Author: aruNgiri nAthar
Etext input & Proof-reading : K. Kalyanasundaram
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need
to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to kalyan@geocities.com
c - Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
மயில் விருத்தம் - காப்பு
நாட்டை - ஆதி 2 களை
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)
---.
சேவல் விருத்தம் - காப்பு
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்
செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட
வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே
(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)
---.
வேல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு
மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்
சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே
ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்
தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்
தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே
(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)
---.
மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு
சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
சரண யுகளமிர்த்த ப்ரபா
சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக வினாயகன் முதற்
சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்
மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க
வன சரோதய கிர்த்திகா
வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் வினோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே
(ரத்னக் கலாப மயிலே
ரத்னக் கலாப மயிலே)
---.
சேவல் விரித்தம் - 1
கம்சத்வனி கண்ட சாபு
உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்
மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
வெங்க் காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்க் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ
சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே
(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)
---.
மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலன்
தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி
பத்மப் பதங்க் கமழ்தரும்
பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய
பரம உபதேசம் அறிவி
கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
கந்த சுவாமி தணிகை
கல்லார கிரியுருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே
(கலாபத்தில் இலகு மயிலே
மரகத கலாபத்தில் இலகு மயிலே)
---.
சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்
ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்
திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்
திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 3
சாரங்கா - கண்ட சாபு
வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங்க் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்
அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்
தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங்க் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங்க் கடல் இலங்கை அதனிற்
போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே
(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)
---.
மயில் விருத்தம் - 3
சாரங்கா - கண்டசாபு
ஆதார பாதளம் பெயர அடி பெயர மு
தண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
கவுட்கிரி சரம் பெயரவே
வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்
விச்தார நிர்த்த மயிலாம்
மாதானு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
வள்ளிமணி ஞூபுர மலர்
பாதார விந்த சேகரனேய மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே
(பசுந்தோகை வாகை மயிலே
பச்சை பசுந்தோகை வாகை மயிலே)
---.
சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்டசாபு
கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை
குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்
சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை
சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே
குருபரன் சேவற்திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்
தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே
(கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே)
---.
மயில் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு
விசும்பிற் பறக்க விரினீர்
வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
முரிக் கலாப மயிலே
(விகடதட முரிக்கலாப மயிலே
சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)
---.
சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்
அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே
பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்
புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை
தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே
(சேவற்திருத் துவஜமே
சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு
ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற்
அமைந்த் அன்பருக்கு முற்றா
முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை
முடித் இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த
முதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்
தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே
(முதண்ட மும்புகழும் வேல்
சரவணக் குமரன் வேலே)
---.
மயில் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்டசாபு
ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்
அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங்க் கலப மயிலாம்
நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே
(முருகன் கலாப மயிலே
வரமுதவு வாகை மயிலே)
---.
சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு
தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே
கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட
குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்
சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்
டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 6
சிந்துபைரவி - கண்ட சாபு
பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்த்தாமுன்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய
மந்த்ற்ற உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங்க் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே
(தேசிகன் கோலத் திருக்கை வேலே)
---.
மயில் விருத்தம் - 6
சின்துப்கைரவி - கண்ட சாபு
சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
சகல லோகமு நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த
காரம் பிறன்டிட நெடும்
ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்
கற்றை கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ரப் பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரன் இருங்க்
கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே
(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)
---.
சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு
பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை
துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி
மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே
(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)
வேல் விருத்தம் - 7
பீம்பளாச் - கண்ட சாபு
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி
அனதமாயினு மேவினால்
அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை
கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க்
கடியகொலை புரியும் அது செங்க்
கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மகையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே
(வாகைத் திருக்கை வேலே
குகன் வாகைத் திருக்கை வேலே)
---.
மயில் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு
தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்
ஜகதலமு நின்று சுழல
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
தீக் கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
மானந்த வல்லி சிறுவன்
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடிபுகுத நடவு மயிலே
(பச்சை ப்ரவாள மயிலாம்
வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)
---.
சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி
பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்
பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்
சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே
(செவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து
ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்
சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்
(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)
---.
மயில் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
சிந்தப் புராரி அமிர்த்தம்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங்க் கொப்புளிப்ப
சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயன
தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு
சண்டப் பரசண்ட மயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தி அருளி
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
சுவாமி வாகனம் ஆனதோர்
துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
துஷடர் நிஷடுர மயிலே
(சண்ட ப்ரசண்ட மயிலாம்)
---.
சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்
வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா
பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்
முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்
முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்
ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு
தேடுதற்க் அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்
ஜயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்
நீடுமைக் கடல் சுட்டதிற்க் அடைந்த் எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர
அழால் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே
சாடு மைப்புயல் எனப் பசுனிற சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்
ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
ஷண்முகன் தங்கை வேலே
(ஷண்முகன் தங்கை வேலே
மயில் வாகனன் தங்கை வேலே)
---.
