|
|
3. | தன்பால். |
3.1 | குருவழி. |
3.2 | அங்கியிற்பஞ்சு. |
3.3 | மெய்யகம். |
3.4 | கண்ணாடி. |
3.5 | சூனியகாலமறிதல். |
3.6 | சிவயோகநிலை. |
3.7 | ஞானநிலை. |
3.8 | ஞானம்பிரியாமை. |
3.9 | மெய்ந்நெறி. |
3.10 | துரியதரிசனம். |
3.11 | உயர்ஞானதரிசனம். |
ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன். | (1) |
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. | (2) |
ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம் ஆசை படுத்து மளறு. | (3) |
தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். | (4) |
நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண். | (5) |
மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. | (6) |
மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலுந் திகழ்சத்தி யாறு. | (7) |
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக ளேழு. | (8) |
மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. | (9) |
இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. | (10) |
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினி லுத்தமனைக் காண். | (11) |
உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே யுணர்க வுணர் வுடையார். | (12) |
ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். | (13) |
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. | (14) |
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னியதே யாம். | (15) |
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. | (16) |
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. | (17) |
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. | (18) |
உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. | (19) |
அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். | (20) |
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம் உற்றுடம்பா லாய வுணர்வு. | (21) |
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய உள்ளுடம்பி னாய வொளி. | (22) |
சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம் பென்றுங் கெடாத திது. | (23) |
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும் ஒருபயனைக் காட்டு முடம்பு. | (24) |
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் றொடர்பு. | (25) |
நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு. | (26) |
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக் கள்ளவுடம் பாகி விடும். | (27) |
பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு மெய்க்குள்ளா மாய வுடம்பு. | (28) |
வாயுவினா லாய வுடம்பின் பயனே ஆயுவி னெல்லை யது. | (29) |
ஒன்பது வாசலு மொக்க வடைத்தால் அன்பதி லொன்றா மரன். | (30) |
எழுபத்தீ ராயிர நாடியவற்றுள் முழுபத்து நாடி முதல். | (31) |
நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம் உரம்பெறு நாடியொன் றுண்டு. | (32) |
உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. | (33) |
காலொடு கையி னடுவிடைத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. | (34) |
ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. | (35) |
மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. | (36) |
உந்தி முதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. | (37) |
நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. | (38) |
நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. | (39) |
அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். | (40) |
மூலத்தினிற் றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். | (41) |
இடை பிங்கலைக ளிரேசக மாற்றில் அடையு மரனா ரருள். | (42) |
அங்குலியால் மூடி முறையா லிரேசிக்கில் பொங்குமாம் பூரகத்தி னுள். | (43) |
எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கில் உண்ணிலைமை பெற்ற துணர்வு. | (44) |
மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு உயர்ப்பின்றி யுள்ளே பதி. | (45) |
இரேசிப்பது போலப் பூரித்து நிற்கில் தராசுமுனை நாக்கதுவே யாம் | (46) |
கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கில் தும்பிபோ னிற்குந் தொடர்ந்து. | (47) |
இரேசக பூரக கும்பக மாற்றில் தராசுபோ னிற்குந் தலை. | (48) |
வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில் ஆயுட் பெருக்க முண்டாம். | (49) |
போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்கும் தாழ்கின்ற வாயு வடக்கு. | (50) |
அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில் பந்தப் பிறப்பறுக்க லாம். | (51) |
உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறில் கள்ளமல மறுக்க லாம். | (52) |
எரியுந் தழல்போல வுள்ளுற நோக்கில் கரியுங் கனலுருவ மாம். | (53) |
உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுவூறில் வெள்ளங்கி தானாம் விரைந்து. | (54) |
உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சில் அந்தி யழலுருவ மாம். | (55) |
ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கில் பொய்யைந்தும் போகும் புறம். | (56) |
ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கில் உம்பரொளி யாய் விடும். | (57) |
தூண்டுஞ் சுடரைத் துளங்காமற் றானோக்கில் வேண்டுங் குறைமுடிக்க லாம். | (58) |
உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து. | (59) |
ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு. | (60) |
அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். | (61) |
