்டே. | 12 |
கொண்டலங்கண்டருமால்போலுமுல்லைக்குழகர்முன்னாள் விண்டலங்கண்டருமாலுழந்தேங்கவெகுண்டெழுநஞ் சுண்டலங்கண்டருமாபதியார்முடியூடுமதித் துண்டலங்கண்டருமாவாவெனைத்தொண்டுகொண்டனரே. | 13 |
கொண்டானனங்கனஞ்சக்கொடும்பார்வைகுரைகடனஞ் சுண்டானனங்கனம்வாவியுங்காவுமுலாவுமுல்லைக் கண்டானனங்கனகம்புத்திமுத்தியுங்காட்டவஞ்சு பிண்டானனங்கனற்கண்ணொடுவாழும்பெருமையென்னே. | 14 |
பெரும்புங்கவருமகிழ்ந்தேத்துமுல்லைப்பெம்மான்களவே விரும்புங்கவருமதியாளர்நட்பைவிழையும்வெறுந் துரும்புங்கவருமனமிதுதீர்த்தென்றுரிசுளத்தே யரும்புங்கவருமவைகளுமாயவரும்பொருளே. | 15 |
அருவினையேனையெவர்புரப்பாரென்றழுங்கிநெஞ்சே கருவினையேனைகாமின்றித்தென்முல்லைகாவலன்றாண் மருவினையேனைவினைகளுநீங்கினைமாற்றினையிவ் வுருவினையேனையுறுதியினியுனக்கென்குறையே. | 16 |
குறைமதியாதவமாற்றுநர்கேண்மைவெங்கோளர்பொய்ம்மை மறைமதியாதவமாமோபரதமமார்க்கமிந்த மிறைமதியாதவமாதவர்வாழ்முல்லைமேவுமன னிறைமதியாதவமால்விழியாரைநினைநெஞ்சமே. | 17 |
நெஞ்சகங்கோடிமறமேபயின்றுநன்னீர்மையின்றி வஞ்சகங்கோடிசெய்தாலும்பொறுத்தருள்வாயையனே யஞ்சகங்கோடிரிந்தும்பர்குன்றாமலமுதுசெய்த நஞ்சகங்கோடிவளைமுத்தமீன்முல்லைநாயகனே. | 18 |
நாயகங்கைக்கிளைதாந்தெங்கங்காயுறினாயென்செயுந் தூயகங்கைக்கிளைமீனமெல்லாமச்சுவைகொள்ளுமோ தீயகங்கைக்கிளையார்சேர்கிலாமுல்லைத்திண்பதியேந் தாயகங்கைக்கிளையாற்பயன்கோடலத்தன்மையதே. | 19 |
தன்னகராவதுதென்முல்லையேதன்பணிமணிகண் மின்னகராவதுவைப்பெண்கொடியிடைவெள்விடைநஞ் சன்னகராவதுசெற்றதுவாமன்பர் நால்வர்க்கறஞ் சொன்னகராவதுலாவென வேத்துநந்தோன்றலுக்கே. | 20 |
தோன்றற்கரியபொரு ளெளிதேவந்துதோன்றிநற வூன்றற்கரியகுழன்மாதொடு முல்லையுள்ளிருந்து கூன்றற்கரியல்பறியா முடிபுண்மைகூறியென்னை யேன்றற்கரியயனேனோ ரழுக்கறுத்தென்பயனே. | 21 |
என்பதிகந்தனையேந்துங் குடங்கையிறைவனரு ளென்பதிகந்தனைமுல்லையிற் சேர்ந்திலையித்துடக்கா மென்பதிகந்தனையன்புவி பொன்பொருளென்றழிவ தென்பதிகந்தனையைய கொல்லோபுகலேழைநெஞ்சே. | 22 |
சேவடிவானவரேத்தத்திசை முகன்றேர்செலுத்தச் சேவடிவானரிதாங்கப் புரஞ்செற்றதென்முல்லையாய் சேவடிவானரமேவுங் கயிலைச்சிலம்பினர் சேவடிவானறுந்தீந்தமிழ் பாடவுஞ்செய்தருளே. | 23 |