மயில் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு
சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுக
தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா
நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மா முகில் என்னவே
நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற்குழாம் அசையவே
மகரகன கோமள குண்டலம் பல அசைய
வல்லவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
வைய்யளி ஏறு மயிலே
(வையாளீ ஏறு மயிலே
நீலக் கலாப மயிலாம்)
---.
சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு
உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்
வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்
குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்
திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே
(சேவற் திருத் துவஜமே
பழையவன் சேவற் திருத் துவஜமே)
---.
வேல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
மாலறியு நாலு மறை ஞூல்
வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மனோலய உலாசம் உறவே
உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
உலோகனிலை நீர்னிலை இலா
ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
நா சின சிலா தணிவிலா
சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைன்யன் கை வேலே
(வேலே, வேழம் இளைன்யன் கை வேலே
வேழம் இளைன்யன் கை வேலே)
---.
மயில் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
நிராஜத விராஜத வரோதய பராபர
நிராகுல நிராமய பிரா
நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி
நிலாவிய உலாச இதயன்
குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
குரானிழல் பராவு தணிகை
குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய
குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயில் ஆயுத நெடுன்
தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
சாதனன் வினோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
ஷடானனன் நடாவு மயிலே
(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே
ஷடானனன் நடாவு மயிலே)
---.
சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்
திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என
திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே, சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)
---.
சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு
பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன
காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்
சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)
---.
மயில் விருத்தம் - 11
மத்யமாவதி
என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்
இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
நம் பிரானான மயிலை
பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிஜ மடந்தை யுடன் வாழ்
அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதா சனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே.
(அழியா வரம் பெறுவரே
அழியா வரம் பெறுவரே)
---.
------------
தீறூ வாகூப்பூ -
1. சீர்ப்பாத வகுப்பு
காவடிச்சிந்து - கண்ட சாபு (21/2)
உததியிடை கடவு மரகத வருண குல துரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலப கக மயிலின் மிசை
யுகமுடிவின் இருளகல ஒருஜோதி வீசுவதும்
உடலும் உடல் உயிரு நிலை பெறுதல் பொருளென உலகம்
ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
உரு எனவும் அரு எனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்
உறவுமுறை மனைவிமக எனும் அலையில் எனதிதய
உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்
உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்
உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்
இதழி வெகு முக ககன நதி அறுகு தறுகண் அர
இமகிரண தருண உடு பதி சேர் ஜடாமவுலி
இறைமகிழ உடைமணியொட் அணிசகலமணி கலென
இமையமயில் தழுவும் ஒரு திருமார்பில் ஆடுவதும்
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயிற்
எறிபுகுத உரகர்ப்பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமு நெறு நெறென முறிய வடகுவட் இடிய
இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்
இனியகனி கடலைபயற் ஒடியல்பொரி அமுது செயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலி முது திகிரிகிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்
எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் புனமீத் உலாவுவதும்
முதல வினை முடிவில் இருபிறை எயிறு கயிறுகொடு
முது வடவை விழி சுழல வருகால தூதர்க்கெட
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையும் அவை
முடிய வருவதும் அடியர் பகை கோடி சாடுவதும்
மொகுமொகென மதுப முரல் குரவு விளவினது குறு
முறியு மலர் வகுள தள முழுனீல தீவரமும்
முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் வ்ரத
முனிவர் கருதரிய தவ முயல்வார் தபோ பலமும்
முருக சரவண மகளிர் அறுவர் முலை ஞுகரும் அறு
முக குமர சரணமென அருள்பாடி ஆடிமிக
மொழி குழற அமுது தொழுதுர் உகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி ஆளுவதும்
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழு
துலக் அறிய மழலை மொழி கொடு பாடும் ஆசுகவி
முதல மொழிவன நிபுண மதுப முகர் இத மவுன
முகுள பரிமள நிகில கவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறி முது முதலை கவர்த்தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதிமுலம் என
வருகருணை வரதன் இகல் இரணியனை ஞுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மா பலியை
வலிய சிறை இட வெளியின் முகடு கிழிபட முடிய
வளரு முகில் நிருதன் இரு பது வாகு பூதரமும்
மகுடம் ஒருபது முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் வரு தாரகா சுரனும்
மடிய மலை பிளவு பட மகர ஜலனிதி குறுகி
மறுகி முறையிட முனியும் வடிவேல நீலகிரி
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூல தரி
வனஜை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை
வனிதை அபினவை அனகை அபிராம நாயகி தன்
மதலை மலை கிழவன் அனுபவன் அபயன் உபய சதுர்
மறையின் முதல் நடு முடிவின் மணனாறு சீறடியே
---.
