2237 |
ஆண்டவிநாயகர்துதி. சிதவாரணங்குமுறுந்துறைமூழ்கித்திருமறையோ ரிதவாரணங்குலவச்செய்யிடைமருதீசனென்றோ மதவாரணங்குமுலைபாகற்பாடுதற்காண்டபெரு மதவாரணங்குவலயங்கொண்டாடும்வரந்தருமே. | 1 |
2238 |
குருவணக்கம். 2238. பெரும்புங்கவர்புகழ்கோமுத்திவாழ்சுப்பிரமணிய வரும்புங்கவன்பதம்யான்றொழவென்கையருட்குறியொன் றிரும்புங்கரையவெடுத்தளித்தானதையேத்தல்செய்வேன் கரும்புங்கனியுமெனவன்புசாருங்கதியுமுண்டே. | 2 |
2239 |
திருவருந்தாமரைமேலாருமாயசிறப்பினர்க ளிருவருந்தாமரைநாட்டேடிக்காண்பிலிடைமருத வொருவருந்தாமரைபோலுழலாமலுவந்தெனையா டருவருந்தாமரைவேண்டேனிதரசமையத்தரே. | 1 |
2240 |
சமையத்தவரையிகழாந்தற்போதந்தடிந்துசெம்பொ னிமையத்தவரையெடுத்தவிடைமருதீச்சுரரை யுமையத்தவரையரையோர்ந்துதம்மையுமோர்ந்தருள்பெற் றமையத்தவரையடிமலர்தாழ்ந்துள்ளடங்குறினே. | 2 |
2241 |
அடக்கந்தரத்தரைமேற்பயிலாமன்பருளடையா மடக்கந்தரத்தரையென்றாழிநல்கவருகொடிய விடக்கந்தரத்தரைமேவிடைமாமருதூரின்மென்புற் றடக்கந்தரத்தரையெவ்வாறுநாஞ்சென்றுசார்வதுவே. | 3 |
2242 |
சாராததென்னைதமைவிழைந்தாரைவிண்டாங்குதலிற் சோராததென்னையிடைமருதீசர்தந்தூமனமு மோராததென்னையொருவேள்சமருமுடற்றியென்றுந் தீராததென்னைதரக்கரம்வீசுறுந்திங்கள்வந்தே. | 4 |
2243 |
வந்தித்தவரையயன்மால்வந்திக்கவிண்வைப்பவரைச் சிந்தித்தவரையிடைமருதீரென்றுந்தீயமதின் முந்தித்தவரையெடுத்தீரென்றுந்திண்ணர்மொய்செருப்புக் கந்தித்தவரையுடையீரென்றுஞ்சொலக்கற்றனமே. | 5 |
2244 |
கற்றனமாலையிடைமருதூரரைக்கம்பவென்று முற்றனமாலைவயலாருங்கோமுத்தியும்பவென்றுஞ் சொற்றனமாலைமின்னாரம்பராயென்றுஞ்சொற்றிடநாண் விற்றனமாலையிராவதவாழ்க்கையும்வேண்டலமே. | 6 |
2245 |
வேண்டாதவரைவிழையாதவரைவிழைந்தெனுள்ளத் தீண்டாதவரையிடைமருதீசரையென்றுமன்பே பூண்டாதவரையரையரையக்கரைப்போந்துகொடி தீண்டாதவரையுறைவாரையன்றியொர்தெய்வமுண்டே. | 7 |
2246 |
உண்டலங்காரவன்னாயாயத்தாரொடுமுற்றுச்செய்த வண்டலங்காரவுற்றேனென்றுகூறியொர்மாரனொப்பா னெண்டலங்காரமனையாரிடைமருதீசர்க்கொல்லாக் கண்டலங்காரகனைப்போற்பறித்திவள்கைத்தந்ததே. | 8 |
2247 |
தந்தவளக்கரிகொங்கையொண்பாம்பல்குல்சங்கங்கள நந்தவளக்கரியன்றுதருநஞ்சநாட்டமிய லந்தவளக்கரியான்கோலமாகியறமுயன்று முந்தவளக்கரியானிடைமாமருதூர்முதலே. | 9 |
2248 |
முதலைப்பரவைதருநஞ்சமுண்டமுதல்வமண மதலைப்பரவையிடைமருதூரவிண்வாழ்க்கைபெற்ற சிதலைப்பரவையகந்தாழ்வன்மீகசிறியனென்றும் விதலைப்பரவையழுந்தாதுகாத்தலுன்மெய்யருளே. | 10 |
2249 |
மெய்யருளத்தனைநண்மருதூரனைவீணர்க்கெல்லாம் பொய்யருளத்தனையீயானைமாரிப்புயல்சமழ்க்கப் பெய்யருளத்தனையும்முடையானைப்பெரிதெண்ணினோஞ் செய்யருளத்தனையாறாறுந்தீர்த்தருடேவனென்றே. | 11 |
2250 |
தேவவருக்கம்பணிவானயனரிதீர்தருநாண் மேவவருக்கவெலும்பணிவான்விழைகங்கைமங்கை நோவவருக்கஞ்சடையேற்றினானன்னுதல்வதன மேவவருக்கன்மதியழலான்வைப்பிடைமருதே. | 12 |
2251 |
மருதவனத்தனிடைமுதலாங்கடைமன்னியவுள் கருதவனத்தனரிமுதலோருங்கழிந்தபெரு விருதவனத்தன்விண்மண்முடிந்தாலும்விளங்கவனெற் கொருதவனத்தன்மையனெனவோதுமெம்மொண்ணுதலே. | 13 |
2252 |
ஒண்ணுதலானைகரந்தீர்ந்தவர்க்கொளியைப்புரவு பண்ணுதலானையுகைப்பானைத்தன்னுருப்பற்றுருவென் றெண்ணுதலானையெனையாண்டவனையிடைமருதூர்க் கண்ணுதலானைக்கருதார்பிறப்பிற்கரங்கணன்றே. | 14 |
2253 |
கரமனகத்தையுறுநாயுமற்றொளிகால்கனக வாமனகத்தைவளைத்தபிரானிடைமாமருதப் புரமனகத்தையலர்பணிபூண்டுழல்புன்மையரப் பரமனகத்தைமுழக்காரடைந்தபவத்தினுமே. | 15 |
2254 |
பவம்பலவாயினுமாகவெனக்குவிண்பற்றுகன கவம்பலவாயினுநல்லவகற்றுவல்லாமுருடர்க் குவம்பலவாயினுந்தீதில்லிடைமருதூர்குறுகுந் தவம்பலவாயினுமென்றொருஞானந்தலைப்படினே. | 16 |
2255 |
தலையுமடியுமிசைகிழக்கார்பியறாங்கப்பெற்றே அலையுமடியுமதளாரிடைமருதார்நமனார் குலையுமடியுமென்னாதருள்வார்நஞ்சுகொண்டிலரே னிலையுமடியும்படைப்புமடியுநெடுநிலத்தே. | 17 |
2256 |
நிலங்காவலவென்றுமேதக்கவதமிழ்நேயத்தின்மிக் கலங்காவலவென்றுபோலொளிர்வாய்கவியாய்கொடையின் மலங்காவலவென்றுபாடாமலேயிடைமாமருதூர்த் தலங்காவலவென்றுமுள்ளாயென்றீசனைச்சார்மின்களே. | 18 |
2257 |
சாரலங்கற்றைநினைந்துசெலாவெனத்தானங்கிழி வேரலங்கற்றையொளிக்கயிலாயத்தும்வேட்கைமிக வாரலங்கற்றையலாள்பாகன்வாழ்மத்தியார்ச்சுனத்தை யோரலங்கற்றையையோவறிதேபொழுதோட்டுவமே. | 19 |
2258 |
ஒடுங்கனகமுமொன்றார்கொண்மன்றுமுபரிகையென் றாடுங்கனகமுஞ்சேரிடைமாமருதூரண்ணலைப் பாடுங்கனகமுமுண்டாகுமின்பப்பயனென்பது நீடுங்கனகமுமொவ்வாவருள்வந்துநேர்நிற்குமே. | 20 |
2259 |
நிற்குநடக்குமிருக்குநின்னாடனெறியனைத்துங் கற்குநடக்கும்படியெவனென்றுகருதியுள்ளத் தற்குநடக்குமிடைமருதூரவத்தாணியிருப் பிற்குநடக்குமுலாவிற்குங்காமுற்றவென்மயிலே. | 21 |
2260 |
என்னாவியன்னமணிமிடற்றானையிமையவர்தோய் துன்னாவியன்னமலியிடைமாமருதூரனைச்சொ னன்னாவியன்னமவென்குழல்பாகனைநாடினர்போன் மன்னாவியன்னமடமாதர்மேவுமிவ்வைகலிலே. | 22 |
2261 |
வையம்பரவவிடைமருதூர்வதிவார்வரைவாய்க் கையம்பரவமெனக்கொடுவேடர்கலப்பருள நையம்பரவலரிப்பானிற்பானெனினண்ணவனு தையம்பரவவருதியித்தானந்தராதிபனே. | 23 |
2262 |