அருளாதரித்திரந்தன்பு செய்வேங்கட்கமருலகோர் பொருளாதரித்திரந்தானிற்குமோமுல்லைப்பொன்னையுள்ளா மருளாதரித்திரந்தேர்ந்தறியா ரம்மடவரையே வெருளாதரித்திரந்தோ வினைகாளிங்குமேவரிதே. | 24 |
மேவருந்தென்றலுக்காற்றா தென்மான்வெம்பிநைந்துதனி யேவருந்தென்றனக்கார்துணையாவரென்றேங்கியிந்த நோவருந்தென்றயனேன் விதித்தானென்றுநொந்தழுமாற் பாவருந்தென்றமிழ்முல்லைப்பிரானருள்பாலிப்பையே. | 25 |
பாலிவடகரைகோடியுமொன் றெனப்பார்ப்பவர்வாழ் பாலிவடகரைமுல்லைப் பிரான்பழிதீரவருள் பாலிவடகரைவேலெம ரென்னினைப்பாரெனுமைம் பாலிவடகரையன்னையர் நேர்ந்தும்பசப்புறினே. | 26 |
உறுமாசிலாமணிமாயையென்றேகொள்ளுயிர்க்கிவற்றைத் தெறுமாசிலாமணிவள்ளல்வெற்பாவனைத்தேடிக்கண்ண ரறுமாசிலாமணிவைத்த மண்பாவையன்னேனெனுஞ்சீர் பெறுமாசிலாமணிகேட்குமுன் சோருமிப்பேதையின்றே. | 27 |
இன்றகலங்கலவாதொழிந் தாலுமெடுத்தசிலைக் குன்றகலங்கநன்கொன்றையேனுங்கொடுத்தியன்றேன் மன்றகலங்கலனேதூணிகட்புனல்வராவிடா நின்றகலங்கலர்காணாத முல்லைநிருமலனே. | 28 |
நிருதியமனைவிந்திரனாதியர்நேர்த்திறைஞ்சிக் கருதியமனனர்ச்சிக்க நல்குங்கடிமுல்லைத்தலை வருதியமனனல்காதி யுலாவரைவாழ்த்துவமிம் பருதியமனனயப் பேமலமலப்பாழ்ங்குழிக்கே. | 29 |
verses 30, 31 missing | 30, 31 |
வந்தனையாற்றமவாக்கொண்டு தாளிணைவாழ்த்துமெய்த்த வந்தனையாற்றமர்வார்க்கருள்வான் றருமையல்கொண்டு வந்தனையாற்றமர்காணிலென்னா மென்றுவைதெனைத்தை வந்தனையாற்றமருண்டே னருண்முல்லைவான்பொருளே. | 32 |
பொருதவிசாகரஞ்சத்தியுங் கும்பனும்பொற்பழிக்க விருதவிசாகரந்தானும் வருத்துமெய்யன்பருள்ள மொருதவிசாகரந்தென்முல்லை யாவுடையாரருளா ரிருதவிசாகரநெஞ்சே யல்லாற்செயலியாதுனக்கே. | 33 |
யாதவமாதவனாரணனா ரின்னுநாடியறி யாதவமாதவடன்பால் வளரெழின்முல்லையினை யாதவமாதவமன்றோ வென்னேரிரங்காதிருத்தல் யாதவமாதவர்வெற்பா வறியவியம்புகவே. | 34 |
இயம்புகவேதனையா மந்திரப்பொருளென்றுசிறைக் கயம்புகவேதனைவீழ்த்தோன் புகழ்முல்லைக்கண்ணிருவர் பயம்புகவேதனை நாடரிதாவளர்பண்ணவன்கா வியம்புகவேதனையுற்றேற் கருண்மிகவைப்பதென்றே. | 35 |
வைப்பதுமத்தகமீதோர் விழிமுல்லைமாநகர்வ சிப்பதுமத்தகயத்துரி போர்ப்பதுதேவிசா ணப்பதுமத்தகம்வைப்பார்க் கறுப்பதுநான்கிரண்டு முப்பதுமத்தகவாளர்க் கென்னோமயன்மூண்டதுவே. | 36 |
