1709. |
கற்பகப்பாவடிவாரணம்பாற்கடந்தோன்செந்தமிழ்க் கற்பகப்பாவடிவாரணங்கண்டவர்கோனருள்வி கற்பகப்பாவடிவாரணங்கார்மலர்க்காமொய்தில்லைக் கற்பகப்பாவடிவாரணம்யான்பெறக்காட்டிடுமே. |
1710. |
திருவம்பலவமருந்தடையுந்தபச்சேர்தரும்பி திருவம்பலவமருந்தநெஞ்சேசிவஞானத்தின்மு திருவம்பலவமருந்தடஞ்சோலைதிகழுந்தில்லைத் திருவம்பலவமருந்தனையாற்றுதிசெய்தினமே. | 1 |
1711. |
தினந்தினமேவரியாரம்பலஞ்சிந்தியோஞ்செழுமுத் தினந்தினமேவரியாரம்பணைத்தில்லைசேர்ந்திலம்பத் தினந்தினமேவரியாரம்படாமுலைசேர்விருப்பத் தினந்தினமேவரியாரம்பனீயென்றுதேர்வரின்றே. | 2 |
1712. |
இன்னம்பரம்பரனேகதங்காவதத்தீசர்தில்லை இன்னம்பரம்பரனேர்விழிபாகரென்பார்க்கிறையே இன்னம்பரம்பரனேபிறைதோணிகொலென்னமுடி இன்னம்பரம்பரனேதுயராதருளின்னருளே. | 3 |
1713. |
அருகாதவத்தலைவாதில்லையம்பலத்தாடியடி அருகாதவத்தலைவாரொடுறாதருள்வாயெனக்கும் அருகாதவத்தலைவாசிகையாயென்றறைவல்புத்தா அருகாதவத்தலைவாவென்பிரேலுமையாட்டுவனே. | 4 |
1714. |
வனசங்குவளையலர்பணைசூழ்தில்லைவாணவென்செய் வனசங்குவளையலர்படராவகைமாற்றுங்கழல் வனசங்குவளையலர்பயிலேநலம்வாடுறப்பாய் வனசங்குவளையலர்படுவீரையும்வாய்விடுமே. | 5 |
1715. |
வாய்ப்பணியாகமஞ்சாரருணெக்குமனநனிநை வாய்ப்பணியாகமஞ்சாற்றியவாசெய்வர்மாண்பினரை வாய்ப்பணியாகமஞ்சார்பொழில்சூழ்தில்லைவாணநின்றாள் வாய்ப்பணியாகமஞ்சாலாச்சிலர்கருவன்றலையே. | 6 |
1716. |
தலைமாலையாவம்பதிதில்லையாய்வளியைத்தழன்மு தலைமாலையாவம்பயிலேச்செய்தாய்சந்தக்கால்கொடுமு தலைமாலையாவம்பலர்மொழியாதழலம்புவிம்மு தலைமாலையாவம்பலையென்றுநீங்குமென்றார்க்குழலே. | 7 |
1717. |
தாராதரிக்குமழும்விழுஞ்சோருந்தனிமதிதண் தாராதரிக்குமழுவமுஞ்சீறுந்தமியுணர்போர்த் தாராதரிக்குமழுங்கச்செயுமெங்கடையலைக்கே தாராதரிக்குமழுவாவருடில்லைத்தற்பரனே. | 8 |
1718. |
பரமாதவர்பணிநாடர்பொன்னாடர்பதுமர்பொன்னம் பரமாதவர்பணிநாதபொல்லார்கரும்பாரிடையம் பரமாதவர்பணிநாவடையாவகைபாலிப்பதோர் பரமாதவர்பணிநாகமென்பாதில்லைப்பண்ணவனே. | 9 |
1719. |
வனவலங்கற்புயமாயோனெஞ்ஞான்றும்வணங்குதில்லை வனவலங்கற்புயர்மாதுறையாதிடம்வைத்தவயவ் வனவலங்கற்புயனேர்குழற்பேதைக்குமன்மதன்செய் வனவலங்கற்புயங்கத்துயிர்ப்பாய்த்தென்வளிநந்துமே. | 10 |
1720. |
நந்தாதரத்தகரவித்தையோசெயுநாடகத்தால் நந்தாதரத்தகரவித்தையற்கஞர்நன்கருள்வாய் நந்தாதரத்தகரவித்தையார்கணயக்கவென்றா நந்தாதரத்தகரவித்தைமன்றுணடிப்பவனே. | 11 |
1721. |
பவளங்கருமையனேரெனுமேனிப்பயல்வரையுற் பவளங்கருமையனேயெனநல்குபண்பாமகளென் பவளங்கருமையனேயகறில்லைப்பதிநிகரின் பவளங்கருமையனேகங்கொன்றாலும்பயத்தலின்றே. | 12 |
1722. |
இன்றாதரங்கம்புரைபவமுற்றதினுமொழிந்தது இன்றாதரங்கம்புரைபடையம்பவிரும்பொழிற்பூவ் இன்றாதரங்கம்புரைவானதிச்செயுமேர்கொடில்லை இன்றாதரங்கம்புரைதீர்மன்றாவருளெற்கடிக்கே. | 13 |
1723. |
கடவாரணங்கடையார்ப்பமண்ணாள்வரொண்கட்டிரும கடவாரணங்கடையார்பின்கலப்பர்கதிபரியாக் கடவாரணங்கடையார்புரந்தீத்தகணைமெய்முலைக் கடவாரணங்கடையார்ச்சடையார்தில்லைகண்டவரே. | 14 |
1724. |
கண்டங்கரியன்றுவர்மேனியன்றில்லைக்கட்பொலிவோன் கண்டங்கரியன்றுசாராதபாதன்கரிசறுத்தென் கண்டங்கரியன்றுதிவெற்பர்பொய்த்தனர்கட்டுரைய கண்டங்கரியன்றுகொல்லோவித்தெய்வமுங்கார்க்குழலே. | 15 |
1725. |
காக்கைக்குளவிடைமாறின்றிவருங்கதியெனவங் காக்கைக்குளவிடைமாறும்பவமன்றுகைதொழின்மண் காக்கைக்குளவிடைமாவாய்கழுமலங்காசிகச்சி காக்கைக்குளவிடைமாமருதூருங்கலந்தவனே. | 16 |
1726. |