ஈரெண் கலையி னிறைந்த வமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. | (62) |
ஓங்கார மான கலசத் தமிர் துண்ணில் போங்கால மில்லை புரிந்து. | (63) |
ஆனகலசத் தமிர்தை யறிந் துண்ணில் போனகம் வேண்டாமற் போம். | (64) |
ஊறு மமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். | (65) |
ஞானவொளி விளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவயோகி யாம். | (66) |
மேலை யமிர்தை விலங்காமற் றானுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். | (67) |
காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில் ஞான மதுவா நயந்து. | (68) |
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். | (69) |
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர் துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். | (70) |
மண்டலங்கண் மூன்று மருவ வுடனிருத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. | (71) |
ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்துப் பூசனைசெய் துள்ளே புணர். | (72) |
உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந் தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. | (73) |
ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு. | (74) |
பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. | (75) |
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு. | (76) |
பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு. | (77) |
மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து முந்தரனை யர்ச்சிக்கு மாறு. | (78) |
பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந் தாராதனை செய்யு மாறு. | (79) |
உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. | (80) |
எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. | (81) |
பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். | (82) |
எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். | (83) |
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். | (84) |
காயக் கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். | (85) |
பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். | (86) |
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். | (87) |
ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. | (88) |
ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். | (89) |
காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். | (90) |
பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூல மது. | (91) |
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். | (92) |
அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. | (93) |
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத்தேடு. | (94) |
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. | (95) |
நல்லானைப் பூசித்து நாதனென வுருகில் நில்லாதோ வீச னிலை. | (96) |
அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். | (97) |
ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீநினைந்து கொள். | (98) |
மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. | (99) |
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். | (100) |
அருளினா லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம். | (101) |
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளுஞ் சிவசிந்தை யாம். | (102) |
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையா மீச னருள். | (103) |
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால் அவ்வகத்து ளானந்த மாம். | (104) |
உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னு மருள்பெற்றக் கால். | (105) |
எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லை யருள் பெற்றக்கால். | (106) |
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும் | (107) |
மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும் ஈசனருள் பெற்றக்கால். | (108) |
ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது தாவாதோ ஞான வொளி. | (109) |
ஒவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித் தாவாத வின்பந் தரும். | (110) |
கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. | (111) |
குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். | (112) |
ஒர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப் பார்மின் பழம்பொருளே யாம். | (113) |
சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை மிக்க மலத்தை விடு. | (114) |
அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந் துறுமின்க ளும்முளே யோர்ந்து. | (115) |
நிற்றம் நினைந்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில் முற்று மவனொளியே யாம். | (116) |
ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால் ஈசன் கருத்தா யிரு. | (117) |
இராப்பக லன்றி யிருசுடர்ச் சிந்திக்கில் பராபரத்தோ டொன்றலு மாம். | (118) |
மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில் ஒக்கச் சிவனுருவ மாம். | (119) |
வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்தெங்குங் காண்டற் கரிதாஞ் சிவம். | (120) |
தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். | (121) |
உண்டில்லை யென்னு முணர்வை யறிந்தக்கால் கண்டில்லை யாகுஞ் சிவம். | (122) |
ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம் ஒருவனே பல்குணமு மாம். | (123) |
