1. | சிவவணக்கம் |
2. | பரிபூரணானந்தம் |
3. | பொருள்வணக்கம் |
4. | சின்மாயனந்தகுரு |
5. | மௌனகுருவணக்கம். |
6. | கருணாகரக்கடவுள் |
7. | சித்தர்கணம் |
8. | ஆனந்தமானபரம். |
9. | சுகவாரி |
10. | எங்குநிறைகின்றபொருள் |
11. | சச்சிதானந்தசிவம் |
12. | தேசோமயானந்தம் |
13. | சிற்சுகோதயவிலாசம் |
அங்கிங்கெனாதபடி யெங்கும்ப்ரகாசமா யானந்தபூர்த்தியாகி யருளொடுநிறைந்ததெது தன்னருள்வெளிக்குளே யகிலாண்டகோடியெல்லாந் தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க்குயிராய்த் தழைத்ததெதுமனவாக்கினிற் றட்டாமனின்றதெது சமயகோடிகளெலாந் தந்தெய்வமெந்தெய்வமென் றெங்குந்தொடர்ந்தெதிர் வழக்கிடவுநின்றதெது வெங்கணும்பெருவழ்க்கா யாதினும்வல்லவொரு சித்தாகியின்பமா யென்றைக்குமுள்ளதெதுமேற கங்குல்பகலறநின்ற வெல்லையுள்தெதுவது கருத்திற்கிசைந்ததுவே கண்டனவெலாமோன வுருவெளியதாகவுங் கருதியஞ்சலி செய்குவாம். | (1) |
ஊரனந்தம்பெற்ற பேரனந்தஞ்சுற்று முறவனந்தம்வினையினா லுடலனந்தஞ்செயும் வினையனந்தங்கருத் தோவனந்தம்பெற்றபேர் சீரனந்தஞ்சொர்க்க நரகமுமனந்தாற் றெய்வமுமனந்தபேதந் திகழ்கின்றசமயமு மனந்தமதனான்ஞான சிற்சத்தியாலுணர்ந்து காரனந்தங்கோடி வருஷித்ததெனவன்பர் கண்ணும்மிண்ணுந்தேக்கவே கருதரியவானந்த மழைபொழியுமுகிலைநங் கடவுளைத்துரியவடிவைப் பேரனந்தம்பேசி மறையனந்தஞ்சொலும் பெரியமவுனத்தின்வைப்பைப் பேசருமனந்தபத ஞானவானந்தமாம் பெரியபொருளைப்பணிகுவாம். | (2) |
அத்துவிதவத்துவைச் சொற்ப்ரகாசத்தனியை யருமறைகண்முரசறையவே யறிவினுக்கறிவாகி யானந்தமயமான வாதியையநாதியேக தத்துவசொரூபத்தை மதசம்மதம்பெறாச் சாலம்பரகிதமான சாசுவத்புட்கல நிராலம்பவாலம்ப சாந்தபதவ்யோமநிலையை நித்தநிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை நிர்விஷயசுத்தமான நிர்விகாரத்தைத் தடத்தமாய்நின்றொளிர் நிரஞ்சனநிராமயத்தைச் சித்தமறியாதபடி சித்தத்தினின்றிலகு திவ்யதேசோமயத்தைச் சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதானபர தேவதையையஞ்சலிசெய்வாம் | (3) |
வாசாகயிங்கரிய மன்றியொருசாதன மனோவாயுநிற்கும்வண்ணம் வாலாயமாகவும் பழகியறியேன்றுறவு மார்க்கத்தினிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேனந்த நினைவையுமறந்தபோது நித்திரைகொள்வேன்றேக நீங்குமெனவெண்ணிலோ நெஞ்சந்துடித்தயருவேன் பேசாதவானந்த நிட்டைக்க்குமறிவிலாப் பேதைக்கும்வெகுதூரமே பேய்க்குணமறிந்திந்த நாய்க்குமொருவழிபெரிய