கலங்காமரிக்குமயற்குமெட்டான்கொன்றைகண்ணுறினி கலங்காமரிக்குமயற்குணநிற்குங்கரத்துவளைக் கலங்காமரிக்குமயற்குலப்பேச்சுங்கழியுமயங் கலங்காமரிக்குமயற்குதவிற்றில்லைக்காரிகையே. | 17 |
1727. |
காரிகையாதவவியாக்கியதில்லைக்கண்ணிருவி காரிகையாதவன்பல்லுகநீட்டியைக்காமுற்றெங்கள் காரிகையாதவநோமேயுயிர்த்தென்னைக்காய்வதுசங் காரிகையாதவமோவென்றுவேண்முன்கரைதருமே. | 18 |
1728. |
கரவரைக்கொன்றடியார்க்கருடில்லைக்கடவுட்குநீள் கரவரைக்கொன்றடியாரதள்போர்வையொண்காம்பினைநி கரவரைக்கொன்றடியார்நகத்தோலுடைகண்டுமா கரவரைக்கொன்றடியாவுலேர்மகள்காமுறுமே. | 19 |
1729. |
காமாவடுவனவம்பகத்தாள்பங்கன்கஞ்சம்வில காமாவடுவனவம்பகலற்கருங்கண்ணிதருங் காமாவடுவனவம்பகமன்றணுகாரின்மயங் காமாவடுவனவம்பகலாயிக்கடையைவிட்டே. | 20 |
1730. |
கடையாவஞ்சாவரும்பப்புரிவாரிகரியவன்வென் கடையாவஞ்சாவருமேவானைக்காலிற்கடுங்கண்டகங் கடையாவஞ்சாவருந்தாவுழல்வேன்மன்றிற்கண்டுதொழேன் கடையாவஞ்சாவருகென்றுவெங்கூற்றங்கடுகுமுன்னே. | 21 |
1731. |
கடுகத்தனையன்புரிகடும்போர்கணிறைத்திடவ கடுகத்தனையன்புலையேன்விண்ணோர்கழியாதயின்றான் கடுகத்தனையன்புலியூரன்குஞ்சிதக்கான்மலர்க்குக் கடுகத்தனையன்புமில்லேனெவ்வாறுகதியுறலே. | 22 |
1732. |
கதங்காமநந்தியங்காமம்மர்தீர்ந்தருட்காப்பிடையே கதங்காமநந்தியங்காதுமுண்டோவினைகாலைச்சுற்றங் கதங்காமநந்தியங்காவறடாதுமெய்காட்டொழியங் கதங்காமநந்தியங்காவிமன்றாகறைக்கண்டத்தனே. | 23 |
1733. |
தனக்கோங்கரும்புமடவார்முயக்கிற்றலைப்பட்டுநந் தனக்கோங்கரும்புவிலானிலென்பீரத்தருக்கதெனுந் தனக்கொங்கரும்புகர்தீர்வதென்றோசிற்சபைநடிப்பான் தனக்கோங்கரும்புகழ்வாசிகையாற்குச்சரண்புகுமே. | 24 |
1734. |
சரம்பலவாணன்றென்றிக்கிறையென்னவெய்தார்வெஞ்சித்த சரம்பலவாணன்றென்கார்தாங்குகூடற்றலைவனுயிர்ச் சரம்பலவாணன்றென்கான்முழவாபடைகங்களம சரம்பலவாணன்றென்றேத்துபொற்பாதன்றரான்கொன்றையே. | 25 |
1735. |
தரையாவிரதந்தடவரையாதவர்தாபதமா தரையாவிரதந்தபுத்ததென்பாவணிதாரெனும்பந் தரையாவிரதந்தவிர்முத்தர்வம்மின்சபைக்கென்றுகந் தரையாவிரதந்தரநடிப்பாய்மகடற்கிரங்கே. | 26 |
1736. |
இரங்காதமரவடியார்பணிசெய்திலமென்றொராய் இரங்காதமரவடியார்கொலென்னவெங்குந்திரிந்தெய்த்து இரங்காதமரவடியார்மலர்தருமீர்ந்தில்லைசேர்ந்து இரங்காதமரவடியார்வெஞ்சூலவென்னேமென்னிரே. | 27 |
1737. |
ஏதாயினுமினியாயறநல்கென்றிரப்பநல்க ஏதாயினுமினியாயமென்பாரிலையென்பரிறை ஏதாயினுமினியாயம்புயலிவரிற்றில்லையைய் ஏதாயினுமினியாயகற்றப்புல்லிணக்கமதே. | 28 |
1738. |
தேவாரமாதிருவாசகமாயைசெறேனடைந்தேன் தேவாரமாதிருவாசகமாசெயுஞ்செய்யுள்குயத் தேவாரமாதிருவாசகமாறெழுந்தில்லையமு தேவாரமாதிருவாசகமாற்றிச்சிற்றம்பலத்தே. | 29 |
1739. |
அம்பலவவம்பலவாகதிர்க்கழித்தாயெனுநேய் அம்பலவாவம்பலவாகுளிரெனுமாய்மணமீது அம்பலவாவம்பலவாவெனவிண்ணறைபொழில்சூழ் அம்பலவாவம்பலவாவெனுமெம்மருமணியே. | 30 |
1740. |
மணக்கோலஞ்செய்யதிருமேனியார்செய்யவந்திலர்வேண் மணக்கோலஞ்செய்யவருமேபவமெனுமைக்குழம்பு மணக்கோலஞ்செய்யமருமனஞ்சூழ்தில்லைவாழ்த்திலராய் மணக்கோலஞ்செய்யநல்கூர்ந்திருப்பாரின்மதித்தெனையே. | 31 |
1741. |
மதியாதவனங்கிவாள்விழியாய்நல்வழிச்செலச்சம் மதியாதவனங்கிநீயங்கம்யானெனும்வாய்மையையுண் மதியாதவனங்கிரிக்கீழுறமன்றவாணவருண் மதியாதவனங்கிளர்மறையோன்றெழுமாநடனே. | 32 |
1742. |
மானநந்தாதவிரகர்கள்வாழ்தில்லைவாணவிழி மானநந்தாதவிரகவிதழ்க்குழல்வாமவிலா மானநந்தாதவிரகருண்மேயமன்னாகுழைச்சு மானநந்தாதவிரகம்பிரமவழியெனக்கே. | 33 |
1743. |
என்றாமதியாதவன்சுடக்காரணமெற்குநலம் என்றாமதியாதவன்மதன்பூங்கணையீருமினி என்றாமதியாதவன்மணிகண்டனிங்கெய்தத்தடை என்றாமதியாதவன்றாழ்மன்றன்னளிரங்குறுமே. | 34 |