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். | (124) |
ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம். | (125) |
ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந் தேவான தென்றே தெளி. | (126) |
தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென் செம்மையா லீசன் றிறம். | (127) |
எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவர்கள் நல்லுலக நாத னடி. | (128) |
உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து. | (129) |
உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம். | (130) |
சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது. | (131) |
அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில் நயனமா முத்திக்கு வீடு. | (132) |
அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந் துஞ்சாதவர் துறக்கு மாறு. | (133) |
ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லை தேசவிளக் கொளியே யாம். | (134) |
தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில் காஞ்சனமே யாகுங் கருத்து. | (135) |
கூடக மான குறியெழுத்தைத் தானறியில் வீடக மாகும் விரைந்து. | (136) |
வீடகமாக விழைந் தொல்லை வேண்டுமேல் கூடகத்திற் சோதியோ டொன்று. | (137) |
பூரித்து நின்ற சிவனைப் புணரவே பாரித்த தாகுங் கருத்து. | (138) |
இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில் பூரிப்ப துள்ளே சிவம். | (139) |
சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம் சந்திரனிற் றோன்று முணர்வு. | (140) |
எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. | (141) |
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே நூலின்க ணீச னுழைந்து. | (142) |
கரும்பினிற் கட்டியுங் காய்ப்பலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு. | (143) |
பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கும் வழுத்தினா லீச னிலை. | (144) |
தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி யணுவதுவாய் நிற்கு மது. | (145) |
வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே ஒத்துளேநிற்கு முணர்வு. | (146) |
அச்ச மாங்கார மகத்தடக்கினாற் பின்னை நிச்சயமா மீச னிலை. | (147) |
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே வீட்டுளே நிற்கு மியல்பு. | (148) |
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துயிர்குந் தானா மவன். | (149) |
ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து. | (150) |
மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது. | (151) |
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில். | (152) |
உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும் அருவமுந் தானதுவே யாம். | (153) |
தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது. | (154) |
பெண்ணா ணலியென்னும் பேரொன் றிலதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு. | (155) |
அனைத்துருவ மாய வறிவை யகலில் தினைத்துணையு மில்லை சிவம். | (156) |
துனிமுகத்துக் காதியாத் துன்னறி வின்றி அணிதா ரிரண்டு விரல் | (157) |
மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண்டங் காதி நிலை. | (158) |
தற்பர மான சதாசிவத்தோ டொன்றில் உற்றறி வில்லை யுயிர்க்கு. | (159) |
உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு. | (160) |
கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. | (161) |
பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. | (162) |
உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. | (163) |
கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. | (164) |
அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. | (165) |
நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. | (166) |
குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. | (167) |
பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. | (168) |
பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றியிரு. | (169) |
ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. | (170) |
தன்னை யறியு மறிவுதனைப் பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. | (171) |
அறம் பாவமாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து. | (172) |
சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில் பவநாச மாகும் பரிந்து. | (173) |
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம். | (174) |
நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால் அனைத்துலகும் வீடா மது. | (175) |
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு திடம்படு மீசன் றிறம். | (176) |
தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு. | (177) |
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம். | (178) |
விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. | (179) |
சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு. | (180) |
தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் தோன்றியக்காற் றூய வொளி. | (181) |
தெளிவாய தேச விளக்கொளியைக் காணில் வெளியாய வீடதுவே யாம். | (182) |
மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல மூலம் புகும். | (183) |
பளிங்கு வலம்புரி பானிரத்த தாகில் துளங்கொளியாந் தூய நெறி. | (184) |
சங்கு நிறம்போற் றவள வொளிகாணில் அங்கையி னெல்லியே யாம். | (185) |
துளங்கிய தூண்டா விளக்கொளி காணில் விளங்கிய வீடாம் விரைந்து. | (186) |
