திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஐந்தாம் திருமுறை (பாடல்கள் 3029-3266)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
1. அன்பு மாலை | 31 | 3029 - 3059 |
2. அருட்பிரகாச மாலை | 100 | 3060 - 3159 |
3. பிரசாத மாலை | 10 | 3160 - 3169 |
4. ஆனந்த மாலை | 10 | 3170 - 3179 |
5. பக்தி மாலை | 10 | 3180 - 3189 |
6. சௌந்தர மாலை | 12 | 3190 - 3201 |
7. அதிசய மாலை | 14 | 3202 - 3215 |
8. அபராத மன்னிப்பு மாலை | 10 | 3216 - 3225 |
9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை | 11 | 3226 - 3236 |
10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை | 10 | 3237 - 3246 |
11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை | 10 | 3247 - 3256 |
12. ஆளுடைய அடிகள் அருண்மாலை | 10 | 3257 - 3266 |
3029 | அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன் 1 | | 3030 | நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே 2
|
3031 | ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய் | மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும் 3
|
3032 | சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன் | உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன் இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன் சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும் 4
|
3033 | துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே | அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே இப்பாடு படஎனக்கு முடியாது துரையே தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல் 5
|
3034 | கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே | விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன் 6
|
3035 | திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன் | கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன் பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான் வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே 7
|
3036 | குன்றாத குணக்குன்றே கோவாத மணியே | என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன் 8
|
3037 | பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே | காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும் ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன் 9
|
3038 | அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் | இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி வந்தோடு(184) நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி 10
| |
3039 | அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண் முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும் 11 | | 3040 | பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும் மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே 12
|
3041 | என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே | அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ 13
|
3042 | பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய | நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில் கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார் 14
|
3043 | சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு | கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங் மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப் 15
|
3044 | சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத் | எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும் கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே 16
|
3045 | ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே | வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித் ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில் 17
|
3046 | தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால் | இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும் ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும் 18
|
3047 | அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம் | செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந் எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே 19
|
3048 | நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு | தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய் தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய் வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய் 20
|
3049 | ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் | வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர் ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும் நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும் 21
|
3050 | ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே | காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய் பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன் நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை 22
|
3051 | இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன் | உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக் 23
|
3052 | சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில் | புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப் பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப் தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித் 24
|
3053 | ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை | ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம் 25
|
3054 | முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன் | பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப் தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே 26
|
3055 | ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா | மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில் துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய் 27
|
3056 | அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே | தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும் 28
|
3057 | மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய் | தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே 29
|
3058 | பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும் | வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப் ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே 30
|
3059 | செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து | இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய் எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும் 31
| |
3060 | உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம் இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன் 1 | | 3061 | ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன் களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில் 2
|
3062 | திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித் | வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய் 3
|
3063 | அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித் | மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன் 4
|
3064 | இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித் | கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக் உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே 5
|
3065 | இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன் | கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின் மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில் புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன் 6
|
3066 | ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன் | மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன் 7
|
3067 | நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து | தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித் கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக் கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய் 8
|
3068 | மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள் | குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே 9
|
3069 | அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங் | துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித் மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே 10
|
3070 | அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும் | வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன் 11
|
3071 | ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன் | காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே 12
|
3072 | இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன் | மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத் அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா 13
|
3073 | கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக் | தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத் வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத் 14
|
3074 | பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும் | கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக் சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத் மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய் 15
|
3075 | ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் | ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந் பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப் ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே 16
|
3076 | அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா | கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில் 17
|
3077 | காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும் | ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர் பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப் 18
|
3078 | துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே | பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப் உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே 19
|
3079 | நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள் | ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத 20
|
3080 | சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே | சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச் 21
|
3081 | பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப் | சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய் விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று 22
|
3082 | செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன் | துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே 23
|
3083 | உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும் | நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட 24
|
3084 | விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே | துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக் குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய் 25
|
3085 | வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல் | பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே 26
|
3086 | தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந் | கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக் இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே 27
|
3087 | மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும் | ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித் தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந் கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில் 28
|
3088 | படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று | நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம் இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம் தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே 29
|
3089 | முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த | அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித் என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட 30
|
3090 | மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள் | சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன் மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய் ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே 31
|
3091 | வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும் | நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல் போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப் சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த 32
|
3092 | ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில் | அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற 33
|
3093 | விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய் | வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில் 34
|
3094 | நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் | அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில் சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச் பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன் 35
|
3095 | புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும் | நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால் தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத் 36
|
3096 | மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள் | யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம் 37
|
3097 | கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும் | மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய் 38
|
3098 | கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த | மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா 39
|
3099 | அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் | தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச் மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன் 40
|
3100 | முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி | கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக் பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின் 41
|
3101 | மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும் | பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர் நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை 42
|
3102 | சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும் | கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக் காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக் ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த 43
|
3103 | தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும் | எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந் பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப் சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே 44
|
3104 | கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே | வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன் நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப 45
|
3105 | ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே | அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை 46
|
3106 | எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி | பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில் 47
|
3107 | சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச் | மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன் அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய் முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும் 48
|
3108 | சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே | பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன் புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த 49
|
3109 | உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும் | கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும் 50
|
3110 | தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந் | பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன் தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை |