C. Subramaniya Bharathiyar Songs - Part IV (pAnjcAli capatam -part I) in Tamil Script, unicode/utf-8 format
சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் - பாகம் 4 பாஞ்சாலி சபதம் (முதற் பாகம் )
Etext Preparation: Ms.Veena Jayaraman, Texas, USA (input), Dr. N. Kannan, Kiel, Germany (proof-reading) Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. .In case of difficulties send an email request to Project Madurai
அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இ· துரைப்பான்; 'பந்தயங்கள் சொல்வாய்-சகுனி பரபரத் திடாதே; விந்தை யான செல்வம்-கொண்ட வேந்த ரோடு நீ தான் வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே வைக்க நிதிய முண்டோ?' 184
தருமன் வார்த்தை கேட்டே,-துரியோ தன னெழுந்து சொல்வான்; 'அருமையான செல்வம்-என்பால் அளவி லாத துண்டு; ஒரு மடங்கு வைத்தால்-எதிரே ஒன்ப தாக வைப்பேன்; பெருமை சொல்ல வேண்டா,-ஐயா! பின் னடக்கு' கென்றான். 185
'ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ? தரும மாகு மோடா!-சொல்வாய் தம்பி இந்த வார்த்தை?' 'வரும மில்லை ஐயா;-இங்கு மாம னாடப்பணயம் மருமகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்ற மேதோ?'186
'பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்கு கின்றோம்; அழுத லேனிதற்கே?'-என்றே அங்கர் கோன் நகைத்தான். 'பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்; முழுது மிங்கிதற்கே-பின்னர் முடிவு காண்பீர்'என்றான். 187
ஒளி சிறந்த மணியின்-மாலை ஒன்றை அங்கு வைத்தான்; களி மிகுந்த பகைவன் -எதிரே கன தனங்கள் சொன்னான்; விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்; பழி இலாத தருமன்-பின்னும் பந்தயங்கள் சொல்வான். 188
'ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோ'மிதென்றான்; மாயம் வல்ல மாமன் -அதனை வசம தாக்கி விட்டான்; 'பாயுமா வொரொட்டில்-செல்லும் பாரமான பொற்றேர்; தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி வென்று விட்டான். 189
'இளையரான மாதர்,-செம்பொன் எழிலிணைந்த வடிவும் வளை அணிந்த தோளும்-மாலை மணி குலுங்கு மார்பும் விளையு மின்ப நூல்கள்-தம்மில் மிக்க தேர்ச்சி யோடு களை இலங்கு முகமும்-சாயற் கவினும் நன்கு கொண்டோர், 190
ஆயிரக் கணக்கா-ஐவர்க் கடிமை செய்து வாழ்வோர்;' தாய முருட்டலானார்;அந்தச் சகுனி வென்று விட்டான் ஆயிரங்க ளாவார்-செம்பொன்,அணிகள் பூண்டிருப்பார் தூயிழைப் பொனாடை-சுற்றுந் தொண்டர் தம்மை வைத்தான்; 191
என்று வைத்த பணயந்-தன்னை இழிஞன் வென்று விட்டான். வென்றி மிக்க படைகள்-பின்னர் வேந்தன் வைத்திழந்தான். நன்றிழைத்த தேர்கள்-போரின் நடையுணர்ந்த பாகர் என் றிவற்றை யெல்லாம்-தருமன் ஈடு வைத் திழந்தான். 193
எண்ணிலாத கண்டீர்-புவியில் இணை யிலாத வாகும் வண்ணமுள்ள பரிகள் தம்மை வைத் திழந்து விட்டான்; நண்ணு பொற் கடாரந்-தம்மில் நாலு கோடி வைத்தான்; கண்ணி ழப்பவன் போல-அவையோர் கண மழிந்து விட்டான். 194