2027 |
விநாயகர்துதி. ஒருமான்கரத்துத்தரித்தபிரானயனோடுநிறங் கருமான்முதற்சுரர்யாருங்கொண்டாடுங்கதலிவனப் பெருமானந்தாதியுரைக்கமுக்கட்டுப்பெருகிமதம் வருமானற்றோட்டகிப்பூட்டிருதாட்டென்வயினுளதே. |
2028 |
திருத்தாமரையிலனஞ்சேர்பைஞ்ஞீலிசிறக்கவளர் கருத்தாமைரயமர்கையாமுகில்கடுக்குங்குழலின் மருத்தாமரையமிடவேற்றவாவினைவாட்டுதலி னுருத்தாமரைபடுவேனையின்றாளவுரைத்தருளே. | 1 |
2029 |
அருந்தவரும்பர்குழாம்புடைசூழவரம்பைவனத் திருந்தவரும்பலுரித்தார்புரத்திடைநாணுமடும் பெருந்தவரும்பணிவெற்பாக்கொண்டார்பிறங்கும்புயத்திற் பொருந்தவரும்பணிபூண்டாரின்றென்னைப்புரப்பவரே. | 2 |
2030 |
புரங்காவலரைமுன்செற்றாய்வெண்மேனிபொருந்தும்விடைத் துரங்காவலர்கொன்றைத்தாராய்பைஞ்ஞீலியெந்தோன்றன்மன மிரங்காவலநினக்கின்றாதலினின்றெடுத்தவுட றிரங்காவலமருமுன்னெனையாண்டருள்செய்குவையே. | 3 |
2031 |
செய்யுந்தரம்பைக்கவானுமைக்கண்ணுஞ்செந்தாமரைப்பூங் கையுந்தரளநகையுமெய்யாகக்கழறும்வெறும் பொய்யுந்தரங்கொடனமுமுள்ளாரைப்புரிந்துலைவே னுய்யுந்தரமுமுளதோபைஞ்ஞீலியென்னுத்தமனே. | 4 |
2032 |
உத்தமனேயென்றும்பைஞ்ஞீலியாயென்றுமொண்கனல்சே ரத்தமனேயென்றும்வாழ்த்தறியேனையின்றாண்டருள்வாய் நித்தமனேயப்பனேயென்றலறுவர்நெஞ்சுறுவாய் முத்தமனேகம்பொலிமுலைபாகவென்முன்னவனே. | 5 |
2033 |
முன்னந்தவம்புரிந்தேனலனின்பதமுன்னுவதற் கன்னந்தவம்பொலில்நெஞ்சேனையோவினியாழ்வினைக டுன்னந்தவம்புக்கிடனாய்விடாதெனைத்தொண்டுகொள்வாய் வன்னந்தவம்பிற்பயிலுங்கதலிவனத்தவனே. | 6 |
2034 |
வனக்காரிகையர்கணேற்றாற்குநீலிவனத்தவற்கு மினக்காரிகைப்பில்பணியணிந்தாற்குவிளம்பிழைகொ டனக்காரிகைவளைசோர்ந்ததெல்லாமுபசாரஞ்சொல்ல நினக்காரிகைக்குஞ்சுகப்பரிமாரனெருங்குமுன்னே. | 7 |
2035 |
நெருங்குந்தனத்தியொருபாகனாரநிறைபழன மருங்குந்தனத்திரள்சூழுங்கதலிவனத்துறைவோன் பெருங்குந்தனத்திமுகனத்தன்மேற்சொலப்பெற்றனன்யான் சுருங்குந்தனத்தினரைப்புகழ்ந்தேகவிசொல்லலற்றே. | 8 |
2036 |
சொலற்கரியயனாலுமொண்ணாப்புகழ்த்தொன்மையனே மல்லற்கரியதள்போர்த்தாய்கதலிவனத்தையனே வெல்லற்கரியதென்றாலுநின்றாளைவிரும்புமென தல்லற்கரியவருள்செயின்யானினக்கானவனே. | 9 |
2037 |
ஆனக்கரவம்பரிகலன்கச்சையென்றாதரித்தோய் வானக்கரவஞ்செலவேதம்வாழ்த்தும்பைஞ்ஞீலிமன்னா தானக்கரவல்விலங்குரியாய்வினையைத்தவிரா யானக்கரவகன்றெஞ்ஞான்றுனைவந்தடைகுவதே. | 10 |
2038 |
அடைந்தேனின்றாள்கதியென்றினிமேனினக்காளலன்போ லுடைந்தெனின்றாலதுநன்றேவினைப்பட்டுழலுமென்முன் மிடைந்தேனின்றாவென்றதென்றருணீலிவனமெய்யதேன் குடைந்தேனின்றாதளைந்துண்டேனென்றாடிடுங்கொன்றையனே. | 11 |
2039 |
கொன்றைக்கனியனகூந்தன்மின்னார்கள்குலமடங்க வென்றைக்கனியமெனத்தள்ளியேநினக்கின்புறுவே னன்றைக்கனியநன்மாச்சேர்பைஞ்ஞீலியையாவென்மனக் குன்றைக்கனியவைத்துன்னடியாரொடுங்கூட்டுவையே. | 12 |
