caracuvati antAti & catakOpar antAti of kampar (in Tamil script, unicode /utf-8 format)
கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி & சடகோபர் அந்தாதி
Etext Preparation : Mr. Maa Angiah, Malaysia (caracuvati antAti); Mr. M.S. Venkataramanan, Baroda (caTakOparantAti) Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to kalyan@geocities.com
caTakOpar antAti of Kampar (in Tamil Script, TSCII format) கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி
சிறப்புப் பாயிரம்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய்வக் கவிஞன் பாவால் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே நு¡வில் சிறந்த மாறற் குத் தக்கநன் நாவலவன் பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.
ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால் பாரணம் செய்தவனைக் குரு‡ரனைப் பற்பலவா நாரணனாம் என ஏத்தித் தொழக் கவி நல்குகொடைக் காரணனைக் கம்பனைக் நினைவாம் உள் களிப்புறவே.
நம் சடகோபனைப் பாடி¡னயோ என்று நம்பெருமாள் விஞ்சிய ஆதரத்தால கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த செஞ்சொல் அந்தாதி கலித்துறை நு¡றும் தெரியும் வண்ணம் நெஞ்ணூ அடியேற்கு அருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.
நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப் பேய்போல் திரியும் பிறிவியினேனைப் பிறவியெனும் நோய்போம் மருந்தென்னும் நுனதிரு வாய்மொழி நோக்குவித்துத தாய்போல் உதவி செய் தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. .. 17
சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்திருக்கை சேதிக்குமே உன்று சிந்திக்குமே அதனைத் தெரியப் போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொதுநிற்கும் மெய்யைப் ரபாய்யைச் சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச்சொல் எனவே. .. 18
சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும் நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கொனோ மறை நேர்நிறுக்கும் கல் என்கெனோ முதிர் ஞானக்கனி என்கெனோ புகல வல் என்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே. .. 19
மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம் பாலைக் கடம்பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சியம் பொன் சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. .. 20
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித் தண் முரல் குறிஞ்சி நகைமுகம் நோக்கற்கு நீ முடுகும் சூரல் குறிஞ்சி நெறி நினைதோறும் துணுக்கு எனுமால் வாரல் குருகைப்பிரான் திரு ஆணை மலையவனே. .. 21
மலையாரமும் கடல் ஆரமும் பன்மா மணி குயின்ற விலைவாரமும் விரவுந் திரு நாதனை வேலைசுட்ட சிலையார்அமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. .. 22.
போந்து ஏறுக என்று இமையோர் புகலினும், பூந்தொழுவின் வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும், எழில்குருகூர் நாம் தேறிய அறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும் தீந் தேறலுண்டு உழலும் சித்தியே வந்து சித்திக்குமே. .. 23
சித்தர்க்கும் வேதச்சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும் சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர்கட்கும் தொண்டு செய்யும் பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே அன்றி பண்டுசென்ற முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்கையே. .. 24
தொகை உளவாய பனுவற்கெல்லாம் துறைதோறும் தொட்டால் பகை உளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான்மறையின் வகை உளவாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே மிகை உளவாம் குருகூர் எம்பிரான்தன் விழுத்தமிழ்க்கே. .. 25
விழுப்பாரினி எம்மையார் பிறவித்துயர் மெய்உற வந்து அழுப்பாது ஒழிமின் அருவினைகாள் உம்மை அப்புறத்தே இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகுசங்கம் கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக்கொழுந்தே. .. 26
கொழுந்தோடு இலையும் முகையும் எல்லாம்கொய்யும் கொய்ம்மகிக்கீழ் விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள விறல் மாறனென்றால் அழும்தோள் தளரும் மனம் உருகும் கூரையில் எழுந்து ஓடவும் கருத்துண்டு கெட்டேன் இவ் இளங்கொடிக்கே. .. 27
கொடி எடுத்துக்கொண்டு நின்றேன் இனிக் கொடுங்கூற்றினுக்கோ அடி எடுத்துக்கொண்டென்பால் வரல் ஆகுங்கொல் ஆரணத்தின் படி எடுத்துக்கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள் முடி எடுத்துக்கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. .. 28
என்முடி யாதெனக்கு யாதே அரியது இராவணன்தன் பொன்முடியால் கடல் து¡ர்த்த வில்லான் பொருநைத்துறைவன் தன்முடியால் அவன் தாள் இணைக்கீழ் எப்பொருளும் தழீஇச் சொல் முடியால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே. .. 29
சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி நாட்டில் பிறந்தவர்க்காளும் செய்தேன் என்னை நல்வினையாம் காட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன் கழல் பற்றிப்போய் வீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே. .. 30
மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறுபடுத்து உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறுவினையைக் கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக்கு அரசன் புலமை செய்மெய்யன் தனக்கே தனித் தானன்பு செய்தபின்னே. .. 31
முர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற வார்த்தைக் குருகைப்பிரானும் கண்டான்அம் மரைப்பொருளே. .. 41
வந்து அடிக்கொண்டன கொங்கைள் மாறன் குருகைவஞ்சி கொந்துஅடிக் கொண்ட சுழுலும் கலையும் குலைந்து அலைய பந்து அடிக்குந்தொறும் நெஞ்சம் பறை அடிக்கின்றது என்றால் செந்தடித் தன்ன மருங்கிற்கு உண்டோ நிற்கும் சிக்கனவே. .. 43
சுவடு இறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து இரண்டு கவடு இறக் கட்டிய பாசத் தனைக் கண் பரிந்து சங்கக் குவடு இறக் குத்திய மாறப் பெயர்கொலை யானை நங்காய் இவள் திறந்து ஒன்றும் படர் அந்தி வானம் இருள்கின்றதே. .. 48.
அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஓன்று சிந்தை செய்யாது செய்தாரையில்லா நெறி வேத நினறா நிலையுணர்த்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாதென்னை வீடு பெறுத்தினையே. .. 50
பெறும்பாக்கியம் உள்ள போதும் பிழைப்பும் உண்டே பிறர்பால் வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினைகொடுப்போய் எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏறவிட்டான் குறும்பாக்கிய முப்பகை தவிரத்து ஆண்ட குருகைமன்னே. .. 51
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று ஒருகூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மையுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து இறப்பார்க்கும் இயற்கை அவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியன்றே. .. 52
அன்றாத அன்றிலையும் அன்று வித்து எனனை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்றுவத்துப் பிறைக்கொழுந்தை ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ்வினையை வென்றான் குருகைப்பிரான் மகிழேயன்றி வேறில்லையே. .. 53.
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம் தேறேன் எனலது தேறக்தகும் செந்தமிழ்ப் புலவர்க்கு ஏறே எதிகளுக்கு இன்னமுதே ஏறி நீர்ப்பொருகை அறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே. .. 54
மணித்தார் அரசன் தன் ஓலையைத் து¡துவன் வாய்வழியே திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீவினையைத் துணிந்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப்பொருளைப் பணித்தான் பணியன் றெனில்கொள்ளும் கொள்ளுமெம் பாவையையே. .. 56
பாவைத் திருவாய்மொழிப் பழத்தைப் பசும் கற்பதத்தின் பூவைப் பெ கடல் போதோ அமுதைப் பொருள் சுரக்கும் கோவைப் பித்தஎம் கோவையல்லா என்னைக் குற்றம் கண்டென் நாவை பறிப்பினும் நல்லர் அன்றோ மற்றை நாவலரே. .. 57
நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள்கழியப் பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூப்புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவிபோல் எங்கும் போய்க்கெழுமிக் கூவலந் தீம்புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. .. 58
ஆட்செய்யல் ஆவதெல்லாம் செய்தடியடைந்தேன் அதன்றித் தாட்செய்ய தாமரை என்தலை ஏற்றனன் தண்குருகூர் நாட்செய்ய பூந்தோடை மாறனென்றேன இனி நாள்குறித்துக் கோட்செய்யல் ஆவதுண்டேயென்ற னாருயிர் கூற்றினுக்கே. .. 60
கூறப்படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர் மாறப்படா வினை மாற்றிய மாறன் மகிழ் அலங்கல் நாறப்படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம் தேறப்படாது கெட்டேன்மனறல் நாறும் தண் தென்றலையே. .. 61
தென்தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீவினையை நின்றலைத் தோன்றும் நியாய நெறியை நிறைகுருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார் என்தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. .. 62
உரிக்கின்ற கோடலின் உந்துகந்தம் என ஒன்றுமின்றி விரிக்குந்தோறும் வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய் தெரிக்கின்ற கோச்சடகோபன் தன் தெய்வக் கவிபுவியில் சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே. .. 63.