தரங்கந்தருவல்விடமூணிடைமுதல்சார்மருதே புரங்கந்தருவமறையுடைதோறில்லங்காடுபொலி யரங்கந்தருவமைவாழ்க்கையர்யாருமடிமையென்னிற் றரங்கந்தருவகைசெய்யும்பிதாவிவர்செய்கைநன்றே. | 24 |
2263 |
நன்றாவிருக்கினுந்தீதாவிருக்கினுநல்லருளே யொன்றாவிருக்கினுமோராவிடைமருதூரன்செய்கை யென்றாவிருக்கினும்பாலேயிகபரமெய்துங்குணக் குன்றாவிருக்கினுமாலாதியரிதுகொள்வரிதே. | 25 |
2264 |
அரியரவிந்தன்மகவான்முதலியரஞ்சலிக்க வரியரவிந்தம்புனைவாரிடைமருதூரர்வரைக் குரியரவிந்தமடவாள்பொருட்டிங்ஙனுற்றுச்சொல்லும் பெரியரவிந்தமுயலூனுந்தேனும்பெறுகைநன்றே. | 26 |
2265 |
பெற்றங்குலவவிடைமருதீசர்பிறங்குமறு குற்றங்குலவக்கரங்குவித்தாளிவ்வொருபிழைக்காச் சுற்றங்குலவமடமாதரம்பறுணியப்பொன்செ யிற்றங்குலவவெளிப்பட்டுளாளென்னிளங்கொடியே. | 27 |
2266 |
இளங்கொடியானவுமைபாகன்வாழுமிடைமருத வளங்கொடியானஞ்செயேன்பூசநீர்த்துறைவாஞ்சைவையேன் களங்கொடியானலைவேனையையோவென்னகன்மந்திரு வுளங்கொடியானனினைத்ததென்னோவொன்றுமோர்கிலனே. | 28 |
2267 |
ஓராதவனையிருட்புகுத்தானையுணர்தலில்லார்ச் சாராதவனையொருபாகனைத்தங்கிடைமருதம் பேராதவனைப்பெயருகென்றாலுமென்பேதைநெஞ்சந் தீராதவனைமயிலொடுவாழுந்திறனெவனே. | 29 |
2268 |
திறப்பாவனையமனமோரணுத்துணைசெப்பலென்ன மறப்பாவனையமனமிலையோவிடைமாமருதுஞ் சிறப்பாவனையமருதருந்தேவியுந்தேவிடையு மறப்பாவனையக்கொடுவைகலென்னுளடக்கியதே. | 30 |
2269 |
அடத்தருமன்றண்டங்கொண்டமராற்றியலக்கணைந்தும் விடத்தருமன்றண்டங்கொண்டாடவந்துவிலக்குதுயில் வடத்தருமன்றண்டமென்னிடைமாமருதூரவின்னு நடத்தருமன்றண்டவுஞ்செய்யவேண்டுமிந்நாயினையே. | 31 |
2270 |
நாயகத்தன்மைகொளச்சிலர்நாணிலர்ஞாலமுற்று மேயகத்தன்மைவிழியொருபாகனிடைமருத னாயகத்தன்மைவிளக்கவிரங்கியரியகண்ட வாயகத்தன்மையுறநஞ்சங்கொண்டவலிகண்டுமே. | 32 |
2271 |
கண்டனங்கோலம்வருமாமுயல்வுங்கண்டங்கறுப்பும் பெண்டனங்கோலமெய்வாழ்வுந்தலைப்பெருக்கத்தொடையு முண்டனங்கோலமடமாரிடைமருதூருறையு மண்டனங்கோலமலையானுமூவருளண்டனன்றே. | 33 |
2272 |
அண்டத்திருப்புநரலையிலாகியடர்ந்தவிடங் கண்டத்திருப்புமண்ணாதியபூதங்கலங்கிலய மண்டத்திருப்புவதுசூலமேனண்மருதர்மதித் துண்டத்திருப்புவனமான்றவனைத்துணைபவரே. | 34 |
2273 |
துணைத்ததனத்தியொருபாகர்மாண்டுதொலைந்ததன்னோ பணைத்ததனத்தியெனான்வாள்கொடுத்தவன்பால்விருப்ப ரணைத்ததனத்திரளென்னாவியார்நண்மருதரவா வுணைத்ததனத்தினுழலாதருளெற்குதவுவரே. | 35 |
2274 |
உதவாதவரையுபகாரரொன்றுங்கல்லாதவரு சிதவாதவரைவெலுங்குரவோரெனவேத்திறந்த புதவாதவரைப்புகழாநும்வாயிதுபோக்கியொரீஇ மதவாதவரையிடைமருதூரரைவாழ்த்துமினே. | 36 |
2275 |