மூண்டவிக்காமன்றனக் கம்பலர்மொழிநாணரிவின் னிண்டவிக்காமன்னவைத்தமை போர்நெடுங்காமமகத் தீண்டவிக்காமன்வருத்தாதெமைக்கொக்கிறான்மிடற்றிற் றீண்டவிக்காமன்மிசைதடஞ்சூழ்முல்லைச்சிற்பரனே. | 37 |
பரம்பரன்பண்டரங்கன்முல்லைவாணனெண்பாற்குணமு நிரம்பரன்பண்டரங்கன்றேட நீண்டநிமலனெண்டிக் கொரம்பரன்பண்டரங்கண்டோதும் பத்திரவுத்தமயாழ் நரம்பரன்பண்டரங்கஞ் சேரருட்கடனந்தெய்வமே. | 38 |
நந்தமருமந்தமெய்வாழ்வுமற்றைநலங்களுந்தி கந்தமருமந்தவான்புகழ்சேர்முல்லைக்கண்ணிருந்த பந்தமருமந்தமெல்விரல்பாகன்பகைவருரஞ் சிந்தமருமந்தனைப்போழுஞ்சூலத்திருக்கரனே. | 39 |
திருமுல்லைவாயின் மருவுமெந்தாயிளஞ்சேய்க்கழகு தருமுலைவாயின்வைத்தாலன்றி யுண்ணுந்தகுதியுண்டே வருமுலைவாயினற்பட்டழுந்தா தெமையாண்டுமன மிருமுலைவாயின்மெழுகாயுருகச் செய்தேன்றுகொள்ளே. | 40 |
கொள்ளுந்திகம்பரமுல்லைப்பிரான்பைங்குழவிநிலா வெள்ளுந்திகம்பரவுஞ்சடையான்வெற்பினீர்ச்சுழியைத் தள்ளுந்திகம்பரநேர்களங்கண்ணிதருநலத்திற் குள்ளுந்திகம்பரமெல்லாமதிப்பினுமொப்பல்லவே. | 41 |
அல்லியந்தாமரையாளிடமோர்பொழுதவ்வளம்போய் வல்லியந்தாமரையாளிடமாமதைவாழ்த்திடன்மின் பல்லியந்தாமரையாமத்தினுங்கண்படாமுல்லையார்ப் புல்லியந்தாமரையாசையின்வாழ்த்தும்புலவர்களே. | 42 |
புலத்தலைவாவினியாற்றேமென்றெய்துநர்புந்திவெந்தீப் புலத்தலைவாவினுங்கைகொடுப்பார்முல்லைப்பூவைவிடு புலத்தலைவாவிநன்னீர்விளையாடிப்புணருதும்வா புலத்தலைவாவிங்ஙனென்றருள்வாய்மலர்ப்பூங்கொடியே. | 43 |
கொடியானையந்தநல்லூரனையாண்டநங்கோனைமதக் கொடியானையந்தகனைச்சீறிமுல்லையுட்கோவைமுல்லைக் கொடியானையந்தபவாண்டானையீண்டுறற்குக்கரைந்தாற் கொடியானையந்தமுள்ளாய்க்கிடுவேன் கொளுமூன்பலியே | 44 |
ஊன்காளத்திக்குச்சுவையுளதோதிண்ணுடற்கறைக்கா னான்காளத்திக்குத்தெளிவுளதோமுல்லைநாயகனெங் கோன்காளத்திக்குத்தரனலம்யானறிகொள்கையல்லான் மான்காளத்திக்குக்கியாராவர்போலுமற்றெங்கையரே. | 45 |
கைக்கவிகமகநைந்தழுங்கிக்கலங்காதருள்சேர் கைக்கவிகமகவாதியிலாசைகருத்துள்ளுக கைக்கவிகமகனாதியர்வாழ்முல்லைகாவலன்புன் கைக்கவிகமகவுங்கொடுபாய்கழுங்குன்றனையே. | 46 |