1744. |
இரங்கத்தனித்தனியாயமென்னோவென்னிடத்தினும்வய் இரங்கத்தனித்தனியாயதன்முற்குறிலேய்பவனுய் இரங்கத்தனித்தனியாயமன்றெண்ணலரிற்பதியாய் இரங்கத்தனித்தனியாயமிலான்பின்மினேகினளே. | 35 |
1745. |
நள்ளாறுதிக்குமகிழ்பதியார்தில்லைநாடகமால் நள்ளாறுதிக்குமயிர்மாலைத்துத்தநகைமுத்தநீர் நள்ளாறுதிக்குமறல்குழல்வேல்கணகுநலத்தி நள்ளாறுதிக்குமரிக்கோடுகொங்கைநண்பாநங்கைக்கே. | 36 |
1746. |
நங்கைக்கரியவரமார்பன்றாழ்தில்லைநன்னகர்ம நங்கைக்கரியவரதனம்போலுநடநவில்வோன் நங்கைக்கரியவரநேர்கட்கொங்கைநன்றென்றுவந்தூர் நங்கைக்கரியவரஞ்செய்யுமாலையுநன்குதந்தே. | 37 |
1747. |
தந்தவரைவரையாருமையைச்செய்தகுமறைவி தந்தவரைவரையானனர்வாரித்தடஞ்சிலைமி தந்தவரைவரையாதாண்டவர்தில்லைத்தாண்டவர்தோந் தந்தவரைவரையாம்வெலநல்குவர்தாம்வரமே. | 38 |
1748. |
வரநகரம்பதம்வன்னிமப்பூதம்வயிறுவநல் வரநகரம்பதம்பூண்டோள்சிதுடிவதனமிந்தீ வரநகரம்பதம்பாலிக்குந்தில்லைவண்கைமுடிய வரநகரம்பதம்போல்வானில்லான்மன்றவாணனுக்கே. | 39 |
1749. |
வாளாவிருந்தவர்தூற்றுவராமுண்மடலுமுடை வாளாவிருந்தவர்வாங்குவனாமதன்வைதுமுனி வாளாவிருந்தவர்கேட்பவுமன்னைநின்மாலைமணி வாளாவிருந்தவர்காளெனுந்தில்லைமன்னாதரினே. | 40 |
1750. |
தருக்கம்பலவிடவாய்கொடுபேசுவந்தாழ்குழன்மா தருக்கம்பலவிடவாண்மைவிழியென்றுசாற்றுவமுத் தருக்கம்பலவிடவார்முலையாய்மறைதன்முடியில் தருக்கம்பலவிடவாவெங்ஙனேகதிசாருதுமே. | 41 |
1751. |
சாரம்பலமுறைநூலுமிதேயெனச்சாற்றுமென்வி சாரம்பலமுறைவேடரிற்கூடித்தளர்மனமா சாரம்பலமுறையார்சிவகங்கைத்தடம்படிதி சாரம்பலமுறைசாங்காறுங்கூத்துத்தரிசித்திடே. | 42 |
1752. |
சிற்றம்பலங்கண்டுபோற்றேன்மின்னார்கள்செவ்வாய்தருமெச் சிற்றம்பலங்கண்டுபோலக்கொள்வேன்சிந்தையுந்திகைத்தெஞ் சிற்றம்பலங்கண்டுமுன்னாண்டுகோடிசிலைச்சிலைக்கோர் சிற்றம்பலங்கண்டுயர்படையாற்செய்தசேவகனே. | 43 |
1753. |
கனக்கந்தரத்தனமலைபங்காளன்களிமயில்வா கனக்கந்தரத்தனமலைக்குநீர்த்தில்லைக்கண்விடைப்பா கனக்கந்தரத்தனமலைநதியற்கைத்தார்புனன்மு கனக்கந்தரத்தனமலைபுன்காடிக்கலைபவரே. | 44 |
1754. |
கலையாவனவளவாத்தில்லையாய்கமழ்குங்குலியக் கலையாவனவளவாழ்மனைச்செல்கைதொடுவெனப்பு கலையாவனவளவாவுதியாகைதவாவிடவுள் கலையாவனவளவானினைச்சார்ந்தெனைக்காத்தருளே. | 45 |
1755. |
காதரங்காதரமாயமின்னார்கண்புரியமயங் காதரங்காதரமாதர்கள்சூழ்தில்லைக்கண்டிசைமு காதரங்காதரமாநிலமாக்குதிகாவென்வளைக் காதரங்காதரமாய்நமையாள்வர்கருதுநெஞ்சே. | 46 |
1756. |
கருமங்கருமங்கணம்பரமாககழியக்கழுவுங் கருமங்கருமங்கணம்பரமாகடிந்தாண்முகினி கருமங்கருமங்கணம்பரமாகலைமான்றிசைமு கருமங்கருமங்கணம்பரமாகம்பலக்கனியே. | 47 |
1757. |
கனியக்கனியமனந்துதியாங்கைதொழாமெங்ஙன்றீக் கனியக்கனியமனந்தும்பதன்றில்லைக்கண்ணமர்நக் கனியக்கனியமனந்துயிர்யாவையுங்காமரிடக் கனியக்கனியமனந்துடியான்கடுங்கோதெமக்கே. | 48 |
1758. |
கோவாகுளத்துமுழுமுதலேபொறிக்கூட்டநலங் கோவாகுளத்துமுழுவயற்சோற்றுங்குழையுமைய கோவாகுளத்துமுழுவலன்பீந்துகைக்கொண்டருள்வேட் கோவாகுளத்துமுழுகென்றதில்லைக்குணமலையே. | 49 |
1759. |
மலையானிலங்கம்பலவுடைப்பாம்பின்வருமெவரோ மலையானிலங்கம்பலராயென்றேவினர்வாடும்வெண்க மலையானிலங்கம்பலமில்படையான்வணங்கிடத்த மலையானிலங்கம்பலநடங்கண்டமடமயிலே. | 50 |
1760. |
மடங்கலையாதரியாநிறப்பூண்பன்றிவன்கொம்புக மடங்கலையாதரியாப்புலித்தோலிடமன்றுகண்டு மடங்கலையாதரியானானைமேவுவள்வன்னியின்மும் மடங்கலையாதரியாதேகுமோமதன்வாளிகளே. | 51 |
1761. |