2040 |
கூட்டப்படைகொள்புரத்தைவென்றாய்நறுங்கொன்றையனே வேட்டப்படையுஞ்சடையாய்பைஞ்ஞீலிவிமலமின்னார் நாட்டப்படைதெறவெம்பிநின்றாள்கணண்ணாமலெனை வீட்டப்படைத்தவிதியார்பொருளிலென்வெஃகினனே. | 13 |
2041 |
இனகரமைந்தர்மடவாரென்றெண்ணியிடைந்தவிவீர் கனகரமேன்மழுவுள்ளார்கதலிவனத்தமரு மனகரமாரனைச்செற்றாரெனைத்தடுத்தாண்டவையர் சினகரமேவித்தொழுவீர்விடுமுங்கள்சென்மங்களே. | 14 |
2042 |
மங்காதசெல்வம்பெருகுங்கதலிவனத்தனைவான றங்காதவன்பற்புடைத்தவெம்மானைச்சலந்தரடுனன் வெங்காதகனைத்தடிந்தானையோதவிரும்பிலர்துன் பங்காதவந்தகற்காளாய்நரகிற்படுபவரே. | 15 |
2043 |
படந்தாங்குவெம்பணிப்பூணாய்பைஞ்ஞீலியப்பாவரிமண் ணிடந்தாங்குநேடவெட்டாதநின்பாதத்திறைஞ்சியன்பாய்க் கிடந்தாங்குநாட்டமற்றின்றிக்கதறிக்கிடந்துவினைக் கடந்தாங்குநீரெனக்கண்ணீர்பெய்யேற்கென்கதியுளதே. | 16 |
2044 |
கதிக்குந்தங்கைக்கொடுலகாண்டுமாற்றலர்கண்பிதுங்க மிதிக்குந்தடக்கரிமேல்வரும்வேந்தர்பொய்வாழ்வைமெய்யா மதிக்குந்தரத்தவரென்னாவர்நீலிவனத்தையனே கொதிக்குந்தழற்கட்பிரானேயெனைப்பணிகொண்டவனே. | 17 |
2045 |
கொண்டற்புரையுங்கருங்குழல்வெண்ணகைக்கோதையரைக் கண்டற்புறுமனமேகனறூங்குகண்காட்டியன்பு விண்டற்புடைக்குநிறத்தான்வரினென்விளம்புவையின் றண்டற்புதனையெம்பைஞ்ஞீலிமேவியவத்தனையே. | 18 |
2046 |
அத்தனைவாம்பரியேற்றனைநீலிவனத்தமர்ந்த நித்தனைவாவென்றென்குற்றேவலுங்கொணிருமலனைக் கத்தனைவாய்மனமெய்யாற்றொழார்முற்கருமங்கணூ லெத்தனைவாசித்திருக்கினுநீங்குவதேதவர்க்கே. | 19 |
2047 |
ஏதென்பணிகொண்டருள்வதின்றோவிரங்காமனமோ வோதென்பணியதுனக்கியான்மந்தாகினியுற்றசடை மீதென்பணிந்தவெம்பைஞ்ஞீலியையநல்வெற்பரையன் மாதென்பணியைமொழியொருபாகமுறைமுதலே. | 20 |
2048 |
முதலிவனத்துச்சடையானெனமுன்னலின்றியைம்பா லதலிவனத்துக்களந்தனங்கஞ்சவரும்பெனவே நுதலிவனத்துமடவார்பின்சென்றுறுநோயகலக் கதலிவனத்துப்பெருமான்றிருவடிகண்டனனே. | 21 |
2049 |
2049. கண்டலப்போதைமுடிக்கணியாதமுக்கட்பரற்கு வண்டலப்போதைமலியுங்கதலிவனத்தவற்கு விண்டலப்போதைநகையுடைத்தாற்குவிருப்பிலைநீ தொண்டலப்போதையலார்பாலுயிர்த்துணைசூழ்ந்துநெஞ்சே. | 22 |
2050 |
நெஞ்சத்திருக்குமடவார்மயக்கமுநீங்குதல்செய் தஞ்சத்திருக்குமரன்றாதையைவெள்ளனப்பெடைகள் கஞ்சத்திருக்குமெம்பைஞ்ஞீலிநாதனைக்கண்டுதொழா வஞ்சத்திருக்கும்விடுமோபிறப்புமரணமுமே. | 23 |
2051 |
மரணங்கடந்துய்யலாகுங்கண்டீர்முன்வருங்கரியை முரணங்கடங்கவுரித்தார்பைஞ்ஞீலிமுதல்வரொன்னா ரரணங்கடங்கலிலாதெரித்தாரெனையாண்டவர்பொற் சரணங்கடந்திடத்தொண்டாகிவாழுந்தரத்தருக்கே. | 24 |
2052 |