குன்றத்தஞ்சாதிமலர்க்கூந்தன்மாதிடங்கொண்டிருந்த னன்றத்தஞ்சாதிவழாமுல்லைவாணனடித்தனன்றென் மன்றத்தஞ்சாதிநெஞ்சேநமக்கென்குறைவாழ்வுபெற்றேம் பின்றத்தஞ்சாதிரிமாயாயென்றேவெற்றிபேசுவமே. | 47 |
பேசித்திருந்தநம்முல்லையில்வந்தெமைப்பேணித்தொண்டீர் பூசித்திருந்தம்வினைதீர்த்துமென்றருள்பொற்பர்வெற்பி னேசித்திருந்தண்புனலீர்க்கும்போதுற்றுநேர்ந்தெடுத்தா ராசித்திருந்தபடிபோலொருவரஞ்சாதியென்றே. | 48 |
சாதிப்பரியதவத்தார்க்குமுல்லைத்தலத்தினுண்மை போதிப்பரியனலம்பாடுதும்புல்லறிவுபரம் பாதிப்பரியமனைதோறும்வண்டுபகர்ந்ததுமுன் காதிப்பரியகளிற்றுரிபோர்த்ததுங்கட்டுரைத்தே | 49 |
கட்டோம்புதலெனக்காமாதியாறுங்கரிசறுத்தோ முட்டோம்புதவுதிறந்தின்பவீடுபுக்குச்சரித்தோஞ் சிட்டோம்புதல்விமண்ணோருந்திகஞ்சந்தெளிவின்முன்பின் விட்டோம்புதலுறுநள்ளெழுத்தான்முல்லைமேவப்பெற்றே. | 50 |
பெற்றவரம்பலவுங்குன்றயான்பிணைபோல்வெருள வுற்றவரம்பலங்கோதவென்பேதையொருதனியே முற்றவரம்பலசெய்தகன்றாளென்னைமுல்லைப்பிரான் கற்றவரன்பலவற்பணியாரிற்கடுஞ்சுரமே | 51 |
கடுத்தியம்பாம்பன்மலரானையாதுகவலைநெஞ்சே விடுத்தியம்பாம்பனல்வாயாற்புகழ்ந்தின்றுமேவுதுமுட் படுத்தியம்பாம்பலுரிபிறைமான்வெம்பரசொடுந்து வடுத்தியம்பாம்பணிமுல்லையுளம்பலவாணனையே. | 52 |
அம்பலவாணன்மடவார்விழியென்றழிந்துழலு மம்பலவாணங்கனையலியாகியமர்ந்தருளு மம்பலவாணன்றிருமுல்லைவாயிலழகன்றில்லை யம்பலவாணன்வழியினில்லா வென்னறிவுகளே. | 53 |
அறிவறியாகமெதுவதுவாகமல்லாதவென்னாங் குறிவறியாகடிமுல்லையிற்சேர்புழுக்கூட்டைவிண்டு தறிவறியாகஞ்செயன்பாலெனையர்ச்சனைசெயுன்பாற் செறிவறியாகந்தருவலென்றாண்டனன்சின்மயனே. | 54 |
மயங்காதுவரையும்பொய்ப்பொருளியாவும்வரையச்செய்ய பயங்காதுவரையுண்மால்போற்றுமுல்லைநம்பாவிழிப்பங் கயங்காதுவரையுநீள்சீர்க்கொடியிடைகாதலசூர் சயங்காதுவரையுமைங்கரனாரையுந்தந்தவனே. | 55 |
தவத்துக்கணிகலனட்டோனென்றறோரிற்றவறுமவை பவத்துக்கணிகலனெஞ்சேயிவைவிடப்பார்வடிவ கவத்துக்கணிகலன்மாவாக்குமுல்லையினானரியா யவத்துக்கணிகலந்தோர்பான்மருவுமெம்மண்ணலையே. | 56 |
அண்ணலந்தோயமனைவீட்டிமுல்லையிலார்ந்ததுவு மெண்ணலந்தோயமுடித்ததுமற்றெம்மிறைவியைப்போ லுண்ணலந்தோயவிழைந்திரந்தேங்கியுளைந்துநந்தம் பெண்ணலந்தோயவெளிவந்தருளுமெய்ப்பேறன்றியே. | 57 |
