ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
நேரிசை வெண்பா சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென் கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள் ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய வைய மொருங்கீன்ற மான். | 1 |
கட்டளைக் கலித்துறை மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர் பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே. | 2 |
நேரிசை வெண்பா அங்கம் பகுந்தளித்த்த வம்பலத்தார்க் காம்பலங்கைச் சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு உந்திப்பா ரேழு மொருங்கு. | 3 |
கட்டளைக் கலித்துறை ஒருவல்லி யல்லிக் கமலத்து திருவல்லி தில்லைச் சிவகாம வருவல்லி செம்பொன் வடமேரு பொருவல்லி பூத்தலி னன்றேயிப் 4 | |
நேரிசை வெண்பா பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம் காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர் பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்க ஆடுகின்ற வேதமே யங்கு. | 5 |
கட்டளைக் கலித்துறை அங்கைகொண் டேநின் னடிதைவந் கங்கைகொண் டாட்டுநங் கண்ணுத செங்கைகொண் டேகுழைத் தார்சிவ கொங்கைகொண் டேகுழைத் தாயவர் 6 | |
நேரிசை வெண்பா குன்றஞ் சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன் மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ் வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல் முரைசன்றே வென்றி முரசு. | 7 |
கட்டளைக் கலித்துறை முருந்தடர்ந் தார முகிழ்த்தபுன் பொருந்தடங் கண்விழிக் கும்புலி பெருந்தடங் கொங்கை குறியிட்ட கருந்தடங் கண்ணுங் குறியிட்ட 8 | |
நேரிசை வெண்பா கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண் டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர் மயிலிருக்கத் தில்லை வனத்து. | 9 |
கட்டளைக் கலித்துறை வன்னஞ் செறிவளைக் கைச்சிற தின்னஞ் சராசர வீர்ங்குஞ் பொன்னம் பலத்துளொ ரானந்த அன்னம் பயந்தன கொல்லாம்பல் 10 | |
நேரிசை வெண்பா அண்டந் திருமேனி யம்பல்த்தார்க் கென்பதுரை கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில் விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ வண்ணம் பொலிந்திருந்த வா. | 11 |
கட்டளைக் கலித்துறை வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென் காய்ந்தது வென்றிவிற் காமனை வேய்ந்தது பாவநின் மென்பதந் தேய்ந்தது பெண்மதி யென்படு 12 | |
நேரிசை வெண்பா சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம் நண்ணுதலைக் கண்ணுதலே நன்று. | 13 |
கட்டளைக் கலித்துறை நங்காய் திருத்தில்லை நன்னுத செங்காவி யங்கண் சிவப்பதென் பங்காளர் நின்னைப் பணியுமப் தங்கா யெழுந்திரென் றாலவட் 14 | |
நேரிசை வெண்பா தலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும் குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள் நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும் தான்குமரி யாகியிருந் தாள். | 15 |
கட்டளைக் கலித்துறை தாளிற் பதித்த மதித்தழும் தோளிற் பதித்த வளைத்தழும் வாளிற் பதித்த முலைத்தழும் நாளிற் பதித்ததொன் றேயெம் 16 | |
நேரிசை வெண்பா இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதலை கற்பிக்கும் பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம் பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள் ஆகத் திருந்தா ளவள். | 17 |
கட்டளைக் கலித்துறை அல்லிக் கமலத் துணைத்தாள புல்லிக் கிடந்தது போலுங்கெட் கல்லிப் புலக்களை கட்டருள் வல்லிக் கிலைகொன் மருங்கென் 18 | |
நேரிசை வெண்பா மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப் பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும் நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின் தாட்கமலஞ் சூடத் தரின். | 19 |
கட்டளைக் கலித்துறை தருவற நாணத் திருவறச் பொருவறு நல்லறம் பூண்டதென் மருவறு மத்த முடித்துக் தெருவற வோடித் திரிதரு 20 | |