வாளம்பரவையகிலம்பணிமன்றவள்ளுகிர்தோல் வாளம்பரவையகிலம்படாதுவன்றொண்டர்முனி வாளம்பரவையகிலம்படாமுலைவாழ்வித்தவா வாளம்பரவையகிலம்பராவுமெய்வாழ்வருளே. | 52 |
1762. |
அருத்தமருத்தமென்றேயுழல்வேந்துப்பொரைம்பொறிக்கும் அருத்தமருத்தமென்றேரிற்புரியுமென்னாமுதனூல் அருத்தமருத்தமென்றேங்குழல்பாகரடியர்க்கெளிய அருத்தமருத்தமென்றேய்மன்றிற்கூத்தென்றருளுவரே. | 53 |
1763. |
வருந்தவருந்தநமன்செறுமென்னமலத்துவெய்ய வருந்தவருந்தநமன்றதுவாமுன்மண்ணீர்கொண்மின்றே வருந்தவருந்தநமன்றோழமன்றும்வட்காருயிர்க வருந்தவருந்தநமன்னாப்பொன்னாவெனெம்மான்றுணையே. | 54 |
1764. |
மானம்பரம்பரமென்றொழிப்பார்கண்மருங்குன்முலை மானம்பரம்பரவோங்கலொப்பார்பொதுமாதரில்வா மானம்பரம்பரவாயொருவாதுறைமாட்சியினம் மானம்பரம்பரன்வான்றில்லையோவவர்தம்மதிக்கே. | 55 |
1765. |
தமனியமன்றமலரோன்முனோர்தொழத்தானிற்குமுத் தமனியமன்றமர்வ்ந்தெனைப்பற்றத்தடுத்திவன தமனியமன்றமச்செய்கையிலாளில்ற்றாழையுமங்க தமனியமன்றமற்றென்னாதுதான்செயும்பேரருளே. | 56 |
1766. |
பேரம்பலம்பலகாற்சூழ்தரேம்பித்தடிமையென்றும் பேரம்பலம்பலங்கோதியிவணின்றுபேரெனினும் பேரம்பலம்பலமாவிச்சித்தேமுதற்பின்னடைநாப் பேரம்பலம்பலவீன்பொழிலூர்தில்லைபெற்றபொன்னே. | 57 |
1767. |
பொன்னம்பலவன்மலக்கருங்குன்றைப்பொடித்திநிறப் பொன்னம்பலவன்மலர்கதிராழிப்புவியிரத பொன்னம்பலவன்மலர்க்குழல்பாகவென்னாம்புலியூர்ப் பொன்னம்பலவன்மலங்கொழித்தீயுங்கொல்பொற்பதமே. | 58 |
1768. |
பதஞ்சலியாதவனேர்விளங்கும்புலிப்பாதர்தொழப் பதஞ்சலியாதவனேநடித்தற்குன்பதமென்றுவாய்ப் பதஞ்சலியாதவனேராக்கைதீயதுபாழ்மனமென் பதஞ்சலியாதவனேசிப்பவென்றுகண்பார்த்தருளே. | 59 |
1769. |
பாரத்தனமலைபாகனசொற்கமையாசைபற்றென் பாரத்தனமலைபாகனல்லேன்முதற்பாற்சுவடை பாரத்தனமலைபாகனடாவுடபரியிரதப் பாரத்தனமலைபாகனமன்றன்பரிவதென்றே. | 60 |
1770. |
பரவரியக்கவணங்கேமுகில்கற்பறையரியம் பரவரியக்கவணங்கேசெயலெழும்பற்றுடைப்பொற் பரவரியக்கவணங்கேள்வரெய்தப்பகழிகலம் பரவரியக்கவணங்கேடின்மன்றற்பரவுதுமே. | 61 |
1771. |
பரமானந்தத்தையனாக்கொண்டெல்லாம்படைப்பானுமற்றம் பரமானந்தத்தையநடுக்கட்சொற்றிருப்பண்பனுந்தா பரமானந்தத்தையயர்வானென்பானும்பற்றாவெனக்கும் பரமானந்தத்தையருள்வானுந்தில்லைப்பதிப்பரனே. | 62 |
1772. |
பரவம்பரவத்தவரோடுறவும்பண்ணேங்கடுவெப் பரவம்பரவத்தவறடைவார்ப்பற்றுவாமன்றநம் பரவம்பரவத்தவத்தலைவாவம்பலவபொன்னம் பரவம்பரவத்தவர்சிலையாயென்றும்பாடிலமே. | 63 |
1773. |
பாடகந்தண்டையலையுணவென்னுட்பதிபதம்பூண் பாடகந்தண்டையலைவாமம்வைத்தவன்பல்புலவோர் பாடகந்தண்டையலைமோதிண்டைத்தடம்பாவுதில்லைப் பாடகந்தண்டையலைநமன்றோன்றுமுன்பற்றினனே. | 64 |
1774. |
பற்றினகரனுக்குத்தகரப்புரிபண்பற்குமான் பற்றினகரனுக்குத்தகரய்யனப்பற்குத்தில்லைப் பற்றினகரனுக்குத்தகரக்குழல்பாகற்கெனம் பற்றினகரனுக்குத்தகரற்கிதப்பட்டனனே. | 65 |
1775. |
பட்டவம்போருகந்தானங்கொடில்லைப்பரமநுதற் பட்டவம்போருகந்தானடக்காக்கயம்பைத்தவிழும் பட்டவம்போருகந்தானடல்வேளென்படுமயிலூர் பட்டவம்போருகந்தானறைந்தாலும்படுதலின்றே. | 66 |
1776. |
தலத்ததிகம்பரஞானமயசிற்சபையென்றுநு தலத்ததிகம்பரவூண்படைபள்ளியன்றாழுங்கண்ணு தலத்ததிகம்பரவோரேனுயவிவ்வுயிர்தழற்பா தலத்ததிகம்பரமில்லதென்றாளத்தகுநினக்கே. | 67 |
1777. |
தகரானனந்தக்கனுக்கியைத்தான்கலர்தம்மலக்கல் தகரானனந்தக்கவின்மன்றன்வெற்பிற்றவர்கழைப்பா தகரானனந்தக்கடுமாவழங்குந்தனிவழிப்போ தகரானனந்தக்கவர்வருவாரென்கொல்சாற்றுவதே. | 68 |
1778. |
சாதனமாயவைநன்றினிலேனைச்சமனடவஞ் சாதனமாயவைவேல்விழியார்மயற்றாழ்தருநெஞ் சாதனமாயவைதாநரகென்னுமுனஞ்சத்தியோ சாதனமாயவைதென்புலியூரநின்றண்ணருளே. | 69 |