பேரின்பநிட்டையருள்வாய் பாசாடவிக்குள்ளே செல்லாதவர்க்கருள் பழுத்தொழுகுதேவதருவே பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (1) தெரிவாகவூர்வன நடப்பனபறப்பன செயற்கொண்டிருப்பன முதற் றேகங்களத்தனையு மோகங்கொள்பௌதிகஞ் சென்மித்தவாங்கிறக்கும் விரிவாயபூதங்க ளொன்றொடொன்றாயழியு மேற்கொண்டசேடமதுவே வெறுவெளிநிராலம்ப நிறைசூன்யமுபசாந்த வேதவேதாந்தஞானம் பிரியாதபேரொளி பிறக்கின்றவருளருட் பெற்றோர்கள்பெற்றபெருமை பிறவாமையென்றைக்கு மிறவாமையாய்வந்து பேசாமையாகுமெனவே பரிவாயெனக்குநீ யறிவிக்கவந்ததே பரிபாககாலமலவோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (2) ஆராயும்வேளையிற் பிரமாதியானாலு மையவொருசெயலுமில்லை. யமைதியொடுபேசாத பெருமைபெறுகுணசந்த்ர ராமெனவிருந்தபேரு நேராகவொருகோப மொருவேளைவரவந்த நிறைவொன்றுமில்லாமலே நெட்டுயிர்த்துத்தட் டழிந்துளறுவார்வசன நிர்வாகரென்றபேரும் பூராயமாயொன்று பேசுமிடமொன்றைப் புலம்புவார்சிவராத்திரிப் போதுதுயிலோமென்ற விரதியருமறிதுயிற் போலேயிருந்துதுயில்வார் பாராதிதனிலுள்ள செயலெலாமுடிவிலே பார்க்கினின்செயலல்லவோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (3) அண்டபகிரண்டமும் மாயாவிகாரமே ய்ம்மாயையில்லாமையே யாமெனவுமறிவுமுண் டப்பாலுமறிகின்ற வறிவினையறிந்துபார்க்கி னெண்டிசைவிளக்குமொரு தெய்வவருளல்லாம் லில்லையெனுநினைவுமுண்டிங் கியானெனதறத்துரிய நிறைவாகிநிற்பதே யின்பமெனுமன்புமுண்டு கண்டனவெலாமல்ல வென்றுகண்டனைசெய்து கருலிகரணங்களோயக் கண்மூடியொருகண மிருக்கவென்றாற்பாழ்த்த கர்மங்கள்போராடுதே பண்டையுளகர்மமே கர்த்தாவெனும்பெயர்ப் பக்ஷநானிச்சிப்பனோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற ப்ரிபூரணானந்தமே. (4) சந்ததமுமெனதுசெய னினதுசெயலியானெனுந் தன்மைநினையன்றியில்லாத் தன்மையால்வேறலேன் வேதாந்தசித்தாந்த சமரசசுபாவமிதுவே யிந்தநிலைதெளியநா னெக்குருகிவாடிய வியற்கைதிருவுளமறியுமே யிந்நிலையிலேசற் றிருக்கவென்றான்மடமை யிதசத்ருவாகவந்து சிந்தைகுடிகொள்ளுதே மலமாயைகன்மந் திரும்புமோதொடுவழக்காய்ச் சென்மம்வருமோவெனவும் யோசிக்குதேமனது சிரத்தையெனும்வாளுமுதவிப் பந்தமறமெய்ஞ்ஞான தீரமுந்தந்தெனைப் பாதுகாத்தருள்செய்குவாய் பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (5) பூதலயமாகின்ற மாயைமுதலென்பர்சிலர் பொறிபுலனடங்குமிடமே பொருளென்பர்சிலர்கரண முடிவென்பர்சிலர்குண்ம் போனவிடமென்பர்சிலபேர் நாதவடிவென்பர்சிலர் விந்துமயமென்பர்சிலர் நட்டநடுவேயிருந்த