வாழ்த்தாதவாயுமிடைமருதூரர்மலரடிப்பாற் றாழ்த்தாதவாயுந்தலையுமுன்னாத்தனிநெஞ்சுந்தள்ளு மூழ்த்தாதவாயுமறுப்பாங்குணமுமுலகத்தில்லாப் பாழ்த்தாதவாயுமெனக்கேபிரமன்படைத்தனனே. | 37 |
2276 |
படைப்பருந்தானையிடைமருதூரர்பதம்பணியார் கிடைப்பருந்தானைசிதராகக்கொண்டுகெழுமுசெல்வப் புடைப்பருந்தானையர்வீடுகடோறும்புக்குண்டுபுலான் முடைப்பருந்தானையுடம்போம்பிநிந்தைமொழிகுவரே. | 38 |
2277 |
மொழிவருங்கூற்றநல்லார்தமைப்பேசிமுனிந்துசினங் கொழிவருங்கூற்றமுமெண்ணார்பரரிற்குறுகியுண்டே யிழிவருங்கூற்றமுமில்லாரிடைமருதீசனெந்தைக் கொழிவருங்கூற்றமுதனீள்கருணைபெற்றுய்வதென்றே. | 39 |
2278 |
என்றுவருந்துமதுதீர்ந்தின்பெய்தியிருப்பன்மிளிர் மின்றுவருந்துதிவேணியிடைமருதூரன்விடைக் குன்றுவருந்துகளிலானடியர்குழாங்குறுகி நன்றுவருந்துபணியாற்றியுள்ளநலமடைந்தே. | 40 |
2279 |
நல்லங்கமலைசிராப்பள்ளிகாஞ்சிநணாகுடந்தை வல்லங்கமலைவயற்றில்லைவாழிடைமாமருதூர் சொல்லங்கமலைபவரெற்றுறைசையிலாண்டிலரே லொல்லங்கமலைவறக்கோடிகொள்ளினுமுய்தியுண்டே. | 41 |
2280 |
உய்தியவாயகுணமேலிடைமருதூர்ப்பரனை எய்தியவாயவொருநானடைந்தனனென்றிருத்தல் செய்தியவாயடையாத்தெருச்சூழ்ந்துதெரிசிமலர் கொய்தியவாயமலன்றாள்புனைந்துகொண்டாடுநெஞ்சே. | 42 |
2281 |
ஆட்டிற்குவந்தவிதியெவனோவன்றியானைகொன்றான் றோட்டிற்குவந்தமுறினுமறாநசைதோன்றவெறி நாட்டிற்குவந்தமையும்மன்றிலேறனகைதருமென் பாட்டிற்குவந்தவிடைமருதூரன்பனிவரைக்கே. | 43 |
2282 |
வரையாதவரைமகட்பேசல்வேட்டுவருகுநருக் குரையாதவரைமறுத்தலொல்லாதின்னுமுத்தமர்க்குக் கரையாதவரையிருட்கரவொத்திடுங்காவலபொன் னரையாதவரையிடைமருதூரரணிவரைக்கே. | 44 |
2283 |
அணியாமருவியிடைமருதீசரமர்ந்தருளு மணியாமருவிவழங்குங்குற்றாலவரைக்கணன்றித் தணியாமருவியனாரமெங்குண்டுதரிற்கவரேங் கணியாமருவியவாமருதாயிற்கவருதுமே. | 45 |
2284 |
கவராததில்லைகடவுளரேனுமென்கையதிதற் குவராததில்லையுளாருட்டுறவுளைலைகுறிகொள் ளவராததில்லையுளேன்கொளல்வேண்டுமென்னாரணங்கே யுவராததில்லையிடைமருதீசனொருவரைக்கே. | 46 |
2285 |
ஒருவரையூழியங்காதுசெய்வான்கொலுளங்குறித்தல் மருவரையூழியலர்தரச்சூழிடைமாமருதூ ரிருவரையூழியராக்கொளுமீசனிறையவன கருவரையூழியளவும்வசைக்கதிர்வேலருக்கே. | 47 |
2286 |
வேலவன்றந்தையிடைமருதீசன்விரிந்தமறை நாலவன்றந்தையுறழிடைபாகன்வெந்நஞ்சங்கண்டு மாலவன்றந்தையறவுண்டுமாலவன்வாழச்செய்தான் மூலவன்றந்தையெனக்குபதேசமொழிந்தனனே. | 48 |
2287 |
மொழிமனங்காயமைதீர்தரநண்ணுபுமொய்த்தவலஞ் சுழிமனங்காயமைமெய்பாதியென்றவன்சொற்றநன்னூல் வழிமனங்காயமைதுஞ்சில்லிடைமருதூர்வசிப்பாங் கழிமனங்காயமைசாராதுமுத்திகலப்புறுமே. | 49 |
2288 |