தரங்கந்தரும்பிறவிக்கடன்மூழ்கித்தளர்ந்துமனக் குரங்கந்தமாதரைப்பற்றநிற்பேன்முன்கொடியகடாத் துரங்கந்தறுகட்சமனேறிவேகத்திற்றோன்றுவனீ யிரங்கந்தநாளினிற்பைஞ்ஞீலிமேவியிருப்பவனே. | 25 |
2053 |
இருந்தனமீதெனவீட்டிமின்னார்களியம்புமொழி மருந்தனமென்னடையென்றுழல்வீர்நமன்வந்துவிட்டான் முருந்தனவெண்ணகைபங்கனைநீலிவனமுதலைப் பொருந்தனன்னெஞ்சமுறுமோவுறுதல்பொல்லாத்தரமே. | 26 |
2054 |
தரத்தருக்கன்றனகர்சூழ்தரவச்சந்தந்தபத்துச் சிரத்தருக்கன்வலிதேய்த்தார்க்கரம்பைசெறியுஞ்சிவ புரத்தருக்கன்மலிகண்டர்க்குத்தொண்டர்புகழவருள் வரத்தருக்கன்புடையேற்கேதிருவினைவாட்டுதலே. | 27 |
2055 |
வாடாதிசைமலர்க்கண்மடவார்வலைப்பட்டுழன்று நீடாதிசைவநெறிச்செல்கிலாதுநினதடிக டேடாதிசைபகராதிருந்தாலுமென்றீமைகெடத் தாடாதிசைதொழும்பைஞ்ஞீலிமேவியசங்கரனே. | 28 |
2056 |
சங்கரனேசம்புவேயிறையேபொற்றனவமலை பங்கரனேயெனப்பாடாவெனக்கருள்பாதமணிப் பொங்கரனேசத்தணிந்தவனேமுக்கட்புண்ணியனே செங்கரனேதிருப்பைஞ்ஞீலிமேவுஞ்சினகரனே. | 29 |
2057 |
சினனாதனையில்வழியேசெலுஞ்சிறியேன்சிறிது மனனாதனைச்சுத்தஞ்செய்யேன்பொல்லாமடவார்மயலா மினனாதனைவிலனானாலுமோங்குமிருங்கதலி வனனாதனைத்தொழுவேற்கில்லையோசிவமாநகரே. | 30 |
2058 |
மானாடும்வாசவன்வானாடுமற்றயனாடுமினி யானாடும்வண்ணமிலையேனென்றாலருளெம்பெருமான் றேனாடும்பொங்கர்மலியும்பைஞ்ஞீலிச்சிவனுமையாள் கோனாடுமஞ்ஞையுமூர்ந்தானுக்கத்தன்கொடுத்தனனே. | 31 |
2059 |
கொடுக்குந்தருநன்னிழலிருந்தேயிகல்கொண்டடல்வே லெடுக்குந்தருக்கர்குறும்போட்டிவாழ்தலுமெண்ணுகிலேன் முடுக்குந்தருமன்சினந்தெதிராமுனையக்கரங்கா னடுக்குந்தருணத்தில்வந்தாள்பைஞ்ஞீலியென்னாயகனே. | 32 |
2060 |
அகத்தாசையற்றிலனின்னடியார்க்கன்பனாகிலனிச் சகத்தாசையெங்குந்திரிந்துழன்றேசலித்தேனதனா லுகத்தாசைநீக்கியெனையாளவேண்டினனுன்னையைந்து முகத்தாசையிலச்சிலையாய்பைஞ்ஞீலியின்முக்கண்ணனே. | 33 |
2061 |
கண்னுதலிக்குப்பணைசேர்பைஞ்ஞீலி்க்கடவுண்மலைப் பெண்ணுதலி்க்குறிக்கும்பாகமீந்தபெருமநினை யெண்ணுதலிக்குமற்றங்கேனெனலன்றியேங்கிடுமென் னொண்ணுதலிக்குமனமிரங்காததென்னுத்தமனே. | 34 |
2062 |
உத்தமனத்தனமலைபங்காளனொளிர்சடையா னித்தமனத்தன்முகிலூர்புரந்தரனேமியொடு சுத்தமனத்தன்பணியும்பைஞ்ஞீலியெஞ்சுந்தரனிம் மத்தமனத்தன்மடனென்றெண்ணாதென்னுள்வந்தனனே. | 35 |
2063 |
வந்தானைசீறிப்பொரும்போதுரித்ததன்மாவதளை நந்தானையென்றரைமீதுடுத்தானைநஞ்சுண்டவனைப் பந்தானைகொங்கைவயினுமைபாகனைப்பங்கயனைத் தந்தானையம்பனைப்பைஞ்ஞீலியானைச்சரண்புகுமே. | 36 |
2064 |
சரமாரனைச்செற்றவனைப்பைஞ்ஞீலிச்சயம்புவைமுப் புரமாரனைவின்றியுண்ணக்கண்டானைப்பொருவில்பல் சிரமாரனைத்தொழுதேத்தீர்நுஞ்சென்மங்கடீர்வதற்கா தரமாரனையர்கருப்பாழ்படாதங்கடுப்பவரே. | 37 |
2065 |