அன்றினங்காதரமாய்நின்றுகத்துமலைகடலெம் முன்றினங்காதரவத்துக்களவிலைமூரிமதன் கன்றினங்காதரவாருளரோவிருகண்ணுந்துஞ்சா வின்றினங்காதரமாமுல்லைவாணமற்றெங்களையே. | 58 |
களைகண்டனம்புயமாமுல்லைக்கோன்வெற்பகாதன்மிக்க கிளைகண்டனம்புயன்மேவுந்தடவரைக்கீழொருசார் விளைகண்டனம்புயங்கஞ்சேல்வல்வேய்சொன்னடைநிதம்பந் திளைகண்டனம்புயமாக்கொண்டுநிற்குமொர்தீங்கரும்பே. | 59 |
தீங்கரும்புங்கவறாடிப்பயனிலைசெப்பின்மின்னார் தாங்கரும்புங்கவலாக்கனியும்மெனச்சாற்றியந்தோ நீங்கரும்புங்கவசையுறுவீர்முல்லைநீணகரின் பாங்கரும்புங்கவரும்போற்றுமீசனைப்பாடுமினே. | 60 |
பாடகமன்னவருந்துயர்தீரப்பரன்புகழ்வாய் பாடகமன்னவருங்குணம்போனலம்பார்த்தெடுத்துப் பாடகமன்னவருளான்றன்பாற்பைங்கொடியிடையென் பாடகமன்னவரும்போற்றவாழ்முல்லைப்பண்ணவனே. | 61 |
பண்ணகங்காரிகைபான்முல்லைவாயும்பதிந்திருந்தோய் வண்ணகங்காரிகைமற்றுமென்போற்பகர்வாரிலையென் றெண்ணகங்காரிகைதூவாதியற்றுமிருவினையாந் திண்ணகங்காரிகைதீண்டுமெந்தாய்கெடச்செய்தருளே. | 62 |
செய்தவமாயத்தன்செல்வமுநீயெனச்சிந்தைசெய்யா தெய்தவமாயத்தன்மங்களைமாற்றியியற்றுமென்றன் கைதவமாயத்தன்மைக்கோரளவில்லைகண்ணருளாற் பொய்தவமாயத்தன்முல்லையுள்ளாய்நலம்போதிப்பையே. | 63 |
திப்பியமாவடுதண்டுறைக்கண்ணுந்திருந்துநிலை தப்பியமாவடுத்தீர்முல்லையூரினுஞ்சந்தமுலை யம்பியமாவடுவார்கண்ணிபாகனமர்ந்துபுகழ் பப்பியமாவடுநாமமொன்றாக்கொண்டுபாரிப்பதே. | 64 |
பாரகந்தைக்குமரும்புகழ்சேர்முல்லைப்பாலவருள் பாரகந்தைக்குமதியார்பின்சென்றுதண்பாலிநதிப் பாரகந்தைக்கும்வழியின்றிவாடும்பரிசுநன்றோ பாரகந்தைக்குமைக்குங்கயஞ்செற்றபராபரனே. | 65 |
பரங்கிரியாவிகள்சூழ்முல்லைபோற்பரிந்தென்னுளமா மரங்கிரியாவிடையாரருளுண்மையறிவினின்ற வரங்கிரியாவியினுள்ளேயழுத்தும்வகையறியேன் சிரங்கிரியாவிதியாற்றுஞ்செல்லேனுய்யுஞ்செய்கையென்னே. | 66 |
செய்வசித்தாந்தமிழ்முல்லையுளீசசெவ்வேமநய வைவசித்தாந்தம்பொருளைந்துடையவவற்றிரண்டு நைவசித்தாந்தவிர்மூன்றுமொன்றொன்றினணுகுமென்னுஞ் சைவசித்தாந்தநெறியுபதேசந்தனையெமக்கே. | 67 |
தனையரியானனநான்கானுந்தேடிடத்தான்முடியாஞ் சினையரியானனமார்தடஞ்சூழ்முல்லைச்சிற்பரனென் வினையரியானனருள்சேர்ந்துநீயொருமின்னின்விழி யினையரியானனனேர்மெழுகாயினென்னாம்பிறிதே. | 68 |