கலந்தநலாரையிகழ்வார்வெம்போலிக்கவிபுகழ்வார் குலந்தநலாரைப்பரர்கொளவேங்கிமெய்திகூசிச்சில ரலந்தநலாரையிடைமருதூரிலடைந்திறைஞ்சா துலந்தநலாரையவிப்பாரிலுண்டுண்டுழலுவரே. | 50 |
2289 |
வரந்தந்தவரைபெறநாவல்வாய்வழங்கிச்சிலம்பிக் குரந்தந்தவரையிடைமருதீசரையுன்னினர்போற் சுரந்தந்தவரைவனந்தந்தமாந்தழைதூமொழிக்கா யிரந்தந்தவரைதெனவரைகாறுமிலங்கியதே. | 51 |
2290 |
இலங்கியவேதமுதனடுவீற்றுமிடைமருதுந் துலங்கியவேதம்பலத்தொளிமுத்தலைத்தூக்கிரிவாய்க் கலங்கியவேதநடுவந்தயானைகடிந்தவர்க்கோ மலங்கியவேதமுகிலினின்றார்க்குமணமுரசே. | 52 |
2291 |
2291. மணமதலையுமரவுமுள்ளானிடைமாமருதூர்க் கணமதலையும்பவந்தீர்க்கவைகுமுக்கட்கடவுள் குணமதலையும்பலுஞ்சேயுமாகக்கொண்டான்மிடற்று வணமதலையுந்தலின்றேலின்றாகுவர்மாலயனே. | 53 |
2292 |
அயனாகமஞ்சுநிகர்மேனிமாயவனாகமற்று மியனாகமஞ்சுபடையானுமாகவிடைமருது தயனாகமஞ்சுபெறத்துதித்துப்பணிந்தேதழைந்தார் வியனாகமஞ்சுகுணத்தாய்ந்துவேண்டிலர்வீணர்களே. | 54 |
2293 |
வீணாவுடலமெடுத்தனன்யான்பெருவிண்ணவர்த மேணாவுடலமிடைமருதீசரிகலினர்போற் கோணாவுடலமதன்வருவான்மணிகொண்டலைக்கும் பூணாவுடலமளியிற்றுயிலும்பொருந்திலதே. | 55 |
2294 |
பொருந்தாதவரைதெனவாழ்புரமடுபுண்ணியர்நன் கிருந்தாதவரைப்புரப்பாரிடைமருதூரிலிரு ளருந்தாதவரைநிகர்வார்நந்துன்பமறிந்திலரால் திருந்தாதவரைகொல்லோவவர்திண்ணியசிந்தனையே. | 56 |
2295 |
சிந்தனையாதும்வறிதுசெலாமற்செலுத்திநமன் வந்தனையாதுநரகதுதானென்முன்வாய்நிரம்பக் கந்தனையாதுதிநண்மருதூரவெனக்கலப்பிற் பந்தனையாதுவிடுமோவிடாதவிப்பாரகத்தே. | 57 |
2296 |
பாராதரித்தவிடைமருதூரற்குப்பாரகமே தேராதரித்தகலமரவாசெழுந்திங்களொடு நீராதரித்தசடைமேலிருப்பென்றுநெட்டுயிர்ப்பாள் பேராதரித்ததுயரமெஞ்ஞான்றிவள்பேர்ப்பதுவே. | 58 |
2297 |
பேர்ப்பதுமத்தவிடைமருதூர்நல்குபெற்றியும்வெள் ளேர்ப்பதுமத்தவருக்குமலமருளேனுமையர் போர்ப்பதுமத்தகரித்தோலுடைபுலித்தோறெரிந்தும் வார்ப்பதுமத்தவளைநிகர்வாள்பெருமால்கொளுமே. | 59 |
2298 |
பெருமாலையனையிடைமருதூர்க்குடிபேணுங்கொன்றைத் திருமாலையனையெண்ணாதவர்செல்லுஞ்செலவிற்செல்வி கருமாலையனைவருநீப்பவேதிலொர்காளைபின்செ றருமாலையனைவிலையைகொள்வெய்யதனியிடமே. | 60 |
2299 |
இடந்தந்தவளைநெடுமான்முயன்றுமெய்தாக்கழற்கீழ்க் கிடந்தந்தவளையிடைமருதூர்கெழுமிற்கிடைக்கு நடந்தந்தவளைவுடனேயணுகுநமனகலு மடந்தந்தவளையனமுண்டெம்மானைவழுத்துதுமே. | 61 |
2300 |
வழுத்துப்படருமிடைமருதூர்வதிவான்முளைமேற் கொழுத்துப்படரும்வரலருங்கூற்றங்கொன்றானருளாம் விழுத்துப்படரும்பெரியானவன்புகழ்மெய்யன் றியோர் எழுத்துப்படருமதிப்புமுண்டாகுங்கொலெங்களுக்கே. | 62 |
