ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
மதுரை மீனாட்சியம்மை குறம்
சிந்து பூமருவிய பொழிறிகழ் மதுரா புரிமருவிய வங்கயற்க ணம்மை தேமருவிய மதிதவழ் குடுமித் தென்பொதியக் குறத்திநா னம்மே. | 1 |
செந்நென் முத்துங் கன்னன்முத் துமொளி திகழ்மதுரை யங்கயற்க ணம்மை பொன்னுமுத்துஞ் சொரியும்வெள் ளருவிப் பொதியமலைக் குறத்திநா னம்மே. | 2 |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்து கண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந் வண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும் கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும் 3
|
சிந்து | மங்கை குங்குமக் கொங்கை பங்கயச் செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள் பங்க னைக்கழ லங்க னைச்சொக்க லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே. 4
|
வேறு | வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலே கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே. 5
|
வேறு | புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை பொற்கோல மிட்டுநிறை நாழி வையாய். 6
|
வேறு | ஆழிகைதா வழகாருமங் கயற்கணம்மை பங்கர் அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி யம்மே. 7
|
வேறு | பேசு மென்குறி மோச மென்றிடில் ஆர்சொ லும்பரி யாசமே வாச மென்குழ லாய்சவுந்தர மாறர் வந்தணை வாரமே. 8
|
வேறு | நங்கை நீகரு துங்குறி சொல்லவுன் செங்கை தனக்கொடு வாவெங்கள் அங்க யற்கண்ணி பங்க ரருட்சொக்க லிங்க ரினியணை வாரம்மே. 9
|
வேறு | தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான் ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே. 10
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கைக்குறியின் முகக்குறிநன் றிடத்தெழுந்த திக்குறிநன் றென்கின்றா ரிடக்கண்ணுந் பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடி நீ மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு 11
|
மொச்சகக் கலிப்பா | கடமலைக்கும் வெம்மலையாங் கம்மலையு மாயிரவாய்ப் படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தை குடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும் வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே. 12
|
திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை | தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே. 13
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கன்ன மதம்பெய் துறங்குகொலைக் தென்னந் தமிழும் பசுங்குழவித் அன்னம் பயிலும் பொழிற்கூட பொன்னங் குடுமித் தடஞ்சாரற் எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 14
|
மந்தமா ருதம்வளரு மலையெங்கண் மலையே | கந்தவேள் விளையாடு மலையெங்கண் மலையே ...................................................................... இந்தமா நிலம்புரக்கு மங்கயற்கண் ணம்மை 15
|
சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடு மொருபாற் | வெங்கரடி மரையினொடும் விளையாடு மொருபால் அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்கவிகை நிழற்கீ செங்கமலப் பதம்பரவுங் கும்பமுனி பயிலுந் 16
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கச்சைப் பொருது மதர்த்தெழுந்து பச்சைப் பசுங்கொம் பங்கயற்கட் செச்சைப் படலை நறுங்குஞ்சிச் கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த 17
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி யெடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறுந் தேறலும்வாய் மடுப்போம் செழுந்தினையு நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் 18
|
புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும் | கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும் சில்வலையும் பலவாரு முன்னிறப்பிற் றூங்கும் கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும் 19
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு 20
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழிய நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி காடுமலை யுந்திரிந்து குறிசொல்லிக் காலங் 21
|
பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டி | மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான் பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள் சொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச் 22
|
முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின் | பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள் அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோ சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும் 23
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ வருகால நிகழ்காலங் கழிகால தருகாலந் தெரிந்துரைப்ப தௌிதரிதன் 24
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித் பொங்குநறு மலறுகோ டைங்கரர்க்குச் சாத்திப் மங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதை 25
|
முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா | இந்நாழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையர்வந் துதித்தா என்னாணை யெங்கள்குலக் கன்னிமா ரறிய 26
|
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | நெல்லளந் திட்ட போது பல்லியும் வரத்தே சொல்லும் சொல்லிய வாய்ச்சொ லன்றித் அல்லது கிளைகூட் டும்புற் 27
|
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் | கொண்டுவா வம்மேகை கொண்டுவா வம்மே வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடுமுன் கையே புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடுமுன் கையே அண்டர்தநா யகியெங்கண் மதுரைநா யகியை 28
|
அம்மேநின் செங்கையைநின் கொங்கையில்வைத் ததுதா | இம்மேலைத் திகையினிற்கை யெடுத்ததுவு மவர்தாம் கைம்மேற்கை கட்டியதுந் தப்பாம லுனக்குக் செம்மேனி மணிவயிற்றிற் கைவைத்த தினிநீ 29
|
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் | அங்கைத் தலத்துத் தனரேகை யளவில் செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற் இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்கு தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோ 30
|
சிந்து | பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும் தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான். 31
|
பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக் | குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான். 32
|
அன்பாண்டு கல்வலிதென் றவ்வைபா டியவெங்கள் | தென்பாண்டி நாட்டாடன் பேரைச்சொல்லாய் பாடநான். 33
|
பொன்மாடஞ் சூழ்ந்தகரும் புயலமலன் போர்வைநிகர் | பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். 34
|
எண்டிசைக்கும் வேம்பாயெம் மிறையவர்க்குக் கரும்பாகும் | வண்டிசைக்குந் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான். 35
|
தினவட்ட மிடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும் | கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான். 36
|
திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்ட | கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான். 37
|
ஆனேற்றுங் கொடியானை யைங்கணையான் வென்றிடவம் | மீனேற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். 38
|
இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொரு | தனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். 39
|
கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழ | வருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே. 40
|
விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ் | மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே. 41
|
வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தை | மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே. 42
|
ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும் | தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே. 43
|
வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுது | மீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே. 44
|
கான்மணக்குஞ் சடைக்காட்டிற் கவின்மணக்குங் கடிக்கொன்றைத் | தேன்மணக்கும் பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே. 45
|
எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும் | வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைய் பாடுவனே. 46
|
வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர் | பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. 47
|
இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும் | முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. 48
|
ஒன்றாகி யனைத்துயிர்க்கு முயிராகி யெப்பொருளும் | அன்றாகி யவையனைத்து மானாளைப் பாடுவனே. 49
|
பரசிருக்குந் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் | அரசிருக்கு மங்கயற்கண் ணாரமுதைப் பாடுவனே. 50
|
கொச்சகக் கலிப்பா | நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி கார்வாழி யங்கயற்கட் கன்னிதிரு வருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே. 51
| |