தேவருந்தானவருங்காரி கண்டஞ்சித்தீவினையா னேவருந்தானவனாம் பகுப்பற்றவர்நேர்முல்லைநம் பாவருந்தானவவென்றோ லிடப்பண்டருந்தியுமந் தோவருந்தானவமீதறியார் சிலர்தொண்டர்களே. | 69 |
தொண்டையநாடுகடீரச்செய்யாமற்றுவரிதழ்வாய்த் தொண்டையனாடுமலர்க்கூந்தலார்க்குடைந்தும்பிழைத்தேன் றொண்டையனாடுபுகழோங்குமுல்லையிற்றோன்றுமுருத் தொண்டையனாடுமலரடிக்கீழின்றிதொண்டுசெய்தே. | 70 |
செய்யுடையல்குலைக்காட்டிமய்க்குநர்தீமைகெடச் செய்யுடையல்குலைப்பால்வளைவெண்ணித்திலம்பரப்புஞ் செய்யுடையல்குலையாவளமுல்லையிற்சேர்ந்துபகர் செய்யுடையல்குலைத்தாரானைப்பால்வைத்ததேவைநெஞ்சே. | 71 |
நெஞ்சலமந்திரங்கக்கூற்றந் தோன்றினுநெக்குருகி யஞ்சலமந்திரந்தான் முதலாறுமற்றேமறுத்தேஞ் சஞ்சலமந்திரம்பெற்றுள முல்லைத்தலத்தழகு துஞ்சலமந்திரந்தன்னிலெங் கோனைத்துதிக்கப்பெற்றே. | 72 |
பெற்றத்திருந்துறுவாழ் வெமக்கீயப்பெருகுவள முற்றத்திருந்துறுமுல்லையின் முல்லையின்முல்லியில்வாழ் நற்றத்திருந்துறுநீர்வேணியீர் நள்ளுமன்பரென்னுஞ் சுற்றத்திருந்துறுகண்டீர்த் தெமைத்தொண்டுகொள்ளுமினே. | 73 |
மின்பங்கம்பொன்றுந்துமேருவில் லோடமர்வேதியவென் றன்பங்கம்பொன்றுந்துறைகாட்டி முத்தியிற்சாரவரு ளன்பங்கம்பொன்றுந்துபியோசை யென்றுமறாமுல்லையா யின்பங்கம்பொன்றுந்துவர்க்கையற் கீந்தருளென்னரசே. | 74 |
அரங்கந்திருவம்பலமுக்கணானுக்கமர்விடஞ்சீ ரிரங்கந்திருவம்பலர்தொறும் வாழவிலங்கும்பிர மரங்கந்திருவம்பலபாடும் வாவிகண்மல்குமுல்லைப் புரங்கந்திருவம்பலங்குங் கொடியிடைப்பூண்முலையே. | 75 |
பூண்டிலஞ்சித்தத்துமெய்யன்பெவ்வாறினிப்பொன்பெண்ம ண்ணாந், தூண்டிலஞ்சித்தத்துவங்கடந்தானந்தந்தோய்வுற லூர்,பாண்டிலஞ்சித்தத்துவாத்துடக்கொக்கப்பறித்தருள்வா, யாண்டிலஞ்சித்தத்துநீர்புடைசூழ்முல்லையங்கணனே. | 76 |
அங்கங்கரகரவென்றோதம்போலொலியார்ப்பவன்பர் சங்கங்கரகரகத்தோர்துதிக்கத்தண்ணீற்றினொளி பொங்கங்கரகரமுல்லையுள்ளாரெனைப்பொத்திக்கொண்ட பங்கங்கரகரநின்றாலுனைப்பற்றிக்கொல்லுவரே. | 77 |
பற்றிக்கொல்லாதொழிவேனோவினிமலப்பாவமறங், கற்றிக் கொல்லாருலைவேற்கண்ணிபால்கவர்முல்லைப்பிரான், பெற்றிக்கொல்லாதவர்போலென்றனையெண்ணும்பேதையெண்ண, முற்றிக்கொல்லாம்வருகின்றனைபாரின்றென்முன்னர்வந்தே. | 78 |