அடுவாரணபுரிபோர்த்தபிரானையணிகளத்திற் கடுவாரணலையெம்பைஞ்ஞீலியானைக்கனதனத்திற் றொருவாரணங்கொருபாகனையேத்தித்தொழார்களெல்லாம் படுவாரணங்கிலெனமறைநான்கும்பகர்தருமே. | 38 |
2066 |
தருமந்தகவின்றியேமடமாதர்தருமயல்பட் டருமந்தகல்வியிழப்பீர்பைஞ்ஞீலி்யனைப்பணியீர் தெருமந்தகன்றுதிரிந்தால்வெம்போத்தைச்செலுத்தியெதிர் வருமந்தகன்விடமாட்டானெங்கோடிமறையினுமே. | 39 |
2067 |
மறைவாயவர்புகழ்ந்தேத்துங்கதலிவனத்தினமர்ந் துறைவாயன்றாழிமதித்திடுங்காலத்துதித்தவிடக் கறைவாய்மணிமிடற்றெம்மையனேநினைக்காண்டலின்றித் தறைவாயடியன்வருந்துவனோவினித்தாங்கிக்கொள்ளே. | 40 |
2068 |
தாங்கரும்பாரமெனயான்பெறும்வினைதன்னொடென்று போங்கரும்பாரமயக்கமெல்லாமுக்கட்புண்ணியனே கோங்கரும்பாரமுலைபங்கனேகுற்றமற்றவனே தீங்கரும்பாரஞ்செறியும்பைஞ்ஞீலிச்சிவபரனே. | 41 |
2069 |
சிவசம்புசங்கரநின்மலதீஞ்செங்கழைநட்குமீ துவசம்புமஞ்சளுமோங்கும்பைஞ்ஞீலியுறைபவபொற் கவசம்புயங்கத்தநின்மேற்கவிபகரத்தலைவி திவசம்புன்மைச்சிறியேனுக்குண்டாயதுன்செவ்வருளே. | 42 |
2070 |
அரும்பன்னமென்முலைமேற்சாந்திடாவெனதாசைமுற்றும் விரும்பன்னமேதிருப்பைஞ்ஞீலிமேவும்விமலற்கெதிர் பொரும்பன்னகப்புலித்தோலணிந்தாற்குப்புகைந்துழலா வரும்பன்னகப்பணியாற்கோதியிங்குவரச்சொல்வையே. | 43 |
2071 |
வரந்தந்துதொண்டனையாளுங்கதலிவனத்தரனை நரந்தந்துதைகொன்றைத்தாரனைவாழ்த்தியெஞ்ஞான்றுமிரு கரந்தந்துயர்கெடச்சென்னிவையார்கள்கணக்கில்பல்லா யிரந்தந்துகற்றிருந்தாலும்விடாவினையீட்டங்களே. | 44 |
2072 |
ஈட்டமரப்பனையேட்டைவிடாதெடுத்தேயெழுதும் பாட்டமரப்பனையார்மீதன்பாகப்பகர்ந்தென்பெற்றீர் வாட்டமரப்பனைவிக்குநஞ்சுண்டவனைக்கதலிக் காட்டமரப்பனைப்பாடாதுழலுங்கவிஞர்களே. | 45 |
2073 |
கவிக்குமகுடம்புனைந்துசெங்கோலொன்றுகையிற்கொண்டு புவிக்குமனாகவிருக்கினும்வானம்புரக்கினுமெ னவிக்குமகிழுஞ்சுரர்சூழரம்பைவனத்தனைக்கே குவிக்குமனத்தன்புகொண்டிலராயிற்குறித்திடினே. | 46 |
2074 |
குறித்தேனினியபைஞ்ஞீலியென்பார்முன்னுங்குற்றமற முறித்தேனினித்திலப்பல்லார்மயலென்பர்முன்னுநிற்பாய் வெறித்தேனினின்னருளாலடியேன்வினைவேரொடுங்கப் பறித்தேனினியந்தகற்கொருநாளும்பயமிலையே. | 47 |
2075 |
இலையம்புயனெடுமாற்குமெட்டாதபைஞ்ஞீலியெம்மான் றலையம்புயங்கமணிந்தோனைப்பாடித்தழைமினிப மலையம்புயர்கழையான்செயும்போரினறிவழிந்து மலையம்புயவெனமூடரைப்பாடிவருந்துவிரே. | 48 |
2076 |
வருந்தத்தைகாள்கைவளைசோர்ந்தனையர்மனம்வெறுக்க விருந்தத்தையின்றறியீரோபைஞ்ஞீலியிறையவற்குப் பொருந்தத்தையற்கொருபாகந்தந்தாற்கின்றுபோயெனது பெருந்தத்தையோதிவருவீர்மதியம்பிறக்குமுன்னே. | 49 |
2077 |
முன்னும்படியறிவில்லாதவென்முழுமூடநெஞ்சை மின்னும்படிகமெனவாக்கிவெவ்வினைவேரறுத்தான் மன்னும்படியெங்குங்கொண்டாடவாணிமலர்மகளுந் துன்னும்படிக்குளப்பைஞ்ஞீலிமேவியசுந்தரனே. | 50 |