1779. |
தண்டாதரித்தநமனென்னையாண்முன்றடவரைக்கோ தண்டாதரித்தநமப்பவுண்ணென்றளித்தாய்வெள்ளிவே தண்டாதரித்தநமன்பணைசூழ்தில்லைச்சங்கரவோ தண்டாதரித்தநமக்களைந்தாளுகைதக்கதுவே. | 70 |
1780. |
வேதப்பரியவிலங்கஞ்சப்பாகன்விடுவையஞ்சு வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்சொன்மின்விடைத்தே வேதப்பரியவிலங்கஞ்சப்பாகண்டபுண்ணிலருள் வேதப்பரியவிலங்கஞ்சப்பாகஞ்செய்மன்றத்தனே. | 71 |
1781. |
மன்றலங்காரப்புரிசடையாரிமவான்மகளை மன்றலங்காரப்புரிபரனாரிருண்மாய்தரவ மன்றலங்காரப்புரிதில்லையாரெனைவைப்பரிய மன்றலங்காரப்புரிதலந்தீர்த்தருள்வான்றலமே. | 72 |
1782. |
வானம்பவனந்தனஞ்சயனீர்குவலயமுமா வானம்பவனந்தனஞ்சயன்மான்மடியாமலயில் வானம்பவனந்தனஞ்சயஞ்சூழ்தில்லைமன்னிவளர் வானம்பவனந்தனஞ்சயற்போய்வைப்பன்மன்னருளே. | 73 |
1783. |
மனம்பாலனையமடமொழியாரிடைமாழ்குறக்கா மனம்பாலனையமடங்காத்துயரின்மன்னாமலிய மனம்பாலனையமடங்கலிற்சீறிவருமுனைங்கை மனம்பாலனையமடற்கொன்றையாயென்பமன்றஞ்சென்றே. | 74 |
1784. |
மனம்பாவரியம்புயங்கநின்றாளிற்பொன்மாதரிற்க மனம்பாவரியம்புயங்கறைகேட்பமுய்வாங்கொல்பொறி மனம்பாவரியம்புயங்கடுக்கைப்பரமன்றப்பெரு மனம்பாவரியம்புயங்கலந்தாற்கருமாமணியே. | 75 |
1785. |
மாதங்கமடங்கல்சேர்வழிநள்ளிருள்வாய்ப்பொறைமண் மாதங்கமடங்கல்வாயரவொப்பர்வருவர்கொல்பூ மாதங்கமடங்கல்விச்சாலையார்தில்லைமன்சுரர்த மாதங்கமடங்கல்பூண்பவன்காளத்திமால்வரைக்கே. | 76 |
1786. |
வரைவனஞ்செய்யுந்தடமுஞ்சுலாங்கமலைவன்குற வரைவனஞ்செய்யுந்தடங்கழுக்குன்றுறைமன்றுடையான் வரைவனஞ்செய்யுந்தடவுவில்லாயினிமாழ்கவுனை வரைவனஞ்செய்யுந்தடக்கெனையுவ்வுமொய்வார்முரசே. | 77 |
1787. |
வாரிக்குவளையும்வண்ணம்பயின்றுமதன்பன்மலர் வாரிக்குவளையும்வண்ணம்படப்பெய்வதுசொல்வரு வாரிக்குவளையும்வண்ணம்பதமென்வன்மூரியருள் வாரிக்குவளையும்வண்ணம்பயின்மறைமன்றடைந்தே. | 78 |
1788. |
அடையம்புயங்கலந்தானச்சுதற்குமரியநின்றாள் அடையம்புயங்கலந்தானரவாய்பவவாரழல்வாய் அடையம்புயங்கலந்தானஞ்சலென்றருளையநின்கை அடையம்புயங்கலந்தானங்கொளிங்கென்றருண்மன்றனே. | 79 |
1789. |
அரும்பாவருந்தனமாகமுளைத்திலவம்பன்முல்லை அரும்பாவருந்தனமாகண்டிலாளயலான்பின்புதீய் அரும்பாவருந்தனமாகக்கொள்ளாமன்றத்தாடியமர் அரும்பாவருந்தனமாகவினூரடைந்தாள்சுரத்தே. | 80 |
1790. |
தேயம்பலதிரியாக்கவன்றாட்டியர்சேற்கணரந் தேயம்பலதிரியாக்கடிவேலென்றுதேடிப்புனைந் தேயம்பலதிரியாக்கடையேஞ்செல்லற்செல்வமமு தேயம்பலதிரியக்கவைதோங்கோறிருத்துவையே. | 81 |
1791. |
திருத்தாதடிமைதவத்தேம்புதலுந்திருவருளோ திருத்தாதடிமைதவச்சிரஞ்சூட்டுசிறப்புறுமெய்த் திருத்தாதடிமைதவமாக்குதிசிவகங்கையெனுந் திருத்தாதடிமைதவழ்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தே. | 82 |
1792. |
சிவசிவசங்கரவைம்முகவென்றன்பர்சேர்தில்லைவ சிவசிவசங்கரவைம்பொறியாமுருடீரக்கொல்வ சிவசிவசங்கரவைப்பூணியததுசேர்தரநே சிவசிவசங்கரவையவென்முன்னாந்தெளிமனமே. | 83 |
1793. |
நம்பனையன்றினகரன்பல்வீழ்த்தகைநாயகன்வா நம்பனையன்ரினரூரெரித்தானடமன்றிற்கண்டாள் நம்பனையன்றினல்லார்கள்பல்லோரலர்நாட்டுறத்தி நம்பனையன்றினகக்கூவவாடுமிந்நன்னுதலே. | 84 |
1794. |
தலையரியக்கவலார் தனக்கில்லவன்றாம்பெறும தலையரியக்கவலார்கோன்மன்றன்சரம்பூண்பொன்முடித் தலையரியக்கவலார்புனலாற்கிணர்த்தாழ்குழல்கா தலையரியக்கவலார்முலையாய்சென்றுசாற்றுகவே. | 85 |
1795 |
கவியமகந்திரிவாப்பிறவாக்கழறாநரர்பாற் கவியமகந்திரிவாச்சிறுதெய்வங்கருதமுழங் கவியமகந்திரிவாரழலார்புகைகாண்மயில கவியமகந்திரிவான்பொழிற்றில்லைமன்காதலமே. | 86 |