2301 |
எங்கடந்தேயவனிதாழிடைமருதெவ்வகைத்தன் மங்கடந்தேயவழிமல்கவைகும்வல்லானணிற்கோ பங்கடந்தேயவ்வினுண்மையுமோர்ந்துபகருமலச் சங்கடந்தேயவொன்றாதொன்றுமுத்திதலைப்படுமே. | 63 |
2302 |
படமாசுணத்தையணிவாரிடைமருதிற்பயில்வார் திடமாசுணத்தையலர்பாற்பயிக்கஞ்சென்றார்தயிர்பாற் குடமாசுணத்தையெடுத்தாட்டவாடுங்குழகருணா விடமாசுணத்தையமைகுழையேலிவர்மேன்மையென்னே. | 64 |
2303 |
என்னாயகனையிடைமருதானையிமையவர்க்கு முன்னாயகனைகடனஞ்சமுண்டமுதலவனை மன்னாயகனையவாங்கியவாவென்றுன்மாண்புதபத் துன்னாயகனைதருமலமாசுந்துணிதருமே. | 65 |
2304 |
துணிந்தாரையன்றிகழுங்கூடற்சோதிபொற்றூயமுடிக் கணிந்தாரையன்றினரூரெரித்தான்கஞ்சக்கண்ணிற்றம்மை யணிந்தாரையன்றிகிரியான்றெழுநண்மருதடைந்து பணிந்தாரையன்றியெவர்காணுயர்வுபடைத்தவரே. | 66 |
2305 |
படைத்தவராகமுழுதும்பசலைபகலருங்கே ளுடைத்தவராகமுடையவராகவுஞற்றுங்கொலோ புடைத்தவராகந்தொழுமிடைமாமருதூரர்பொற்றா ளிடைத்தவராகப்பணிந்தேத்தெடுப்பினல்வேத்தலொன்றே. | 67 |
2306 |
ஒன்றியம்பக்கவர்பாங்கவிடைமருதூரர்வெற்பே நன்றியம்பக்கமயிலிடமாமியனஞ்சநமன் வென்றியம்பக்கமனைதுறவேகொங்கைமென்மருங்கு லென்றியம்பக்ககுடும்பசந்நியாசமிருட்கதிரே. | 68 |
2307 |
கதிரங்கதிர்க்கும்பருப்பதத்தான்றிருக்காளத்தியா னதிரங்கதிர்க்குமிடைமருதூரனடிகட்கன்பு பிதிரங்கதிர்க்குமுனமிருளாநம்பிணியைச்செய்தா முதிரங்கதிர்க்குமுடம்பிலினிக்குறையொன்றிலையே. | 69 |
2308 |
இலைமலருமிடைமருதூரரையெய்தியங்கைத் தலையுமலரும்பணியென்றுகொண்டுதவாதிறைப்பா முலையுமலருநலராவர்கூற்றமுடன்றுவிடு நிலையுமலருமுறலாவரியாவுநிரம்பிடுமே. | 70 |
2309 |
நிரம்பாசமன்றுகுறுமூரலான்மதினீறுசெய்தார் திரம்பாசமன்றுபெற்றாயென்றுதீர்த்தருள்செல்வர்வறுங் கரம்பாசமன்றுகொளாவிடைமாமருதூரிடையா யிரம்பாசமன்றுகளிலாநின்மெய்யுறுப்பியாவையுமே. | 71 |
2310 |
யாவருமங்கைகுவிக்கவிடைமருதின்னமர்வார் தேவருமங்கையருமாடுகாளத்தித்தெண்சுனைவாய் மேவருமங்கைதெனத்தோன்றியீர்த்துவெளிவிடுத்தார் தாவருமங்கைத்தவராயிவளுய்தரற்பொருட்டே. | 72 |
2311 |
தரங்கந்தரங்கவெழுவிடமூண்சலசத்தவன்மா லிரங்கந்தரங்கப்பெருந்தானந்தில்லையிடைமருதே புரங்கந்தரங்கற்றமாதவர்வாழ்பொருப்புக்கயிலை திரங்கந்தரங்கடுப்பாள்பாதியாளெங்கள்செல்வனுக்கே. | 73 |
2312 |
செல்லத்தனையுமிவர்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தை வில்லத்தனையுமணியரவத்துவிளங்கியைமால் பல்லத்தனையுந்திடைமருதப்பைங்கிளியையன்றி நல்லத்தனையுமனையையுந்தேர்கிலநானிலத்தே. | 74 |
2313 |