வந்தியன்றேவரைநின்னன்றியான்முல்லைவாணவென்னோ வந்தியன்றேவரையாதருளாமைமண்முற்றும்பெற்றும் வந்தியன்றேவரைமாமாதுநீயுமவ்வாறுநின்செவ் வந்தியன்றேவரைவாட்கரித்தான்கெடவைத்தவனே. | 79 |
வைத்தலைவாளிநிகர்விழியான்மதனம்புடல்சு வைத்தலைவாளினியாற்றகில்லாண்மன்னச்செய்தியருள் வைத்தலைவாளினிதார்முல்லைவாண்மதிக்குடைக்கோ வைத்தலைவாளினிலேற்றன்றிச்சாந்தம்வார திவட்கே. | 80 |
வட்காதகைதவரூரெரித்தாயுன்னைவாஞ்சித்தவி வட்காதகைதவமிக்கோர்புகழ்மணிவார்த்தைநிறை யுட்காதகைதவவாணர்கள்வாழ்முல்லையுத்தமனே யுட்காதகைதவன்கைப்பிரம்பாலடியுண்டவனே. | 81 |
உண்டாயினந்தமயல்செய்வதென்னினியோடுநஞ்ச முண்டாயினந்தமதாண்டவன்முல்லையுறாருறும்புன் கண்டாயினந்தமர்போல்வந்தெம்மான் கண்ணருள்புரிந்தான் கண்டாயினந்தமமேயுனக்கீங்கென்னகாரியமே. | 82 |
மேதக்கசிந்தனைத்தாபதர்வாழ்முல்லைமேவுநம்ப வாதக்கசிந்தனைத்தாவீரமென்றட்டுமன்மதனைக் காதக்கசிந்தனைத்துங்குடியார்முடிக்கண்ணுதலென் றோதக்கசிந்தனைக்கென்னெஞ்சமேகுறையோதுதியே. | 83 |
துதிப்பருந்தாதவிழ்பூம்பொய்கைசூழ்முல்லைத்தொன்னகாவாழ் மதிப்பருந்தாதகிகொன்றைச்சடாதரவானியங்குங் கதிப்பருந்தாதரவாயென்னுடம்பிற்கசியும்புலாற் குதிப்பருந்தாதமுன்வந்தென்றனைத்தொண்டுகொண்டருளே. ) | 84 |
அருந்துதியானன்பினேத்தவைத்தாரருள்கற்பினல மருந்துதியானம்புவிக்களித்தாரகுளாரமுதை யருந்துதியானம்புரிமனமேவிரைந்தாள்வரெம்மை யருந்துதியானன்கவர்முல்லைக்கேசொல்லுமவ்வெண்ணமே. | 85 |
எண்ணப்படிகடியாதன்பர்க்கீந்தெழின்முல்லையினுங் கண்ணப்படிகடியானத்துந்தோன்றுமிக்கான்கழற்கீழ் நண்ணப்படிகடிநெஞ்சேயவனம்பிழையெண்ணினுந் தண்ணப்படிகடிதாறுதல்போலுமத்தன்மையனே. | 86 |
அத்தன்மையர்ந்தெரியற்குழலாரமர்முல்லைநில யத்தன்மையாந்தெரிமூழ்காமலுண்மையருவுருக்கா ரத்தன்மையாந்தெரியக்குருவாய்வந்தனைத்துமல்லா வத்தன்மையாந்தெரிவைபாகத்தாமறியென்றனனே. | 87 |
அறிவென்றவவழிச்செல்லார்தமையுமடக்குங்கண்ணாய் குறிவென்றவவடியேற்களித்தாயிணைக்கூற்றின்மையாற்[வை பொறிவென்றவர்பெறும்பேற்றையொக்குமிப்பொன்னுரு[ச் செறிவென்றவவலியென்றோவெம்மான்முல்லைத்தீங்கரும்பே. | 88 |
கருப்பந்தங்குங்குறியான்முல்லைவாணகதிகடொறுந் திருப்பந்தங்குங்குமலமால்போன்றுதெரிவையரைப் பொருப்பந்தங்குங்குமக்கொங்கையென்றோதிப்பொய்யாதொழிப்பா யுருப்பந்தங்குங்குலியக்கலயன்றொழிமுத்தமனே. | 89 |