1796. |
காதற்பரவையகம்படிவேமறங்காய்ந்திலநீங் காதற்பரவையகம்பயில்வேமெங்ஙன்கார்க்குழல்பங் காதற்பரவையகம்பணிதில்லைக்கண்மேயகுழைக் காதற்பரவையகம்பங்கொல்வேங்கடுங்காலன்முன்னே. | 87 |
1797. |
முனிவருமானந்தக்கூத்தம்பலத்தன்புமுற்றுமிரு முனிவருமானந்தக்கூப்பிக்கையேத்தச்செய்முத்தகுழை முனிவருமானந்தக்கூர்விழிபாகமொய்க்கூற்றமெனை முனிவருமானந்தக்கூடன்றியாவர்க்குமூத்தவனே. | 88 |
1798. |
மூவாயிரவருந்தானவன்வாழ்முடியாய்முன்கைசேர் மூவாயிரவருந்தாழ்வில்சொற்பேசச்செய்மொய்யன்புக்கொண் மூவாயிரவருந்தாவுணவீரென்முதல்வமன்றுண் மூவாயிரவருந்தாழநின்றாயருண்முத்தியின்பே. | 89 |
1799. |
முத்தரும்பாவருமந்தண்டுறைத்தில்லைமுன்னவபன் முத்தரும்பாவருமந்தநிற்கொப்புமுளரிமின்வாய் முத்தரும்பாவருமந்தமினாவருமோமுந்தவி முத்தரும்பாவருமந்தருங்கூறார்முனி்ந்தொப்பென்றே. | 90 |
1800. |
முதலைப்பரவைத்திருக்காழியார்சொன்முதல்வர்செவ்வாய் முதலைப்பரவைத்திருக்காமுறன்பர்சொன்மொய்த்ததில்லை முதலைப்பரவைத்திருக்காற்றுந்தாளவென்பாமுழுவிம் முதலைப்பரவைத்திருக்காற்றைமாயமுருக்குவமே. | 91 |
1801. |
குவலையவம்பரமானந்தவாதவர்கோவரவா குவலையவம்பரமானந்தவாதவர்கோமன்றகட் குவலையவம்பரமானந்தவாதவர்கோள்புரிதீங் குவலையவம்பரமானந்தவாதவர்கோவத்தனே. | 92 |
1802. |
அத்தவெற்பாதவர்வெள்ளிவெற்பாவிலயனரிகாய் அத்தவெற்பாதவர்சொல்பூணெனுமிரப்பார்க்கருள்சீல் அத்தவெற்பாதவர்தேவர்மன்றார்தம்மகலத்துநேய் அத்தவெற்பாதவர்தாமவரேயெனுமாயிழையே. | 93 |
1803. |
ஆயங்கவலவருந்துபுயானுமலறவென்னள் ஆயங்கவலவருந்துயராற்றியடையுமின்கான் ஆயங்கவலவருந்துறவோரும்பனப்பனுள்ளென் ஆயங்கவலவருந்துமன்றம்பணியாரினைந்தே. | 94 |
1804. |
ஆரம்பரவியவானந்தமர்துறையம்பலவம்பு ஆரம்பரவியவானந்தவைக்குமமரவெண்டிக்கு ஆரம்பரவியவானந்தமாதுக்களித்திநின்மார்பு ஆரம்பரவியவானந்தமாமணியார்க்குமுன்னே. | 95 |
1805. |
ஆரம்பரந்தடிவாள்விழியாய்நென்னலாரிரவென் ஆரம்பரந்தடிவாய்முலைமேற்கைவைத்தாரொருவர் ஆரம்பரந்தடிவாய்ப்புலித்தோலரருட்புலியூர் ஆரம்பரந்தடிவார்சடையாரென்பராயெனக்கே. | 96 |
1806. |
என்னத்தனையடிதேடவிட்டானையிருண்மவொடும் என்னத்தனையடியாய்திருவம்பலத்தெம்மிறையே என்னத்தனையடியென்றன்பருக்கெளிதாத்தெரிக்கும் என்னத்தனையடியேன்மறப்பேன்கொலெழுமையுமே. | 97 |
1807. |
மையலங்காரகலம்மதியென்னுமதிவிளங்க மையலங்காரகலமாக்கொள்கண்ணியர்மாலறச்செம் மையலங்காரகலப்பரவம்பலவாதடிதி மையலங்காரகலப்புகழாயருமாணிக்கமே. | 98 |
1808. |
மாணிக்கவாசகர்காணவைத்தீந்தனைமாலைமுன்வின் மாணிக்கவாசகர்தெவ்வேயளபொன்றில்வாய்ந்தமுன்பின் மாணிக்கவாசகர்சூழ்தில்லையாயென்சொன்மாலையுங்கொண் மாணிக்கவாசகர்வாய்மலர்கோவைவரைந்தவனே. | 99 |
1809. |
அவலங்களைவம்பலர்நீர்ப்புலியூரணைவமுரிய் அவலங்களைவம்பரும்புரியாதடர்ப்பாமழுமேய் அவலங்களைவம்பலர்முலைவாமனருள்பெறுவாம் அவலங்களைவம்பணிந்தெழுவாந்திருவம்பலமே. | 100 |
1810. |
திருவளர் செங்கேழ்க் குருமணி கொழிக்கும் பொருதிரை யுடுத்த விருநில வரைப்பிற் றாவாத் துன்பந் தருபவ மறவொழித் தோவா வின்பத் துறுதலை வேட்கு மன்னிய வுயிர்காள் பன்னெறிச் செல்குவ | 5 |
தொருவுமின் பெருமான் றிருநடங் காண வுள்ளகத் தன்பொடு பொள்ளென வம்மி னெனவிளித் திடல்போற் கனகத் தியன்று மணிகால் யாத்த லணிகிளர் மாடத் தும்பர்த் தயங்கு செம்பொற் கேதன | 10 | |
மாடுறுந் தெய்வப் பீடுசான் றோங்குந் தொல்லைமா வளஞ்சேர் தில்லைமா நகரி லிரசத வரைபிராற் கிடமா யெவரும் பரசிடப் பெறுபெரும் பயனை நினைந்து தானுமப் பயன்பெறத் தமனியக் குன்றம் | 15 | |