நிலாவையரவைமுடிக்கணிந்தார்நிகழ்சேரரரு ளுலாவையரவைவியக்கும்புலமையரொண்மைவிழாக் குலாவையரவைகிடைமருதூர்க்குறியைக்குணம கலாவையரவையமாதேவகாவெனக்கற்றனமே. | 75 |
2314 |
கற்றவருக்கங்கலவேனென்புன்சொலுங்கைக்கொளுவா னற்றவருக்கங்கமோதியிடைமருதூரைநண்ண லுற்றவருக்கங்குமுன்னிற்பவனிமையோர்க்கிறைவன் வெற்றவருக்கமதலையிற்சூடும்விதியெண்ணினே. | 76 |
2315 |
எண்ணத்திருந்தவிடைமருதூரெய்தியெல்லைதொழா வெண்ணத்திருந்தகரத்தேக்கரனைவிரிந்தமனங் கண்ணத்திருந்தவடியேன்பெற்றேன்கைவிடினுடனே நண்ணத்திருந்தவறேலென்பன்யானுநலமுறவே. | 77 |
2316 |
உறவனிகலனெனறவக்கூறதையுள்ளங்கொள்ளேன் மறவனிகலனென்றோதுவரேயிடைமாமருத லறவனிகலனரிசெய்தகோனடிக்கன்புறினப் புலவனிகலனெனநினையாள்வன்பொறுப்புவைத்தே. | 78 |
2317 |
பொறுத்தவளகத்தடமாரிடைமருதிற்புலிடை சிறுத்தவளகத்திற்றேசாஞ்சிவன்பொற்சிலம்பிலிலா மறுத்தவளகலைமாமதியுப்பக்கமன்னவென்பாற் கறுத்தவளகத்திருள்வந்துகூடலென்காரிகையே. | 79 |
2318 |
காரம்பரந்தவழாநிற்குங்கொன்றைகஞலியபூ ணாரம்பரந்தமுலையாயினும்வந்தடைந்திலரே சீரம்பரந்தவிடைமருதூருறைசெல்வரெங்க ளேரம்பரந்தமுறாத்தந்தையார்வெற்பிறையவரே. | 80 |
2319 |
இறையவனையிடைமாமருதூரனையேய்ந்தசெம்பட் டுறையவனையிடையாளொருபாகனையொண்முழக்க நிறையவனையிடையாரணமார்தில்லைநேயனைநான் மறையவனையிடையாதேழ்பிறப்பும்வணங்குதுமே. | 81 |
2320 |
வண்டாரவாயைந்தருநிதிதேனுவுமானுங்கொல்லோ வண்டாரவாயைதெனவடையாத்தில்லையாளியின்சொ லொண்டாரவாயைமணந்திடைமாமருதூரினல்கும் பண்டாரவாயைத்தகர்த்தானதுவுநம்பாக்கியமே. | 82 |
2321 |
2321. பாக்கியமாவதுவேறிலையென்றுபகரச்சொற்றேன் வாக்கியமாவதுவையாள்பெருநலமாமுலையே தேக்கியமாவதுசூழ்மத்தியார்ச்சுனஞ்சேருமிடம் யோக்கியமாவதுலாவென்றுசேர்மினொருவனையே. | 83 |
2322 |
ஒருவனையாறுவிழைவான்பிறரையுறாதபெருந் திருவனையாறுதவிர்மத்தியார்க்கனத்தேனனுரு வருளனையாறுமையாறுமெட்டானனைத்துக்கொள்பெருங் கருவனையாறுசெயக்காப்பிவனன்றிக்காப்பிலையே. | 84 |
2323 |
காமாவகலவரிநீயினிதென்றுங்கஞ்சனெனு நாமாவகலப்புவியளப்பாயென்றுநல்கியபூந் தேமாவகலவிடைமருதாவென்றுசிந்தைசெயி னாமாவகலறுணிவன்றிக்கூற்றமடைவதற்கே. | 85 |
2324 |
அடையம்புயனைத்திருமாலைப்பாங்கரமைத்தகொன்றை மிடையம்புயனையிடைமருதூரனைமேவுகிலா ருடையம்புயனைகருமேனிக்கூற்றமுற்றாலதற்குக் கடையம்புயனைதருமானமானிற்கலங்குவரே. | 86 |
2325 |
கலங்கச்சினந்துநமன்றூதர்வந்தெனைக்கைக்கொளுங்கால் விலங்கச்சினந்துமுதலியமார்ப்பவிடையில்வம்மோ பலங்கச்சினந்துவர்முற்பூண்முலையொருபாகவலி வலங்கச்சினந்துதியாரிடைமாமருதூர்வள்ளலே. | 87 |
