இறைவற்குத் தக்க விறுமாப் பெனுமொழி யின்றியொரு மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக் குறைவற்ற நெற்கொண் டுலகேற் றுனைப்பலி கொள்ளுமரன் பெறவுற் றனையனை யேகுன்றை வாழும் பெரியம்மையே. | 1 |
பத்தர்க்கு நெஞ்ச மலர்மீ திருத்திப் பயந்துகொடுஞ் சித்தர்க் ககற்றுநின் பாதாம் புயமொரு செஞ்சிலைமேல் வைத்தற்கு மெண்ணி மதியுடையே னென்பன் வார்சடையான் பித்தர்க்குத் தங்குண நூலினுஞ் செம்மை பெரியம்மையே. | 2 |
இழைபொறுத் தாற்பொறை தானென்ப ரானல் லிசைப்புலவர் மழைபொறுத் தார்புனன் முக்காற் பொறுக்கும் வழக்கதுண்டே யுழைபொறுத் தார்நல் லியற்பகை யார்மனைக் குற்றவொரு பிழைபொறுத் தாய்நன்று காண்குன்றை வாழும் பெரியம்மையே. | 3 |
கையன்று தாமரை கண்ணன் றிளமென் கயலெனவே பொய்யன்று கங்கையை நீரென்று சாதிப்பர் போர்விடையார் மெய்யென்று நீகொண் டிரேலற லாயினென் மென்கையிடைப் பெய்யென்று பின்னை யறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே. | 4 |
பொனவாங்கு செஞ்சடைப் பாம்புகள் சுற்றும் புதுமதியி னன்வாங்கு கோடு கிழிக்கு நகுவெண் டலைபடுங்கன் முன்வாங்கு மெந்தைநின் பாதாம் புயத்தின் முடிவணங்கிற் பின்வாங்கி நில்லன்ன மேகுன்றை வாழும் பெரியம்மையே. | 5 |
கடிந்து மென்றரு மீதிருப் பாரெனக் கங்கையென்பாண் முடிநரு வேறி யிருந்தனள் வேனின் முதிர்விலத னடியடை வாரெனச் சங்கரன் பாங்க ரமர்ந்தனைநீ பிடிநடை யேகுயி லேகுன்றை வாழும் பெரியம்மையே. | 6 |
நின்போ லிலரரு ளாளரென் றேசொல நின்கொழுந னென்போ னொருவன் மகன்பூங் கழுத்தி யீர்வலென்றே யன்போர் சிறிது மிலனாகப் போக வதற்கிசைந்து பின்போய் விடாதுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே. | 7 |
செச்சை மலர்புரை வானொடு மேனி திறந்துகொண்டு கச்சை யரவொன் றசைத்துக் கபாலங் கரத்தெடுத்துப் பச்சை மயிலனை யார்மனை தோறும் படர்ந்திரக்கும் பிச்சை யொழிகென் றொருவார்த்தை சொல்லெம் பெரியம்மையே. | 8 |
சோதிப் பதியன்றி வேறொரு தெய்வந் தொழுதற்கில்லை யோதிற் பிறரென வச்ச முறாம லுயிர்களெல்லா நீதிப் புதல்வர்க ளாயின வாதவி னீகொள்கற்புப் பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே. | 9 |
நின்னேய நாயக னென்றிருப் பாய்நினை நீத்தகன்று தன்னேரில் பூவணத் தேயன்று போய்ச்செய்த தன்மையெலாஞ் சொன்னே னலேனினி நின்னோ டொளிப்பதென் சொல்லுவன்யான் பின்னே தெனக்குத் தருவாய்தென் குன்றைப் பெரியம்¬மாய. | 10 |
நற்றவத் துன்னைப் பெறுமலைக் கென்னமுன் னல்கியுனைப் பற்றுறக் கொண்ட தெலும்பே யணியும் பழமலைதான் சற்றெனக் கையந் தராதுசொன் னும்மலைச் சாதியுள்ள பெற்றவர்க் கென்ன முலைவிலை குன்றைப் பெரியம்மையே. | 11 |
கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தால்லுலகி னற்றாண் மகற்பெறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப் பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே. | 12 |
கரிய யிடறுடைப் பெம்மான் கரத்துழைக் கன்றொடுமோ ரரிய முடியம் புலியோடு மேவிளை யாடுகின்றாய் தெரிய வரிய பதினா லுலகுமென் சிற்றிலென்பாய் பெரியவ ளென்ப துனக்கேது குன்றைப் பெரியம்மையே. | 13 |
தண்ணா ரிதழி புனைவான் விழியிணை தம்மனைகள் பண்ணா வழிக்குமென் றோநின் றிருமுக பங்கயத்திற் கண்ணா யினருனக் கவ்வலை மாதுங் கலைமகளும் பெண்ணா ரமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே. | 14 |
உள்ளத் துறுபிணி யேற்கு மருந்துக்கென் றுன்னைவந்து மௌ¢ளத் தொழவுந் திருமுலைப் பான்மெல் விரனுதியாற் றெள்ளித் துளியள வாயினுந் தொட்டுத் தெறித்திலையுன் பிள்ளைக்குங் கிள்ளைக்கும் பால்கொடுத் தாலென் பெரியம்மையே. | 15 |
ஆறாத துயர்கொண் டடியேன் சலிப்ப வதுசெவியி லேறாம லேயிருந் தாலென்செய் வேனெங்க ளீசற்கொரு கூறாகி யண்ட முதலா யிளமை குலவுதவப் பேறாகி வாழபவ ளேகுன்றை வாழும் பெரியம்மையே. | 16 |
நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன் றருமிரு நாழிநெல்லால் வினைமாட்சி கொண்டுயி ரெல்லா மளித்தருண் மேன்மையினான் மனைமாட்சி யெய்து முனக்கே பெருங்கற்பு மாட்சியன்றிப் பினைமாட்சி யார்க்குண் டுலகீன்ற குன்றைப் பெரியம்மையே. | 17 |
நெடிய விலங்க லொருசிலை யாக்கிய நின்பததிமேற் கொடிய வநங்கன் சிலைபோ யெடுத்துமுன் கொண்டெதிர்ந்த வொடிவி லருஞசிலைச் செங்கரும் போசொல் லுனதுநடுப் பிடியு ளடங்கிய தென்னிது குன்றைப் பெரியம்மையே. | 18 |
பண்டகு வீணை யொடுபாட வந்தவப் பாமடந்தை கண்டழு மாறு மதிநிரை போலக் கவின்கனியும் வெண்டலை மாலை கிடந்தொளிர் தோளிக்கு வீங்குமுலைப் பெண்டகை மாமணி நீகுன்றை வாழும் பெரியம்மையே. | 19 |