தமக்கடியாகமையொன்றித்தவஞ்செய்யுந்தன்மையிலா தமக்கடியாகமுதவாரைச்சாரத்தகுமுனக்குத் தமக்கடியாகமறையாளர்முல்லைத்தலத்திறைவர் தமக்கடியாகமெய்த்தொண்டுசெய்வேங்களைச்சார்வரிதே. | 90 |
சார்வருந்திப்பியமால்கொள்வதென்னைதண்முல்லைநகர்ச் சார்வருந்திக்குடையார்செயல்கேட்டிதகுவர்கட மூர்வருந்திக்கெடப்புன்மூரல்கொள்ளுவரோரெருதை யூர்வருந்திப்புனல்சூடுவராடுவரொண்ணுதவே. | 91 |
ஒண்ணுதலங்கனைமாரிடந்தோறுமுவந்துநடம் பண்ணுதலங்கனையக்குழைத்தார்முல்லைப்பாடியினை யண்ணுதலங்கனையானைத்தொழலிவையன்றிநெஞ்சின் கண்ணுதலங்கனைமுன்நீருலகிற்கருமங்களே. | 92 |
மங்களமேவியன்முல்லைப்பிரானின்றுவைத்தனன்கா மங்களமேவியனாட்டத்தவர்பொய்மலமதங்கன் மங்களமேவியசெய்தெனைவாட்டுமனமினிநீ மங்களமேவியபுன்புதன்மானவலியிழந்தே. | 93 |
இழவாதென்போதமிழப்பித்தமுல்லைக்கிறையவனைத் தெழவாதென்போதகங்கைக்கொண்டென்றன்மைத்துரிசுகளி னுழவாதென்போதமெய்யன்புசெய்வீணிலுழலுமிந்தப் பழவாதென்போதவிர்நெஞ்சேயுனக்கிதுபண்பல்லவே. | 94 |
அல்லாக்குமாரிருணெஞ்சேதொழும்பர்க்கடித்தொழில்செ யல்லாக்குமாரியென்றேத்தேலகிலமுமீன்றுமுதிர் வல்லாக்குமாரிதன்பங்காளனீலவரங்கமெல்லை யல்லாக்குமாரியமுல்லைப்பிரானடிக்கன்புசெய்யே. | 95 |
அன்புடையாளியங்காக்குறுங்கானத்திவல்சியெனத் தன்புடையாளியங்காக்குமதர்தனியெய்தவிவ டுன்புடையாளியங்காக்குமொலிமுல்லைத்தோன்றலதள் வன்புடையாளியங்காக்குமிடறன்னவல்லிருளே. | 96 |
வல்லியம்போதகவண்டோடொலிக்கும்வளமுல்லைவாழ் வல்லியம்போதகமாய்த்தபிரான்வரைமேலிடையோ வல்லியம்போதகவாம்விழிதாமிந்தவார்முலையோ வல்லியம்போதகரக்குழலாய்திருவாய்மலர்ந்தே. | 97 |
வாயானஞ்சக்கரமால்விடையாவைத்தமுல்லைப்பிரான் வாயானஞ்சக்கரமோதித்தொழாதவறியர்க்கெய்த வாயானஞ்சக்கரமீதுணவேந்திமயிலைத்துறை வாயானஞ்சக்கரவாதழலாய்வருமம்புலியே. | 98 |
அம்பவளவளவாயெனக்கும்முல்லையாளர்வில்லி னம்பவளவளவாம்விழியெங்கைக்குமன்புவைத்த நம்பவளவளவாச்சொரிபாலொக்குநட்பறியாய் நம்பவளவளவாவேதகுமிங்குநண்ணலையே. | 99 |
நண்ணத்திருவளவானந்தவீட்டினயந்தெண்ணிடு மெண்ணத்திருவளகத்திகழ்ந்தேகிரியிரும்பரிதி வெண்ணத்திருவளர்கையேந்திகாணரும்வேந்தனமர் திண்ணத்திருவளமுல்லையிற்சேர்மின்றிருத்தகவே. | 100 |