2078 |
சுந்தரத்தார்நின்பதத்தணிந்தாடித்துதித்துவிடக் கந்தரத்தாவெனப்போற்றறியேற்குன்கழறருவாய் குந்தரத்தாவெங்கொடுங்காலற்செற்றகுரைகழலா யந்தரத்தார்தொழும்பைஞ்ஞீலில்மேவியமரத்தனே. | 51 |
2079 |
அத்தத்திலங்குசபாசமுள்ளாற்கத்தனைவினையேன் சித்தத்திலங்கும்பரனைப்பைஞ்ஞீலியிற்சென்றுதொழார் கத்தத்திலங்குழைப்பார்போல்யமன்கசக்கத்திரிபட் டுத்தத்திலங்குமழிந்திங்குந்தோன்றியுலைபவரே. | 52 |
2080 |
உலகஞ்சவெம்மைகொண்டோங்குஞ்சமனையுதைத்தவனே பலகஞ்சமீதுபொற்றூவிசெங்கால்பசுஞ்சூட்டுடனே யிலகஞ்சமேவும்பைஞ்ஞீலியசற்றுமிரக்கமிலேன் கலகஞ்சங்கேந்தியுங்காணாநின்றாள்கொளக்கண்டனனே. | 53 |
2081 |
கண்டனஞ்சத்திவரைகடுப்பாள்பங்கனேகொதிப்புக் கொண்டனஞ்சத்திறல்குன்றவுண்டாய்குளத்தாமரையில் வண்டனஞ்சத்திக்கும்பைஞ்ஞீலிநாதமனமயங்கு தொண்டனஞ்சத்தினம்வாட்டிடுமோவினைத்தொல்லைகளே. | 54 |
2082 |
தொல்லையிலாயவினையாற்சுழன்றடைந்தேன்மனத்தை யொல்லையிலாக்குடிகொள்வாய்பைஞ்ஞீலியென்னுத்தமனே வெல்லையிலாதரன்றந்தாய்பொற்கோபுரமேவுதிருத் தில்லையிலாடியதாளாயத்தீவினைதீர்வதற்கே. | 55 |
2083 |
தீராக்கவலையுடையேனையன்பரிற்சேர்த்தருளிச் சீராக்கவலைப்புனல்வாவியிலுகள்சேலைக்கண்டு சாராக்கவலைச்சிரல்கொள்பைஞ்ஞீலித்தலைவகைக்குப் பேராக்கவலையொப்பாமென்னகந்தையைப்பேர்த்தருளே. | 56 |
2084 |
பேரரம்பைக்குலமோங்கும்பைஞ்ஞீலியர்பெய்மதுவார்த் தாரரம்பைச்சடைவைத்தவர்முப்புரந்தம்மைவென்ற வீரரம்பைப்பணிபூண்டவர்மேவவிரும்பியவென் னோரரம்பைக்கனையாளையின்றாளவந்துற்றிலரே. | 57 |
2085 |
உற்றவர்தொண்டர்வினைவேரறுப்பதற்கும்பருட னற்றவர்சூழ்திருப்பைஞ்ஞீலிமேவியநாயகர்பொற் கற்றவர்கொண்டருள்புண்ணியர்தாளையென்கன்னெஞ்சமே பற்றவரன்றிமற்றாரேகொடுப்பர்பரகதியே. | 58 |
2086 |
பரமனையன்புசெறிநெஞ்சியற்பகையார்க்குமுத்தி தரமனையிற்சென்றவனையெம்மானைத்தழங்குகனற் கரமனையோங்குங்கதலிவனத்துமுக்கண்ணனைநல் வரமனைவர்க்கும்கொடுப்பானைவாழ்த்திவரங்கொணெஞ்சே. | 59 |
2087 |
வருந்தாரெனமகிழ்ந்தேனிற்றைஞான்றுவரையுஞ்சும்மா விருந்தாரனுப்புதலின்றிவண்டீரின்றுபோய்ச்சொலுங்கோள் பெருந்தாரணிபுகழ்ந்தேத்தும்பைஞ்ஞீலிப்பெம்மானுக்குத்தேன் றிருந்தார்முடியுடையாருக்குத்தேவர்தந்தேவருக்கே. | 60 |
2088 |
தேவிக்குருவம்பகிர்ந்தார்பைஞ்ஞீலிச்சிவபுரர்க்குப் பாவிக்குருகுமனமிலராயபரமருக்குத் தூவிக்குருமணிநந்தினஞ்சிந்துந்துறைமலியும் வாவிக்குருகினங்காள்சொல்லுவீரென்றன்மையலையே. | 61 |
2089 |
மையற்கடாக்களிறல்லாநடத்திவருமதனப் பையற்கடாததென்செய்தேனெஞ்ஞான்றும்பகைத்துவெங்கோன் மொய்யற்கடாவினனாகப்பைஞ்ஞீலிமுழுமுதலென் னையற்கடானையுரித்தாற்குறுமையலாயினனே. | 62 |
2090 |
ஆயனையம்பனுமையொருபாகனரம்பைவனத் தூயனையம்பன்மினாரிடத்தேற்றவன்றூத்திரையான் சேயனையம்பகத்தாலெரித்தானைச்சிலகவிதந் தாயனையம்பதவென்றோதிடவென்றளர்விலையே. | 63 |