மின்மினி போன்ற விளக்காகத் தான்றோன்றில் அன்னப் பறவையே யாம். | (187) |
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி அவ்வொளி யாதி யொளி. | (188) |
பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி. | (189) |
ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி ஆதியவ னுருவ மாம். | (190) |
பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். | (191) |
விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். | (192) |
ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி ஏகமாய் நிற்குஞ் சிவம். | (193) |
வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய் ஆயுமிடந் தானே சிவம். | (194) |
எண்ணிறைந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். | (195) |
ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும் ஒன்றாகி நிற்குஞ் சிவம். | (196) |
மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்குங் காலமாய் நிற்குஞ் சிவம். | (197) |
மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி விண்ணகமே யாகுஞ் சிவம். | (198) |
தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி ஏத்தவரு மீச னுளன். | (199) |
நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி உற்றெங்கும் நிற்குஞ் சிவம். | (200) |
தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன். | (201) |
சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம். | (202) |
குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க் கருவமாய் நிற்குஞ் சிவம். | (203) |
தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால் வலைப்பட்ட மானதுவே யாம். | (204) |
நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிறிவற் றிருக்குஞ் சிவம். | (205) |
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே எல்லை யில்லாத சிவம். | (206) |
நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந் தனைப் பிரியாது சிவம். | (207) |
ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல் என்று மொன்றாது சிவம். | (208) |
நாட்டமில்லாத விடம் நாட்ட மறிந்தபின் மீட்டு விடாது சிவம். | (209) |
பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லா அல் அஞ்ச லென்னாது சிவம். | (210) |
அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே நினையில் சங்கிக்க வேண்டா சிவம். | (211) |
மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம். | (212) |
(2) நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல் அஞ்ச லென்னாது சிவம். | (213) |
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது கற்றதனா லென்ன பயன். | (214) |
தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின் தம்மை யறிவரோ தான். | (215) |
அசபையறிந் துள்ளே யழலெழ நோக்கில் இசையாது மண்ணிற் பிறப்பு. | (216) |
இமையாத நாட்டத் திருந் துணர்வாருக் கமையாத வானந்த மாம். | (217) |
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. | (218) |
மதிபோ லுடம்பினை மாசற நோக்கில் விதிபோ யகல விடும். | (219) |
சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்கும் பரிந்து. | (220) |
மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. | (221) |
கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில் உரையற் றிருப்ப துணர்வு. | (222) |
உண்டுபசி தீர்ந்தாற் போலுடம் பெல்லா அங் கண்டுகொள் காதல் மிகும். | (223) |
உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன். | (224) |
தோன்றாத தூயவெளி தோன்றியக்கா லுன்னைத் தோன்றாமற் காப்ப தறிவு. | (225) |
வாக்குமனமு மிறந்த பொருள் காணில் ஆக்கைக் கழிவில்லை யாம். | (226) |
கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன்னகத்தே நின்ற வொளி. | (227) |
ஆனந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு. | (228) |
மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம். | (229) |
விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன் உண்ணிறைந்து நின்ற வொளி. | (230) |
கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள் உண்ணாடி நின்ற வொளி. | (231) |
அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை யுடம்பு. | (232) |
நாபி யகத்தே நலனுற நோக்கிடில் சாவது மில்லை யுடம்பு. | (233) |
கண்டத் தளவிற் கடிய வொளிகாணில் அண்டத்த ராகு முடம்பு. | (234) |
சந்திர னுள்ளே தழலுற நோக்கினால் அந்தர மாகு முடம்பு. | (235) |
ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில் பார்க்கும் பரமா மவன். | (236) |
வண்ண மில்லாத வடிவை யறிந்தபின் விண்ணவ ராகு முடம்பு. | (237) |
நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி காணில் முற்று மழியா துடம்பு. | (238) |
மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின் போதக மாகு முடம்பு. | (239) |
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா துடம்பு. | (240) |
நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில் அரவணையா னாகு முடம்பு. | (241) |
உருவந் தழலாக வுள்ளத்தே சென்று புருவத் திடையிருந்து பார். | (242) |
புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கு முடம்பு. | (243) |
அகம்புறம் பேராப் பொருளை யறியில் உகம்பல காட்டு முடம்பு. | (244) |
ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின் ஓவிய மாகு முடம்பு. | (245) |
அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின் துஞ்சுவ தில்லை யுடம்பு. | (246) |
தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினில் மாயாது பின்னை யுடம்பு. | (247) |