நாமென்பர்சிலருருவ மாமென்பர்சிலர்கருதி நாடிலருளென்பர்சிலபேர் பேதமறவுயிர்கெட்ட நிலையமென்றிடுவர்சிலர் பேசினருவென்பர்சிலபேர் பின்னுமுன்னுங்கெட்ட சூனியமதென்பர்சிலர் பிறவுமேமொழிவரிவையாற் பாதரசமாய்மனது சஞ்சலப்படுமலாற் பரமசுகநிஷ்டைபெறுமோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே (6) அந்தகாரத்தையோ ரகமாக்கிமின்போலென் னறிவைச்சுருக்கினவரா ரவ்வறிவுதானுமே பற்றினதுபற்றா யழுந்தவுந்தலைமீதிலே சொந்தமாயெழுதப் படித்தார்மெய்ஞ்ஞான சுகநிஷ்டைசேராமலே சோற்றுத்துருத்தியைச் சதமெனவுமுண்டுண்டு தூங்கவைத்தவரார்கொலோ தந்தைதாய்முதலான வகிலப்ரபஞ்சந் தனைத்தந்ததெனதாசையோ தன்னையேநோவனோ பிறரையேநோவனோ தற்காலமதைநோவனோ பந்தமான துதந்த வினையையேநோவனோ பரமார்த்தமேதுமறியேன் பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (7) வாராதெலாமொழிய வருவனவெலாமெய்த மனதுசாக்ஷியதாகவே மருவநிலைதந்ததும் வேதாந்தசித்தாந்த மரபுசமரசமாகவே பூராயமாயுணர வூகமதுதந்தாதும் பொய்யுடலைநிலையன்றெனப் போதநெறிதந்ததுஞ் சாசுவதவானந்த போகமேவீடென்னவே நீராளமாயுருக வுள்ளன்புதந்தது நின்னதருளின்னுமின்னு நின்னையேதுணையென்ற வென்னையேகாக்கவொரு நினைவுசற்றுண்டாகிலோ பாராதியறியாதமோனமேயிடைவிடாப் பற்றாகநிற்கவருள்வாய் பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (8) ஆழாழிகரையின்றி நிற்கவிலையோகொடிய வாலமமுதாகவிலையோ. வக்கடலின்மீதுவட வனனிற்கவில்லையோ வந்தரத்தகிலகோடி தாழாமனிலைநிற்க வில்லையோமேருவுந் தனுவாகவளையவிலையோ சப்தமேகங்களும் வச்ரதரனாணையிற் சஞ்சரித்திடவில்லையோ வாழாதுவாழவே யிராமனடியாற்சிலையு மடமங்கையாகவிலையோ மணிமந்த்ரமாதியால் வேண்டுசித்திகளுலக மார்க்கத்தில்வைக்கவிலையோ பாழானவென்மனங் குவியவொருதந்திரம் பண்ணுவதுனக்கருமையோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே. (9) ஆசைக்கொரளவில்லை யகிலமெல்லாங்கட்டி யாளினுங்கடன்மீதிலே யாணைசெலவேநினைவ ரளகேசனிகராக வம்பொன்மிகவைத்தபேரு நேசித்துரசவாத வித்தைக்கலைந்திடுவர் நெடுநாளிருந்தபேரு நிலையாக்வேயினுங் காயகற்பந்தேடி நெஞ்சுபுண்ணாவரெல்லாம் யோசிக்கும்வேளையிற் பசிதீரவுண்பது முறங்குவதுமாகமுடியு முன்னதேபோதுநா னானெனக்குளறியே யொன்றைவிட்டொன்றுபற்றிப் பாசக்கடற்குளே வீழாமன்மனதற்ற பரிசுத்தநிலையையருள்வாய் பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூரணானந்தமே (10) |