பாடும் கறங்கும் சிறைவண்டு பாடும்பைந்தாள் குவளை தோடும் கறங்கும் குருகைப்பிரான் இச் சுழல்பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்கையை நீக்கி உணர்வுதவி வீடும் திறந்து தந்தானை எந்நாற்றும் விடகிலமே. .. 65
விட அந்தகார வெம்பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்றிரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை அடவந்த காலன்கொலோ அறியேன் இன்று இவ் அந்திவந்து பட அந்தகாரப் பெரும்புகையோடிப் பரக்கின்றதே. .. 66
மேகத்தை ஆற்றல்கண்டேன் என்று எண்ணாது மெய்யன்குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின துளிபரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்றம் ஒழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் து¡வத் தொடங் குவே. .. 69
தொடங்குகின்றான் நடம் சொல்லுகின்றேன் குருகூரர் தொழா மடங்குகின்றாள் மண்டலம் சுற்றியாடுகிறாள் தங்கி விடங்கு கண்டார் பிழைப்பார் சுவையீர் விரைந்து ஏகுமிந்த படங்கு விண்டால்பின்னைப் போக ஓண்ணாது உம் பதிகளுக்கே. .. 70
பதியந்தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார்புரக்கும் மதியந் தமிழ்ஒளி மாலைகள் என்ன மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித்தான் அமுதம் பொதியம் தரு நதியங்குருகூர் எந்தை பூசுரர்க்கே. .. 71
பூட்சி கண்டீர் பொய் சமயப் புலவர்கரகுப் போக்குவல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன்உயிர்க்கு ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனத்தவாரி கண்டீர் அறிவைக் காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. .. 72
ஓரும் தகைமைக் குரியாரும் ஓங்கிய ஞானியரும் சாரும் தனித் தலைவன் சடகோபன் தடம்பதிக்கே வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம் தீரும் திருக்குக அறும் சிந்தைசெவ்வே நிற்கும் தீங்கறுமே. .. 75
அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும் உறுவகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழிவித்தொருங்கே பெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த சிறுவகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. .. 76
தீண்டித் திருவடி யைப்பற்றிக் கொண்டு சிந்தித்ததையே வேணடிக் கொளப்பெற்றிலேன் வினையேன் இவ் வெறும்பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணிநீர்ப் பாண்டித் தமிழ்த்திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. .. 77
பாவகத்தால் தன் திருஅவதாரம் பதினொன்றென்றிப் பூவக்கத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த கோவகத்தாற்கு அன்றி என்பறத்தார்செய் குற்றேவல்களே. .. 78
குணம் வேண்டுமே நற்குலம்வேண்டுமே அக் குலத்தொழுக்காம் பிணம் வேண்டுமே செல்வபேய் வேண்டுமே பெருந்தண்வகுள மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மாமணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைதொழுமே. .. 82
பதந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண்பனிக்கும் கரம்தலைக் கொள்ளும் உள்ளம்உருகும் கவியால் உலகைப் புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனைமகிழ் பூவுமன்றி மரந்தலைக் கொள்ளவும் போதுநங்காய் உன்மகள் கருத்தே. .. 84
கருத்து¢ல் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர் திருத்திற்று ஒருமணம் தீரும் நீரின் நிறை முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின் குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. .. 85
கூட்டங்கள்தோறும் குருகைப்பிரான் குணம் கூறும் அன்பர் ஈட்டங்கள்தோறும் இருக்கப்பெற்றேம் இருந்து எம்முடைய நாட்ட்டகள்தோறும் புனல்வந்து நாலப் பெற்றேம் இனிமேல் வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும்போகம் விளைகின்றதே. .. 86
தினைஒன்றிய குற்றம் அற்றுணரந் தோர் மகிழின் திறத்தின் மனை ஒன்றி கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா வினைஒன்றிய அன்றிலுக்கும் இடம் காட்ட விரிதலைய பனையன்றியும் உளதோ தமியேற்குப் பழம்பகையே. .. 89
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வைய்யமுய்யத் தொகை ஆயிரங்கவி சொன்னோன் பெயர சொல்லச் சூழ்பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் பு குகின்றதே. .. 90
பருரகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவைகண்ணீர் உகுகின்றதென்று உயிர் ஓய்கின்றதால் உலக ஏழுமுய்யத் தோகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் மேன்மேலும் காதல் தருமவரே. .. 91
தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக் கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின் பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யும் இருமையும் தீர்த்த பிரான் சடகோபன் தன் இன்னருளே. .. 92.
அருளில் சிலமகிழ் ஆயிழைக்கு ஈவர்கொல் அந்திவந்த இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின் பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப்பாண்டு செய்தவரே. .. 93
அவரே அயற் கும் அரற் கும் அல்லா அமரர்க்கும் எல்லாம் பவரேகை யுற்ற என்பிணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட நவரேகை யுட்கோள்ளச் செய்ததலால் நம்பி மாறனைப்போல் எவரே திருவாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. .. 94
தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து எவன் செய்யும் மெய்யன் குரு¨குப்பிரான் எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண்தமிழ்ப பாவும் உண்டே அவம் செய்கை மாற்றச் செவியுண்டு நாவுண்டு அறிவுமுண்டே. .. 95