2091 |
இல்லாதவாதனையீராகவையனிரும்புகழைக் கல்லாதவாவுற்றுழல்வீர்கதலிவனத்தமர்ந்தோன் பல்லாதவாவற்றனையோவென்றியாரும்பகரச்செய்தோ னல்லாதவானவனுண்டோநுந்தீமையறுப்பதற்கே. | 64 |
2092 |
அறுகாரணிசடையாற்குமரோங்கலரையனன்பாய்ப் பெறுகாரணியொருபாகற்குத்தேவர்பிராற்கிலங்கு மறுகாரணிதிருப்பைஞ்ஞீலியாற்கென்வருத்தஞ்சொல்லி யுறுகாரணியலகொணர்ந்தாலென்னாங்கொலிவ்வொண்மதியே. | 65 |
2093 |
மதித்தலையாழிகடைவேலைவந்தநஞ்சுண்டவனே விதித்தலையார்கரத்தோனேபைஞ்ஞீலியெம்வித்தகனே துதித்தலையான்செய்திலனேனுமின்னந்தொடர்ந்தனைபா லுதித்தலையாமலெனையாளநீயென்றுடம்படலே. | 66 |
2094 |
படப்பணிபூண்டபுயத்தபைஞ்ஞீலிப்பரம்பரபூங் கடப்பணிவேளத்தசெங்கையின்வண்டுகழலமுத்து வடப்பணிசிந்திமலர்ப்பாயனீத்துமருவவெண்ணி நடப்பணிற்பாடிகைப்பாளுயிர்ப்பாளெங்கணன்னுதலே. | 67 |
2095 |
நன்னத்தனேடும்பொற்பாதத்தனேநல்லரம்பைவன மன்னத்தனேரில்பைஞ்ஞீலியனேமருவாரைவெல்வோன் மின்னத்தனேகமருப்பன்விரும்பும்விருப்பத்தனே யென்னத்தனேநினையல்லான்மற்றியாரையுமெண்ணலனே. | 68 |
2096 |
எண்ணாதவனன்பொடுநின்பதத்தையென்றாலுமெனை யுண்ணாதவன்னஞ்சமுண்டதுபோலவுவந்தருள்வாய் விண்ணாதவன்கதிர்தோற்றாவரம்பைவியன்வனமுக் கண்ணாதவனன்குடையார்மனத்துறைகாரணனே. | 69 |
2097 |
காராழியொக்குநிறத்தான்செய்பூசனைகண்டினிதா வாராழிமுன்னமளித்தாய்பைஞ்ஞீலியமர்ந்தவனே பாராழிக்கேருடையாய்மடவார்மயல்பட்டுழலும் பேராழியவினையேனுன்னருளென்றுபெற்றுய்தலே. | 70 |
2098 |
பெற்றனடாவும்பெருமான்பைஞ்ஞீலிப்பெம்மானிலங்கும் போற்றனடாவுழைக்கண்ணிபங்கானன்புபூண்மனத்திற் குற்றனடாமற்குணநடுமூன்றுகட்சோவைத்தொழக் கற்றனடாவந்தகாவந்துபாரொருகையினியே. | 71 |
2099 |
கையத்தியங்கலறத்தோலுரித்தவன்காலற்செற்றோன் மொய்யத்தியங்குஞ்சடையான்பைஞ்ஞீலிமுழுமுதல்வன் வையத்தியங்கொள்பொற்றேரானையன்றிவருத்தம்வினை செய்யத்தியங்கினும்பாடேனினிமற்றொர்தேவரையே. | 72 |
2100 |
தேவாகருங்குழல்பாகாபைஞ்ஞீலிச்சிவபுரனே மாவாகருங்குலவேதருந்தேடுமறைமுதலே பூவாகருங்குன்றுபன்னிரண்டாற்குப்பொருந்தத்தனே நீவாகருங்குண்டைமேலம்மையோடென்முனேயமுற்றே. | 73 |
2101 |
உற்பத்தியாவதுஞ்சாவதுமன்றியுன்றாண்மலர்க்கு நற்பத்திகொண்டுய்ந்தறியேன்பைஞ்ஞீலியென்னாயகனே கற்பத்தினான்சக்கரத்தானின்றேத்தக்கடும்புரம திற்பத்திவேவச்செற்றாயுய்யுமாறருள்செய்தருளே. | 74 |
2102 |
செய்க்குவளைக்குநிகர்நேத்திரம்புனல்சிந்துவதுங் கைக்குவளைக்குலஞ்சேராததுஞ்சுகங்காள்சொலுநன் மைக்குவளைக்குங்கடல்சீறிடுமுன்மதியெழுமு னைக்குவளைக்குழைபாகற்கரம்பையடவியற்கே. | 75 |
2103 |