தானந்த மின்றித் தழலுற நோக்கிடில் ஆனந்த மாகு முடம்பு. | (248) |
ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில் அழிவின்றி நிற்கு முடம்பு. | (249) |
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில் முற்று மழியா துடம்பு. | (250) |
அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல். | (251) |
உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி விண்ணோடு மெள்ள விடு. | (252) |
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக் கொள்ளுமின் கும்பங் குறித்து. | (253) |
இரேசக முப்பத் திரண்டது மாத்திரை பூரகம்பத் தாறு புகும். | (254) |
கும்பக நாலோ டறுபது மாத்திரை தம்பித் திடுவது தான். | (255) |
முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி. | (256) |
ஈரைந் தெழுபத் தீராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல். | (257) |
வாச லீரைந்து மயங்கிய வாயுவை யீசன்றன் வாசலி லேற்று. | (258) |
தயாவினில் வாயு வலத்தி லியங்கில் தியான சமாதிகள் செய். | (259) |
ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப் பேதியா தோது பினை. | (260) |
தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. | (261) |
தற்புருட மாமுகமேற் றாரகைதன் மேலே நிற்பது பேரொளி நில். | (262) |
ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது பினை. | (263) |
கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில் எழுந்தா ரகையா மிது. | (264) |
மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. | (265) |
காலுந் தலையு மறிந்து கலந்திடில் சாலவும் நல்லது தான். | (266) |
பொன்னொடு வெள்ளி யிரண்டும் பொருந்திடில் அன்னவன் றாளதுவே யாம். | (267) |
நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை யொன்றுவிக்கி லொன்றே யுள. | (268) |
பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில் ஆசான் பரனந்தி யாம். | (269) |
அழியா வுயிரை யவனுடன் வைக்கில் பழியான தொன்றில்லை பார். | (270) |
பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். | (271) |
சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. | (272) |
வெளியில் விளைந்த விளவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். | (273) |
மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. | (274) |
குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. | (275) |
சுந்தரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். | (276) |
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். | (277) |
ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. | (278) |
அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். | (279) |
இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத்தனன் குரு பார். | (280) |
செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். | (281) |
பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து துஞ்சாது ஞானச் சுடர். | (282) |
இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல நமக்குட் சிவன்செயல் நாடு. | (283) |
குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில் செவித்துப் பெறுவ தெவன். | (284) |
காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம் நாலா நிலையென நாடு. | (285) |
மூல நிலமிசை மூன்றா நிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம். | (286) |
எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத் தொழிலொன் றிலாத சுடர். | (287) |
அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப் படைத்தவன் தன்னையே பார். | (288) |
அறுபதொ டாறு வருட மிதனை உறுதிய தாக வுணர். | (289) |
அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில் இட்ட மிதனைத் தெளி. | (290) |
வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள். | (291) |
சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாரு மினிது பயன். | (292) |
மதியொடு வன்னியொன் றாகவே வந்தால் கதிரவ னாமென்று காண். | (293) |
மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில் உதிக்குமாம் பூரணைச் சொல். | (294) |
தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில் சாற்று மமாவாசை தான். | (295) |
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். | (296) |
அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் சமனா முயிருடம்பு தான். | (297) |
அண்டத்திலு மிந்த வாறென் றறிந்திடு பிண்டத்திலு மதுவே பேசு. | (298) |
ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும் கூறுமப் பூரணை கொள். | (299) |
உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில் மதிக்கு மமாவாசை யாம். | (300) |
கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. | (301) |
வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். | (302) |
செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ் வாறிடரு மில். | (303) |
வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம் வளர்பிறை யென்றே மதி. | (304) |
வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு செலுத்து பேராது செயல். | (305) |
இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான். | (306) |
அர சறியாம லவன்பே ருரைத்துத் தரைதனை யாண்ட சமன். | (307) |
கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல். | (308) |
திருவருட் பாலைத் தெரிந்து தெளியில் குருவிருப்பா மென்று கொள். | (309) |
கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கிற் பரமவை வீடு. | (310) |