சித்தர் பாடல்கள் - 4
(அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,
கொங்கணச் சித்தர் பாடல்கள் )
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் நெஞ்சு மலையாதே .....அகப்பேய் 1 | |
பராபர மானதடி .....அகப்பேய் தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய் 2 | |
நாத வேதமடி .....அகப்பேய் பாதஞ் சத்தியடி .....அகப்பேய் 3 | |
விந்து நாதமடி .....அகப்பேய் ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய் 4 | |
நாலு பாதமடி .....அகப்பேய் மூல மானதல்லால் .....அகப்பேய் 5 | |
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய் ஒக்கம் அதானதடி .....அகப்பேய் 6 | |
சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய் மித்தையும் ஆகமடி .....அகப்பேய் 7 | |
வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய் தெசநாடி பத்தேடி .....அகப்பேய் 8 | |
காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய் மாரணங் கண்டாயே .....அகப்பேய் 9 | |
ஆறு தத்துவமும் .....அகப்பேய் மாறாத மண்டலமும் .....அகப்பேய் 10 | |
பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய் உருவது நீரடியோ .....அகப்பேய் 11 | |
தேயு செம்மையடி .....அகப்பேய் வாயு நீலமடி .....அகப்பேய் 12 | |
வான மஞ்சடியோ .....அகப்பேய் ஊனமது ஆகாதே .....அகப்பேய் 13 | |
அகாரம் இத்தனையும் .....அகப்பேய் உகாரங் கூடியடி .....அகப்பேய் 14 | |
மகார மாயையடி .....அகப்பேய் சிகார மூலமடி .....அகப்பேய் 15 | |
வன்னம் புவனமடி .....அகப்பேய் இன்னமும் சொல்வேனே .....அகப்பேய் 16 | |
அத்தி வரைவாடி .....அகப்பேய் மித்தையாங் கண்டாயே .....அகப்பேய் 17 | |
தத்துவம் ஆனதடி .....அகப்பேய் புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய் 18 | |
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய் அந்த விதம்வேறே .....அகப்பேய் 19 | |
பாவந் தீரவென்றால் .....அகப்பேய் சாவதும் இல்லையடி .....அகப்பேய் 20 | |
எத்தனை சொன்னாலும் .....அகப்பேய் சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய் 21 | |
சமய மாறுமடி .....அகப்பேய் அமைய நின்றவிடம் .....அகப்பேய் 22 | |
ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய் வேறே உண்டானால் .....அகப்பேய் 23 | |
உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய் உன்னை அறியும்வகை .....அகப்பேய் 24 | |
சரியை ஆகாதே .....அகப்பேய் கிரியை செய்தாலும் .....அகப்பேய் 25 | |
யோகம் ஆகாதே .....அகப்பேய் தேக ஞானமடி .....அகப்பேய் 26 | |
ஐந்துதலை நாகமடி .....அகப்பேய் இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய் 27 | |
இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய் அறைய நீகேளாய் .....அகப்பேய் 28 | |
கண்டு கொண்டேனே .....அகப்பேய் உண்டு கொண்டேனே .....அகப்பேய் 29 | |
உள்ளது சொன்னாலும் .....அகப்பேய் கள்ளமுந் தீராதே .....அகப்பேய் 30 | |
அறிந்து நின்றாலும் .....அகப்பேய் புரிந்த வல்வினையும் .....அகப்பேய் 31 | |
ஈசன் பாசமடி .....அகப்பேய் பாசம் பயின்றதடி .....அகப்பேய் 32 | |
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய் பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய் 33 | |
ஆறு கண்டாயோ .....அகப்பேய் தேறித் தெளிவதற்கே .....அகப்பேய் 34 | |
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய் முத்தனு மாவாயோ .....அகப்பேய் 35 | |
நாச மாவதற்கே .....அகப்பேய் பாசம் போனாலும் .....அகப்பேய் 36 | |
நாணம் ஏதுக்கடி .....அகப்பேய் காண வேணுமென்றால் .....அகப்பேய் 37 | |
சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய் சும்மா இருந்தவிடம் .....அகப்பேய் 38 | |
உன்றனைக் காணாதே .....அகப்பேய் என்றனைக் காணாதே .....அகப்பேய் 39 | |
வானம் ஓடிவரில் .....அகப்பேய் தேனை உண்ணாமல் .....அகப்பேய் 40 | |
சைவ மானதடி .....அகப்பேய் சைவம் இல்லையாகில் .....அகப்பேய் 41 | |
ஆசை அற்றவிடம் .....அகப்பேய் ஈசன் பாசமடி .....அகப்பேய் 42 | |
ஆணவ மூலமடி .....அகப்பேய் கோணும் உகாரமடி .....அகப்பேய் 43 | |
ஒன்றும் இல்லையடி .....அகப்பேய் நன்றிலை தீதிலையே .....அகப்பேய் 44 | |
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய் எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய் 45 | |
கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய் நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய் 46 | |
இந்து அமிழ்தமடி .....அகப்பேய் இந்து வெள்ளையடி .....அகப்பேய் 47 | |
ஆணல பெண்ணலவே .....அகப்பேய் தாணுவும் இப்படியே .....அகப்பேய் 48 | |
என்ன படித்தாலும் .....அகப்பேய் சொன்னது கேட்டாயே .....அகப்பேய் 49 | |
காடும் மலையுமடி .....அகப்பேய் வீடும் வெளியாமோ .....அகப்பேய் 50 | |
பரத்தில் சென்றாலும் .....அகப்பேய் பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய் 51 | |
பஞ்ச முகமேது .....அகப்பேய் குஞ்சித பாதமடி .....அகப்பேய் 52 | |
பங்கம் இல்லையடி .....அகப்பேய் கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய் 53 | |
தானற நின்றவிடம் .....அகப்பேய் ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய் 54 | |
சைவம் ஆருக்கடி .....அகப்பேய் சைவம் ஆனவிடம் .....அகப்பேய்! 55 | |
பிறவி தீரவென்றால் .....அகப்பேய்! துறவி யானவர்கள் .....அகப்பேய்! 56 | |
ஆரலைந் தாலும் .....அகப்பேய்! ஊர லைந்தாலும் .....அகப்பேய்! 57 | |
தேனாறு பாயுமடி .....அகப்பேய்! ஊனாறு மில்லையடி .....அகப்பேய்! 58 | |
வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்! உள்ளது உண்டோ டி .....அகப்பேய்! 59 | |
அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்! அறிவு பாசமடி .....அகப்பேய்! 60 | |
வாசியிலே றியதடி .....அகப்பேய்! வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்! 61 | |
தூராதி தூரமடி .....அகப்பேய்! பாராமற் பாரடியோ .....அகப்பேய்! 62 | |
உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்! கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்! 63 | |
நாலு மறைகாணா .....அகப்பேய்! நாலு மறை முடிவில் .....அகப்பேய்! 64 | |
மூலம் இல்லையடி .....அகப்பேய்! மூலம் உண்டானால் .....அகப்பேய்! 65 | |
இந்திர சாலமடி .....அகப்பேய்! மந்திரம் அப்படியே .....அகப்பேய்! 66 | |
பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்! கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்! 67 | |
சாதி பேதமில்லை .....அகப்பேய்! ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்! 68 | |
சூழ வானமடி .....அகப்பேய்! வேழம் உண்டகனி .....அகப்பேய்! 69 | |
தானும் இல்லையடி .....அகப்பேய்! தானும் இல்லையடி .....அகப்பேய்! 70 | |
மந்திரம் இல்லையடி .....அகப்பேய்! தந்திரம் இல்லையடி .....அகப்பேய்! 71 | |
பூசை பசாசமடி .....அகப்பேய்! ஈசன் மாயையடி .....அகப்பேய்! 72 | |
சொல்ல லாகாதே .....அகப்பேய்! இல்லை இல்லையடி .....அகப்பேய்! 73 | |
தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்! மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்! 74 | |
