அரும்பாக்கிழான் மணவில் கூத்தனான காலிங்கராயன்
நரலோகவீரன் திருப்பணிகள்
12ம் நூற்றாண்டின் முற்பகுதி
[=குலோத்துங்க சோழன் >> விக்ரம சோழன்]
[1070-1120 >> 1118-1125]
திருஅதிகை வீரட்டானர்கோயில் புரமெரித்தான் திருமேனிமுன்
அமைந்த அலங்கார மண்டபத்து தூண்களில் பொளித்துள்ளவை
S.I.E. Annual Report, 369 of 1921
இவ்வெண்பாக் கொத்துப் பாடல்கள் கோவில் கற்சுவர்களிலினின்று
தொல்லியல் துறையினர் படி எடுத்த கல்வெட்டு தொகுதிகளில் காணப்
படுபவையினின்று, சில, ஓர் தனி நூலென மதிக்கத்தக்க அளவினதான
வெண்பா ஈட்டங்கள் மட்டும் ஈங்கு தொகுக்கப்பட்டன. பல்வகை யாப்பிலமைந்த
நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் பல்வேறு இடங்களில்,
பற்பல காலத்தன உள்ளன. பேரறிஞர் மு ராகவையங்கார் அவர்கள்
இவற்றை 'பெருந்தொகை' என தொகுத்துள்ளார். 'சாசன செய்யுள்
மஞ்சரி' எனும் பெயரிலும் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி
அவர்கள் சிலவற்றைத் தொகுத்துள்ளார்.