2326 |
வள்ளலைக்குங்குமக்கொங்கையள்பாகனைவாவியன்னப் புள்ளலைக்குங்குலநீரிடைமாமருதூர்புகுந்தே யுள்ளலைக்குங்குலுவொப்பப்புகையொழியாவின்பென விள்ளலைக்குங்குவலாற்றருமோரிடம்வேறிலையே. | 88 |
2327 |
வேறாகவந்தநமன்கூற்றுவாவில்லவாவளவா வாறாகவந்தமடித்தான்றொழுமிடைமாமருதூர்ப் பேறாகவந்தமுழுதும்பசுபதிபேணொருநீ கூறாகவந்தவிரார்சிலமூடக்குருடர்களே. | 89 |
2328 |
குருக்கத்திமாலைக்குழலாளிடைமருதூர்குறுகி வெருக்கத்திமாலையுறநீள்விழியுறக்கண்டனளாந் திருக்கத்திமாலையிராவதமஞ்சச்செயிர்த்தவரைப் பெருக்கத்திமாலைவருமுனமார்த்துப்பிறங்கிடுமே. | 90 |
2329 |
பிறங்கும்பரவையனலினுந்தோன்றுபெருவிடத்தா லுறங்கும்பரவைபுரந்தானிடைமருதூரன்கலாத் திறங்கும்பரவைமனைநடந்தானருளேய்ந்திலமேற் கறங்கும்பரவையமேற்போஞ்சகடமுங்காண்பிறப்பே. | 91 |
2330 |
பிறவானவரையிடைமருதூர்க்கன்புபேணலின்றி யுறவானவரைவெண்ணீற்றினிலாசையொருங்கவிக்குந் துறவானவரைமறந்தொழியாதுள்ளஞ்சூழுவனே லறவானவரையுகைப்பார்க்கடிமையலனலனே. | 92 |
2331 |
அல்லையப்பகமற்றோர்நான்குமற்றுனையாருணர்வார் நெல்லய்ப்பாகமழ்முல்லையப்பாதில்லைநேயவப்பா சொல்லையப்பாகமுறாவெனுலாவுங்கொடூயவகல் வில்லையப்பாகவமாலாவிடைமருதூர்விளக்கே. | 93 |
2332 |
விளங்கவிதனையுணர்நெஞ்சமேசற்றுமெய்ம்மையிலே னிளங்கவிதனையுமேற்றபிரானிடைமாமருதத் துளங்கவிதனையுமீவானவன்பாலுமைமலத்து களங்கவிதனையுநீங்காதுகாக்குங்கருணையளே. | 94 |
2333 |
கரியவரையைச்சுவணவரையைமெய்க்கண்ணிருத்தும் பெரியவரையையொருபாகர்பேணுமிடைமருதந் தெரியவரையைமுறிநமன்சேர்கிலன்செய்சினமும் பொரியவரையைக்கடவானுமாவனிப்பூதலத்தே. | 95 |
2334 |
பூத்தமருந்துதிசாலிடைமாமருதம்புகழேஞ் சோத்தமருந்துதியென்னுமைபாதந்தொழுதுருகி யேத்தமருந்துதிவாவுமிரவுமென்றெம்பரன்சீர் யாத்தமருந்துதியென்னாமற்கூற்றமறைந்திலமே. | 96 |
2335 |
அறையாகமனமமைந்ததெனக்கதனாலருளு மறையாகமனந்தவோராதுபின்னும்வயங்குபத்தி முறையாகமனல்லறிவாமுளைத்திடுமாவடுதண் டுறையாகமனவிடைமருதூருறைசுந்தரனே. | 97 |
2336 |
2336. சுந்தரநந்தமிடைமருதார்தந்தைதூயரென்று கந்தரநந்தந்தரஞ்சொலப்பெற்றகருணையினா ரந்தரநந்தவிடமுண்டுளாரருள்வார்மலமா செந்தரநந்தவுயர்சிவலோகமதெய்துவமே. | 98 |
2337 |
துவரவலஞ்சுழியேரகமாப்பாடிசூதத்துறை யிவரவலஞ்சுழிகோமுத்திகாழியிலங்குதில்லை கவரவலஞ்சுழியாரூருடனிரும்பூளைகண்டீர் குவரவலஞ்சுழிகொள்ளிடைமாமருதன்கொளலே. | 99 |
2338 |
கொள்ளவரையும்படருறுத்தாதின்பங்கூட்டியதா னள்ளவரையும்பர்மேறசெய்மகாலிங்கநாதருல கெள்ளவரையும்பழிபாவஞ்சறறிலிடைமருதர் தெள்ளவரையுமொண்குஞ்சிதமாயதிருவடியே. | 100 |