அடவிக்கதலிப்பசுங்குரு்த்தோடியகல்விசும்பைத் தடவிக்கதறக்கதிரோன்குரகதத்தைத்தகர்த்துக் கடவிக்கதனஞ்செய்பைஞ்ஞீலிமேவுங்கடவுண்மதன் படவிக்கதமுறச்சேற்றாயருணின்பொற்பாதத்தையே. | 76 |
2104 |
பாதம்பணியும்வகையறியேற்குன்பதம்பணியும் போகம்பணியுமைபாகபைஞ்ஞீலியபொற்சடையின் மீகம்பணியும்விமலமன்றேறிவிமலையுடன் வாதம்பணியும்பரேத்தநின்றாடுமறைமுதலே. | 77 |
2105 |
மறைவழியேநின்றிருப்புகழோதிமனங்கனிந்து முறைவழிபாடுபுரியமுன்னாதிருப்பேற்குமனக் குறைவழியத்தயைசெய்தாண்டருள்வைபொற்குன்றுவில்லாய் நறைவழியுங்கதலிச்சோலைமேவியநாயகனே. | 78 |
2106 |
அகலப்படவரவாய்த்தேரைபோலுமம்மாதர்விழி யிகலப்படவரந்தைக்கிடனாய்க்கொடியேய்கடன்மே வுகலப்படவரவந்தீர்ந்தபோலுமுள்ளேற்குளத்தா சுகலப்படவரம்பைக்காடவோடத்துரத்துதியே. | 79 |
2107 |
உதிக்கின்றவம்புலிவெம்புலியாகியுறவவ்வுடு பதிக்கினறவம்புரிந்தேன்சந்தம்பூசப்பருமுலைமேற் கொதிக்கின்றவம்பல்செய்வேனோபெண்காளென்குறையுரையீர் மதிக்கின்றவம்பலத்தாடும்பைஞ்ஞீலிவரனுக்கின்றே. | 80 |
2108 |
வரம்பலமாவொன்றுநாயேற்குதவுமருமலர்ச்செ யிரம்பலமாமொய்யனைச்செற்றவாநல்லிருங்கதலி மரம்பலமாப்பலசேரும்பைஞ்ஞீலிமறைமுதலே சிரம்பலமாலையணிந்தாய்நின்றாட்கன்புசெய்வதற்கே. | 81 |
2109 |
செல்லைக்கடுத்தகுழலார்பிறையைச்செயித்துவரி வில்லைக்கடுத்தநுதலார்மயக்கைவிரும்பிவினைத் தொல்லைக்கடுத்தவுடம்பெடுத்தேனைநின்றொண்டரிற்சே ரொல்லைக்கடுத்தருக்கோட்டீபைஞ்ஞீலியுறைபவனே. | 82 |
2110 |
பவனாசனப்பனெம்பைஞ்ஞீலிநாதன்பருப்பதவிற் சிவனாசனங்கயிலாயவெற்பான்செஞ்சடைப்பெருமா னிவனாசன்மக்கடனீத்தேறுவனென்றியம்பவமைந் தவனாசன்வஞ்சனென்றென்னையெண்ணாதினிதாண்டனனே. | 83 |
2111 |
ஆண்டலைப்பத்திரக்கேதனத்தாற்கத்தனேயணிகொள் பூண்டலைப்பத்திரியேற்றாய்பைஞ்ஞீலியனேநின்பொற்றாள் காண்டலைப்பத்தியினாலறியாக்கள்வனேற்குவினை யீண்டலைப்பத்தியங்கித்திரிவேற்கென்றிரங்குவையே. | 84 |
2112 |
இரக்கஞ்சற்றுங்கிடையாமனத்தேற்கஞ்சலென்றுநின்செங் கரக்கஞ்சங்காட்டிநின்றொண்டர்குழாத்திற்கலக்கவைப்பாய் தரக்கஞ்சமுன்னமுரித்தாய்பைஞ்ஞீலித்தலைவமிக்க விரக்கஞ்சர்ப்பந்தரித்தாய்மழுவேந்தும்விடையவனே. | 85 |
2113 |
அவனிவனெற்றலையாமனெஞ்சேயென்னையாளுடைய சிவனிவரேறுடைப்பைஞ்ஞீலிநாதன்றிசைமுகத்தோன் புவனிவனிதைபுணர்வோன்கிளைத்தபுரனுமைக்கோர் தவனிவரும்பவந்தீர்ப்பான்பொற்றாளிணைசாருவையே. | 86 |
2114 |
சாருக்கனையமொழியாதிரதிதவனடத்தும் போருக்கனையர்பகைக்கினிச்செய்வதென்பூங்கதலித் தாருக்கனையடர்பைஞ்ஞீலிமேவுந்தலைவனெம்மான் மேருக்கனையக்குழைத்தானிங்கெய்தின்மிகவுநன்றே. | 87 |
2115 |
நன்றத்தம்வேண்டினனீகெனமூடரைநண்ணியம்பொற் குன்றத்தடம்புயனேயெனப்பாடிக்குறைந்தலைந்து வன்றத்தளாவித்திரியாமனீலிவனத்தவபொன் மன்றத்தயானினக்கேகவிபாடமனந்தந்ததே. | 88 |
2116 |