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்! ஏற்ற தல்லவடி .....அகப்பேய்! 75 | |
சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்! பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்! 76 | |
என்ன படித்தால்என் .....அகப்பேய்! சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்! 77 | |
தன்னை அறியவேணும் .....அகப்பேய்! பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்! 78 | |
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்! இச்சை அற்றவிடம் .....அகப்பேய்! 79 | |
கோலம் ஆகாதே .....அகப்பேய்! சாலம் ஆகாதே .....அகப்பேய்! 80 | |
ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்! அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்! 81 | |
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்! தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்! 82 | |
பாலன் பிசாசமடி .....அகப்பேய்! கால மூன்றுமல்ல .....அகப்பேய்! 83 | |
கண்டதும் இல்லையடி .....அகப்பேய்! உண்டது வேண்டடியோ .....அகப்பேய்! 84 | |
அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்! நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்! 85 | |
நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்! மீதான சூதானம் .....அகப்பேய்! 86 | |
ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்! நின்ற பரசிவமும் .....அகப்பேய்! 87 | |
தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்! தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்! 88 | |
பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்! மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்! 89 | |
வேதம் ஓதாதே .....அகப்பேய்! பாதம் நம்பாதே .....அகப்பேய்! 90 | |
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் வல்லாளன் ஆதிபரம சிவனது 1 | |
வானியல் போல் வயங்கும் பிரமமே ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று 2 | |
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் 3 | |
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு 4 | |
ஆரண மூலத்தை அன்புட னேபர பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப் 5 | |
காலா காலங் கடந்திடும் சோதியைக் நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை 6 | |
சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச் அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில் 7 | |
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும் நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே 8 | |
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத செம்மறி யோட்டிய வேலை யமயத்தும் 9 | |
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப் நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே 10 | |
சீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப் பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை 11 | |
கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப் விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத் 12 | |
கண்ணிகள் மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி 13 | |
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்14 | |
ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த15 | |
ஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல16 | |
மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே - உள்ளம்17 | |
சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே - மலச்18 | |
பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்19 | |
சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்20 | |
அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி21 | |
செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு22 | |
கட்டளைக் கலித்துறை மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும் வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும் காடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும் தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. | 23 |
நேரிசை வெண்பா போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம் மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம் வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால் ஓதுபிர மரத்துஉற்றக் கால். | 24 |
தாண்டவராயக்கோனார் கூற்று தாந் திமித்திமி தந்தக்கோ னாரே தீந் திமித்திமி திந்தக்கோ னாரே ஆனந்தக் கோனாரே - அருள் ஆனந்தக் கோனாரே. ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன் மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் 25 | |
அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும் சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன் 26 | |
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன் 27 | |
பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன் சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன் 28 | |
அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன் விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன் 29 | |
மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே 30 | |
வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே 31 | |
ஆறாதாரத் தெய் வங்களை நாடு கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு 32 | |
நாராயணக் கோனார் கூற்று ஆதிபகவனையே ......பசுவே! சோதி பரகதிதான் ......பசுவே! 33 | |
எங்கும் நிறைபொருளைப் ......பசுவே! தங்கும் பரகதியில் ......பசுவே! 34 | |
அல்லும் பகலும்நிதம் ......பசுவே! புல்லும் மோட்சநிலை ......பசுவே! 35 | |
ஒன்றைப் பிடித்தோர்க்கே ......பசுவே! நின்ற நிலைதனிலே ......பசுவே! 36 | |
எல்லாம் இருந்தாலும் ......பசுவே! இல்லாத் தன்மையென்றே ......பசுவே! 37 | |
தேவன் உதவியின்றிப் ......பசுவே! ஆவிக்கும் ஆவியதாம் ......பசுவே! 38 | |
தாயினும் அன்பன்அன்றோ ......பசுவே! நேயம் உடையவர்பால் ......பசுவே! 39 | |
முத்திக்கு வித்தானோன் ......பசுவே! சத்திக்கு உறவானோன் ......பசுவே! 40 | |
ஐயன் திருபாதம் ......பசுவே! வெய்ய வினைகளெல்லாம் ......பசுவே! 41 | |
சந்திர சேகரன்தாள் ......பசுவே! இந்திரன் மான்முதலோர் ......பசுவே! 42 | |
கட்புலன் காணஒண்ணாப் ......பசுவே! உட்புலன் கொண்டேத்திப் ......பசுவே! 43 | |
சுட்டியும் காணஒண்ணாப் ......பசுவே! ஒட்டிப் பிடிப்பாயேல் ......பசுவே! 44 | |
தன்மனந் தன்னாலே ......பசுவே! வன்மரம் ஒப்பாகப் ......பசுவே! 45 | |
சொல்லெனும் நற்பொருளாம் ......பசுவே! இல்லென்று முத்திநிலை ......பசுவே! 46 | |
பலரோடு கிளத்தல் (குறள் வெண்செந்துறை) கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே. | 47 |
மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே. | 48 |
காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால் சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே. | 49 |
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும் நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே. | 50 |
மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத் தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே. | 51 |
தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே. | 52 |
சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும் பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே. | 53 |
மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக் கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே. | 54 |
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே. | 55 |
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே. | 56 |
நெஞ்சொடு கிளத்தல் பூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக் காமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே! | 57 |
பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால் விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே! | 58 |
மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை தேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே! | 59 |
பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால் மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே! | 60 |
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல் மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே! | 61 |
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே! | 62 |
இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமே! | 63 |
கற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்? சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே! | 64 |
தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்? யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கல்மனமே! | 65 |
பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி? வகுத்தறிநீ கல்மனமே! | 66 |
அறிவோடு கிளத்தல் எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. | 67 |
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும் உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. | 68 |
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும் செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே. | 69 |
மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப் பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. | 70 |
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே. | 71 |
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே. | 72 |
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல் கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. | 73 |
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல் மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. | 74 |
வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. | 75 |
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும் முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. | 76 |
சித்தத்தொடு கிளத்தல் கண்ணிகள் அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர 77 | |
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ் 78 | |
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு 79 | |
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச் 80 | |
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப் வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை 81 | |
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும் 82 | |
குயிலொடு கிளத்தல் கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட சரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை 83 | |
உலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள் பலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு 84 | |
சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத் மாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல 85 | |
எட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம் நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி 86 | |
மயிலொடு கிளத்தல் ஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள் கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும் 87 | |
இல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த 88 | |
காற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே - வரும் பாற்றூடு உருவவே பாயுமயிலே - அகப் 89 | |
அன்னத்தொடு கிளத்தல் சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும் மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே. | 90 |
காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே. | 91 |
அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல் பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே. | 92 |
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல் வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. | 93 |
அப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல் ஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே. | 94 |
காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே. | 95 |
புல்லாங்குழலூதல் தொல்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான் 96 | |
இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று97 | |
மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே98 | |
நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்99 | |
ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி100 | |
ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை101 | |
மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்102 | |
கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்103 | |
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க104 | |
எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே105 | |
அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்106 | |
பால் கறத்தல் சாவாது இருந்திட பால்கற - சிரம் வேவாது இருந்திட பால்கற - வெறு 107 | |
தோயாது இருந்திடும் பால்கற வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும் 108 | |
நாறா திருந்திடும் பால்கற மாறாது ஒழுகிடும் பால்கற - தலை 109 | |
உலகம் வெறுத்திடும் பால்கற - மிக கலசத்தினுள் விழப் பால்கற - நிறை 110 | |