வானுயர் முடியொடு வந்தது மானக் களங்கமற வோங்கி விளங்குபொற் பொதுவிற் கலைமக டீம்பா லலைமகள் வணங்குந் தலைமக ளென்னு மலைமக ளாய வுலகுபல பயந்த வொருதா யொழியா | 20 | |
திலகருள் சுரக்கு மிருவிழி களிப்ப வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற் றிண்டடம் புயத்துக் கொண்டல் வண்ணனு முதுமறை தெரிந்த சதுமுகக் கிழவனுங் கற்பக நீழலிற் பொற்புறு கோவு | 25 | |
மற்றவிண் ணவரும் பொற்றமண் ணவருங் கரஞ்சிரங் குவியக் கண்ணருவி பொழிய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதாப் பெய்தி யரகர வெனுமொலி பரவையை விழுங்க வின்புறப் புரிபே ரன்புரு வாய | 30 | |
பொருவரு முனிவர ரிருவரும் பொங்கித் ததும்பு மானந்தச் சலதியுள் எழுந்த முயலகன் வெரிநிடை யியலநின் றருளித் துயர்பழுத் தனைய வவிர்சடை யாடத் தழைதிருச் செவியிற் குழையசைந் தாட | 35 | |
வருள்விழிக் கடையுமை தெருண்முகத் துலவ வுறுதிரு வாயிற் குறுநகை யரும்ப வடவரை குழைத்த தடநெடும் புயத்திற் பாம்பொடு கடுக்கைத் தேம்பினை மயங்கத் திருவிடை யிற்புலி தருமுடை தயங்கத் | 40 | |
தாமரை மருட்டிய காமர்சே வடியிற் செம்பொற் சிலம்பு பம்பிப் புலம்பத் துடிமுத லாக நொடியுமைந் திடத்துந் தோற்றமுன் னாகச் சாற்றுமைந் தொழிலும் வயங்குற வென்றுந் தயங்குமா னந்தத் | 45 | |
தாண்டவம் புரிந்தரு ளாண்டவன் கழற்கண் ணுலகிடை யுதித்து நிலவுபல் லுயிர்க்குந் தந்தையே யன்றித் தாயு மாவா னிவனே யென்றிப் புவனியோர்ந் துய்ய நலமலி வணிகக் குலமகள் பொறையுயிர்த் | 50 | |
திலகுறு மளவும் விலகுற லின்றி யன்னையா யளித்த மன்னுறு மப்ப னெழுந்தரு ளப்பெறு செழும்புகழ் நிறைந்த வொள்ளிய திரிசிராப் பள்ளிக் கேபினும் பெரும்பொரு ளுளார்க்கே யரும்பொரு ளுறல்போ | 55 | |
லீண்டுபுகழ் செறிய வாண்டுவரு பெரியோன் பிறைமுடிப் பெருமா னுறைதரப் பெற்ற நறையூர் பொழில்சூ ழுறையூர்ப் புராணமுஞ் சுரும்புபடிந் துண்ண வரும்புக டோறு மட்டவிழ் குறுக்கைவீ ரட்டப் புராணமு | 60 | |
முற்ற பவஞ்சப் பற்றகன் றவர்பலர் துற்றொளிர் வாளொளி புற்றூர்ப் புராணமு முடைத்தெழும் வயன்மடை யடைத்திடக் கருப்புக் கட்டி யிடும்விளத் தொட்டிப் புராணமுஞ் சேற்றூர் வளைவய லாற்றூர்ப் புராணமு | 65 | |
மெயிலை யுடுத்தொளிர் மயிலைப் புராணமுங் கமலைத் தியாக ரமல லீலையு மூழியும் பெயராக் காழிக் கோவையு மெருதூர் பரனிடை மருதூ ருலாவு மேவு புகழானைக் காவி னிடத்தருள் | 70 | |
பூண்டமர்ந் தருளகி லாண்டநா யகிக்கு முருத்தவத் துறைதெறுந் திருத்தவத் துறைவளர் கருப்புகல் கடிபெருந் திருப்பிராட் டிக்கு முன்னவி லுறையூர் மன்னிய வடியவ ரேந்திமதி யமைக்குங் காந்திமதி யுமைக்குந் | 75 | |
தருப்பெரு மணந்தரு திருப்பெரு மணத்துறை போற்றுவார்க் கருடிரு நீற்றுமை யவட்கும் பெருவிடைப் பரனரு டிருவிடைக் கழியமர் தருமரு கனுக்கு மொருமுரு கனுக்குங் காவடுத் துறைதிரு வாவடு துறையி | 80 | |
னம்பல மாக நயந்தெழுந் தருளு மம்பல வாண வருட்குரு பரற்கும் பெருநயந் துவன்றிய பிள்ளைத் தமிழு மரதனா சலத்துறை வரதனுக் கும்மேற் சொன்ன குருபரற்கும் பன்னு கலம்பகமும் | 85 | |
விற்குடி கொளுமுடிக் கற்குடிப் பரற்கு மிதம்புகல் கலசைச் சிதம்பரேச் சுரற்குஞ் சொற்றவா னைக்கா வுற்றவன் னைக்குந் தருமையில் வளர்தருஞ் சச்சிதா னந்த குருபர னுக்குமேர் தருதமிழ் மாலையு | 90 | |
மறைதுறை சையுமரு ணிறைசிராப் பள்ளியு மமரம லற்குநல் யமகவந் தாதியு நீலி வனத்துறை நிமலனுக் கும்முரற் காலிப வனத்துமுக் கட்பரஞ் சுடர்க்கும் விரிபொருள் கிடந்த திரிபந் தாதியுஞ் | 95 | |