தந்தக்கரியதள்போர்த்தான்பைஞ்ஞீலித்தலைவனுள்ளு வந்தக்கரியணிந்தான்கோலமாகிமலரடியை முந்தக்கரியவன்றேடநின்றானென்முழுவினைநோய் சிந்தக்கரியப்புரிந்தாண்டருடருந்தேசிகனே. | 89 |
2117 |
கனத்துப்புடைகொடனமதர்நோக்கங்கறுத்தகுழல் வனத்துப்புடையிதழம்மைபங்காகஞ்சவாவிகளி னனத்துப்புடைமலங்குந்துபைஞ்ஞீலிநம்பாநிற்றொழ மனத்துப்புடையவனோவாதலாலெற்குவந்தருளே. | 90 |
2118 |
வந்தித்தலையுடையார்க்கன்பனீலிவனத்துறைவோன் பந்தித்தலையன்வரைக்கீழலறும்படிநெரித்தோன் சிந்தித்தலைகடல்போலேகண்ணீர்மிகச்சிந்துமென்முன் னிந்தித்தலைவருமுன்வருமாறியம்பெய்திமஞ்சே. | 91 |
2119 |
மஞ்சனகண்டனைப்பைஞ்ஞீலிவாழுமறைமுதலை வஞ்சனமன்புரளக்கழறூக்குமெம்மானையொண்கண் ணஞ்சனமாதர்மயல்வீழ்ந்தறிவற்றழிந்துழல்வீர் வெஞ்சனனங்களைந்தீடேறியுய்யவிரும்புமினே. | 92 |
2120 |
விருப்பன்னமீதில்லைபாலினுமில்லைவெண்முத்தணிகொ ளருப்பன்னமென்முலைகாந்துவதாலவ்விருப்பமெங்ங னிருப்பன்னமுண்டகஞ்சேரும்பைஞ்ஞீலியினெம்மிறைவர் திருப்பன்னகந்தரித்தார்புயத்தேறுந்தெரியலினே. | 93 |
2121 |
அலம்புகுவால்வினையெஞ்ஞான்றும்வாட்டவயர்ந்திருகண் ணிலம்புகுமாறலறித்திரிவேனையென்றாண்டருள்வாய் விலம்புகுலாநுதற்கண்ணிபங்காமிகுமென்கதலிக் குலம்புகுகோயிலிருப்பாயடியன்குலதெய்வமே. | 94 |
2122 |
குலமலையாவுந்தொழநின்றபொன்மலைக்கோனருளு நலமலைபாகபைஞ்ஞீலியனேநதிபோலுமத சலமலையுங்கவுட்டோலுரித்தாயென்னைச்சார்ந்துவினை வலமலையாமலினிதாவென்றோதயைவைப்பதுவே. | 95 |
2123 |
பதுமத்தனங்குடிகொள்ளும்பைஞ்ஞீலிப்பரசிரத்தில் விதுமத்தனங்கையொருபாகவெள்ளைவிடையநினை முதுமத்தனங்கம்வருந்தலுந்தேடலுமுன்னலைச்செய் வதுமத்தனங்கொண்மடவார்க்கென்றாலெங்ஙன்வாழ்த்துவனே. | 96 |
2124 |
வனத்தனையன்றொழும்பைஞ்ஞீலிமேவுமறைமுதலை யெனத்தனையன்றுபுரமெரித்தானையிலங்கிலைவேற் சினத்தனையன்குகனாகப்பெற்றானைச்செம்மான்மழுவாண் மினத்தனையன்றிப்புகழேன்புறஞ்சிலவீணரையே. | 97 |
2125 |
வீணாகவம்பரைக்கொண்டாடிப்பாடும்வெறும்புலவீர் நாணாகவம்பலகோடலல்லாற்சற்றுநன்மையுண்டோ பூணாகவம்பலர்கொன்றையவோங்குகதலிப்பொங்கர் வாணாகவம்பற்றுமுன்வாவென்றோதும்வருந்தலின்றே. | 98 |
2126 |
வருத்தத்தையாற்றுதல்செய்யேனினியத்தைமாற்றிவருங் கருத்தத்தையுந்தவிர்த்தாள்வாய்கடற்கட்டுகிரினிறப் பொருத்தத்தைமேவுஞ்சடையாய்பைஞ்ஞீலியெம்புண்ணியனே மருத்தத்தையார்கொன்றைத்தாராய்புரத்தொருமாதினனே. | 99 |
2127 |
மாதப்புனற்குமனஞ்சேரொட்டாததைமாற்றுதல்செய் தேதப்புனற்பரிற்கூட்டாதெனையுய்யவைத்ததுபூந் தாதப்புனற்கொன்றைத்தாரானென்னம்மைதழுவிடத்தான் சீதப்புனற்பணைப்பைஞ்ஞீலிநாதன்றிருவடியே. | 100 |
2128 |
மறைநூறுகளையறவோர்ந்துளாருமகிழ்ந்துபவக் கறைநூறுமாறுணர்ந்துய்ந்திடுமாறுகயிலையொப்ப வுறைநூறுமாடங்கொள்பைஞ்ஞீலிநாதற்குவந்துகலித் துறைநூறுசொற்றனன்மீனாட்சிசுந்தரத்தூயவனே. |