ஏப்பம் விடாமலே பால்கற - வரும் தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர 111 | |
அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர் அண்டத்தில் ஊறிடும் பால்கற விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை வேதனை கெடவே பால்கற. | 112 |
கிடை கட்டுதல் இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன் அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே. | 113 |
சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும் தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார். | 114 |
அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும் அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே. | 115 |
ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! - உன் உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே. | 116 |
மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே. | 117 |
இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும் இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே. | 118 |
உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! - உனக் குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே. | 119 |
முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே. | 120 |
கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக் கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே. | 121 |
காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. | 122 |
பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே. | 123 |
சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய் சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே. | 124 |
விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும் மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே. | 125 |
கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக் கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே. | 126 |
சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே. | 127 |
நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! - என்றும் நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே. | 128 |
சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே. | 129 |
கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே. | 130 |
கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம். | 1 |
கும்மி சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை 2 | |
சரசுவதி துதி சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த தத்தமித் தோமென ஆடும் சரசுவதி 3 | |
சிவபெருமான் துதி எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின் கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு 4 | |
சுப்பிரமணியர் துதி ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும் 5 | |
விஷ்ணு துதி ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் 6 | |
நந்தீசர் துதி அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும் 7 | |
நூல் கும்மி தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும் 8 | |
மாதா பிதாகூட இல்லாம லேவெளி பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று 9 | |
வேதமும் பூதமுண் டானது வும்வெளி நாதமுங் கீதமுண் டானதுவும் வழி 10 | |
மூந்தச் செகங்களுண் டானது வும்முதல் விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான 11 | |
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும் தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி 12 | |
ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண் நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல 13 | |
ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும் ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை 14 | |
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும் 15 | |
சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம் சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு 16 | |
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில் 17 | |
ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த 18 | |
அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும் நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த 19 | |
ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி 20 | |
சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச் சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே 21 | |
மனமு மதியு மில்லாவிடில் வழி மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும் 22 | |
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில் கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங் 23 | |
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப் 24 | |
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் அச்சுள்ள விளக்கு வாலையடி அவி 25 | |
எரியு தேஅறு வீட்டினி லேயதில் தெரியுது போக வழியுமில்லை பாதை 26 | |
சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த வலம்புரி யச்சங்கமூது மடி மேலே 27 | |
வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும் நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும் 28 | |
முச்சுடரான விளக்கி னுள்ளே மூல எச்சுடராகி அந்தச் சுடர் வாலை இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே! 29 | |
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம் 30 | |
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி 31 | |
அத்தியி லேகரம் பத்தியி லேமனம் நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன் 32 | |
அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும் கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண் 33 | |
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம் நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன் 34 | |
தொந்தியி லேநடு பந்தியிலே திடச் உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை 35 | |
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங் முலத்திலே பிரமன் தானிருந் துவாசி 36 | |
தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில் ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே 37 | |
ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில் அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர் 38 | |
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் சந்தோட வாலையைப் பாராமல் மனிதர் 39 | |
நகார திட்டிப்பே ஆனதனால் வீடு உகார முச்சி சிரசாச்சே இதை 40 | |
வகார மானதே ஓசையாச்சே அந்த சிகார மானது மாய்கையாச்சே இதைத் 41 | |
ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள் நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை 42 | |
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம் 43 | |
இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம் 44 | |
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில் மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற 45 | |
கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற சிற்பர னைப் போற்றி கும்மியடி 46 | |
அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ் பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது 47 | |
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது 48 | |
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் காலூரு வம்பலம் விட்டத னாலது 49 | |
தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில் சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை 50 | |
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு பாச வலைவந்து மூடியதும் ஈசன் 51 | |
அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை 52 | |
தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து 53 | |
மீனு மிருக்குது தூரணி யிலிதை தேனு மிருக்குது போரையிலே யுண்ணத் 54 | |
காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம் 55 | |
கும்பி குளத்திலே யம்பல மாமந்தக் தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து 56 | |
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி 57 | |
ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும் கூற்றுனு மூன்று குருடன டிபாசங் 58 | |
முட்டை யிடுகு தொருபற வைமுட்டை வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு 59 | |
அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம் 60 | |
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை 61 | |
இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை 62 | |
அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை 63 | |
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த 64 | |
மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை ஆதரவாகிய தங்கையானாள் நமக் 65 | |
சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள் 66 | |
இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த 67 | |
கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள் சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான் 68 | |
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல 69 | |
மாமிச மானால் எலும்புண்டு சதை ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை 70 | |
பண்டு முளைப்ப தரிசியே யானாலும் கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது 71 | |
மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம் பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது 72 | |
நந்த வனத்திலே சோதியுண்டு நிலம் விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் 73 | |
வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக் வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த 74 | |
வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக் 75 | |
நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது 76 | |
ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம் 77 | |
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை 78 | |
வீணாசை கொண்டு திரியாதே இது காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி 79 | |
பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை 80 | |
தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம் காயும் பழமுஞ் சரியாமோ உன்றன் 81 | |
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து 82 | |
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந் 83 | |
திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ் அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை 84 | |
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும் யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும் 85 | |
ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு நாளையென்று சொல்ல லாகாதே என்று 86 | |
பஞ்சை பனாதி யடியாதே அந்தப் தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும் 87 | |
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில் பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற 88 | |
சிவன்ற னடியாரை வேதியரை சில மவுன மாகவும் வையாதே அவர் 89 | |
வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை 90 | |
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக் ஆடிய பாம்பை யடியா தேயிது 91 | |
காரிய னாகினும் வீரியம் பேசவும் பாரினில் வம்புகள் செய்யாதே புளிப் 92 | |
காசார் கள்பகை செய்யா தேநடுக் தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத் 93 | |
தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில் 94 | |
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் ஓதிய பாலதி லொன்றாகி யதிலே 95 | |
பாலோடு முண்டிடு பூனையு முண்டது மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில் 96 | |
கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக் கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப் 97 | |
ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம் மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை 98 | |
கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக் வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு 99 | |
இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார் செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன் 100 | |
உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும் அற்றது பொருந்து முற்றது சொன்னவன் 101 | |
பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு காரணகுரு அவனு மல்ல இவன் 102 | |
எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப் உல்லாச மாக வயிறு பிழைக்கவே 103 | |
ஆதிவா லைபெரி தானா லும்மவள் நாதிவா லைபெரி தானாலும் அவள் 104 | |
ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல் பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில் 105 | |
நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை 106 | |
பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை 107 | |
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ் நேசவான் வீரப் பெருமாள் குருசாமி 108 | |
ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல் 109 | |
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை 110 | |
சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு 111 | |