சீருறை பூவா ளூருறை யரற்கு நாருறை யூறை நண்ணிய பரற்குந் தண்டபா ணிக்கும் வண்டமிழ் மதுரை ஞானசம் பந்த நற்றே சிகற்கு முத்தமப் பதிற்றுப் பத்தந் தாதியு | 100 | |
நறும்பலாச் சோலை யெறும்பி யூரின் மேவுசோ திக்குவெண் பாவந் தாதியு நவின்றமா மதுரையிற் கவின்றருண் ஞானசம் பந்த தேசிகற்கா னந்தக் களிப்பு மொருகவி யேனு மொழிதர லின்றி | 105 | |
யிருளகன் றொளிரு மெல்லாக் கவிகளுஞ் சொன்னலம் பொருணலஞ் சுவைமிகு பத்திமை நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து முழங்குற வெளிதின் மொழிந்தபெரு நாவலன் குலத்திற் குடியிற் குணத்திற் குறையா | 110 | |
நலத்தின் மாண்பி னகுசிவ பத்தியெல் வாய்மையிற் பொறையின் மலிதரு நிறையிற் றூய்மையிற் கொடையிற் றுகளரு நீதியின் மயங்குறு பிறப்பி லுயங்கெனை யாண்ட தயங்குபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்தோன் | 115 | |
சந்த மலிந்த செந்தமிழ்க் கரசாய் வந்த மீனாட்சி சுந்தர வாரியன் புல்லிய வென்னாற் சொல்லி யடங்கா நன்னல மமைத்துப் பன்னிப் புனைந்த வமலமலி தில்லை யமகவந் தாதியைக் | 120 | |
கதித்திடு மச்சிற் பதித்துத் தருகென நல்லோர் பல்லோர் நயந்துறை யிடனெனத் தொல்லொர் சொல்லிய தொண்டைமண் டலத்தி லுலமலி திண்டோ ளுபேந்திர னாய கலமலி கொங்கைக் கமலைவாழ் மார்பன் | 125 | |
றன்னுறு காவலின் மன்னுறு முல்லையிற் கோதார் தராத சேதா வினங்களைச் சேர்ந்துற வைத்ததை யோர்ந்து நின்றே யன்னோன் முன்னோ னாகிய விந்திரன் மின்னுதன் காவலிற் றுன்னு நிலத்திற் | 130 | |
பயிலுற வைத்த செயலே மானக் கவையடிக் கயவாய்க் காரா வினங்கள் செவையுறு மிடனெலாஞ் சேர்ந்துகிடந் துறங்கும் பெருவளஞ் சிறந்த மருதஞ் சூழ்ந்து மருவுபூ விருந்த வல்லிநன் னாட | 135 | |
னுருவிற் பொலிந்த திருவினுஞ் சிறந்த சிறுகிய மருங்குற் பெருமுலை மடவா ராடகத் தியன்ற மாடத் தும்பர்க் குழுமி யிருந்து செழுமலர்க் கரத்தா னகைமுக மதியொடு பகையுறு மதியினைப் | 140 | |
பிடித்துப் பிடித்து விடுத்தெறி தரல்போற் றரளங் குயிற்றிய திரண்மணி யம்மனை யாடன் மலிந்த பீடமர் செல்வ மோவாப்பம்ம லூராள் செம்மல் வலம்புரி யுதித்த நலம்புரி முத்தென | 145 | |
மிளிர்தர் புகழுயர் துளுவவே ளாளர் குலத்தி லுதித்த நலத்தின் மிக்கோன் வாகா ரறஞ்சே ரேகாம் பரவேள் செய்தவந் தெரிக்கு மெய்யுறு சீலன் புண்ணியம் பழுத்த தண்ணளித் தாரு | 150 | |
வொற்கமில் சத்துவ நற்குண வாரிதி யிரப்பவர்க் கின்பஞ் சுரக்குமா நிதியம் புல்வரம் பகன்ற கல்வியின் மேரு வுவமை யிலாப்பா சிவனடி யருச்சனை பத்தியிற் புரியு முத்தம குணத்தோன் | 155 | |
பொங்குசீர் விசய ரங்கபூ பால னுளந்தழை விழைவொடு விளம்பின னாக வள்ளலிற் சிறந்த வள்ளலிவ னாதலிற் றலங்களிற் சிறந்தமா தலமாந் தில்லையுட் டேவரிற் சிறந்தமா தேவன் றாளிற் | 160 | |
புலவரிற் சிறந்த புலவனா விளங்கிய நம்மா சிரிய னவின்றணி யமகவந் தாதியுட் சிறந்தவந் தாதியை யோர்ந்துநின் றேவுத னன்றுநன் றென்றுள முவந்து மதித்திட யாரும் பதித்து முடித்தனன் | 165 | |
மன்னுறு மிந்நூல் சொன்னபெரி யோன்பா லென்னொடு கற்ற துன்னுறு மறிஞன் கவ்கை* நீர் சூழ்ந்த கண்ணகன் ஞாலத் திடம்படு மன்பதை மடங்கெடப் பன்னூல் விரித்துரை புலப்படத் தெரித்திடும் வல்லோன் | 170 | |
கனியினு மமுதினுங் கண்டினும் பாகினு மினியதமிழ்க் கவிதை யியம்பத் தெரிந்தோன் பவமறுத் தின்பப் பயனளித் தருளுஞ் சிவபிரா னடிக்கீழ்ச் சிந்தைவைத் திருப்போன் சுதந்தவிர் பெருஞ்சீர்ச் சிதம்பர மகிபன் | 175 | |
பண்ணிய தவத்தாற் பயந்தசூ ளாமணி நண்ணிய புலமை நலஞ்சேர்ந் தொளிரு மேசுத லில்லா வெவரும் பேசுபுகழ்த் தியாக ராசநா வலனே. |