2. தேவேந்திர சங்க வகுப்பு
புன்னாக வராளி - சங்கீர்ண ருபகம் - (2 களை) (22)
தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக ஞுதிகொடு
சாடோ ங்கு நெடுன் கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடனவில் சரணிய சதுர் மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாம் ஆங்குச மென் திரு தாளாந்தர அம்பிகை
தரு பதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணிமுடி பொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி
இரண கிரண மட மயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர் தாங்கி ஞுடங்கிய ஞூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறு பிறை எயிருடை யமபடர் எனதுயிர் கொள வரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்
இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெடவிடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மொகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருள் அறு சுடரடி இணை தொழு மவுனிகள்
ஏகாந்த சுகம் தரு பாசாங்குச சுந்தரி
கரணமு மரணமு மலமொடும் உடல்படு கடுவினை கெடனினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்ஜனி நஞ்சுமிழ்
கனல் எரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம் படி கொண்டவள்
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழுங்க் கழுனீர் தோய்ந்த பெருன் திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்
அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெட அயில்
வேல் வாங்கிய செந்தமிழ் ஞூலோன் குமரன் குகன்
அறுமுகன் ஒருபதொட் இருபுயன் அபினவன் அழகிய குறமகள்
தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும்
அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்
அதிபதி என வரு பொரு திரல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.
---.
3. வேல் வகுப்பு
மோகனம் - ஆதி (திச்ர நடை) (எடுப்பு அதீதம்
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகராகும்
பனைக் கை முக படக் கரட மதத் தவள
கஜக் கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்
பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக் குருகி வரைக் குகையை இடித்து வழிகாணும்
பசித் அலகை முசித் அழுது முறைப் படுதல்
ஒழித் அவுணர் உரத் உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்கு முனி வரர்க்கு மக பதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்
சுடர்ப் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
துதிக்கும் அடியவர்க் கொருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும் எனக்கொர் துணை ஆகும்
சொலற்கரிய திருப் புகழை உரைத் அவரை
அடுத்த பகை அறுத் எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்
தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்
தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப் பதென மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளைவாகும்
தனித்து வழி நடக்குமெனத் இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகடுத் இரவு பகற்றுணைய தாகும்
சலத்து வரும் அரக்கருடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்ப மொடு சூடும்
திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது
குடித் உடையும் உடைப் படைய அடைத் உதிர நிறைத்து விளையாடும்
திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்த தென முகட்டின் இடை பறக்க அற விசைத் அதிர ஓடும்
சினத் அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித் எயிரு கடித்து விழி விழித் அலற மோதும்
திருத்தணியில் உதித் அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
(எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே)
---.
4. திருவேளைக்காரன் வகுப்பு
நாதனாமக்ரிய - கண்ட சாபு (21/2)
ஆனபய பத்தி வழி பாடு பெறு முத்தி அது
வாக நிகழ் பத்த ஜன வாரக் காரனும்
ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
நாருடன் உணக் கை பரி தீமைக் காரனும்
ஆகமம் விளைத் அகில லோகமு நொடிப் பளவில்
ஆசையொடு சுற்றும் அதி வேகக் காரனும்
ஆணவ அழுக் கடையும் ஆவியை விளக்கி அனு
பூதி அடைவித்த தொரு பார்வைக் காரனும்
ஆடலைவுபட்ட் அமரர் நாடது பிழைக்க அம
ராவதி புரக்கும் அடல் ஆண்மைக் காரனும்
ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அரு
ணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்
ஆயிர முகத்து நதி பாலனு மகத் அடிமை
ஆனவர் தொடுத்த கவி மாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபுயத் அரசும்
ஆதி முடிவற்ற திரு நாமக் காரனும்
யானென தென சருவும் ஈன சமயத் எவரும்
யாரும் உணதற் கரிய நேர்மைக் காரனும்
யாது நிலை அற்றலையும் ஏழு பிறவிக் கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக் காரனும்
ஏரகம் இடைக்கழி சிராமலை திருப் பழனி
ஏரணி செருத் தணியில் வாசக் காரனும்
ஏழையின் இரட்டை வினை ஆயதொருடர் சிறை
இராமல் விடுவித்த் அருள் நியாயக் காரனும்
யாமளை மணக்கு முக சாமளை மணிக் குயிலை
யாயென அழைத் உருகு நேயக் காரனும்
ஏதம் அற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாக முனிவர்க் குரிய காவற் காரனும்
ஈரிரு மருப் புடைய சோனை மத வெற்பி வரும்
யானை அளவில் துவளும் ஆசைக் காரனும்
ஏடவிழ் கடப்ப மலர் கூதள முடிக்கும் இளை
யோனும் அறிவிற் பெரிய மேன்மைக் காரனும்
வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர்
வாவியில் உதித்த முக மாயக் காரனும்
வாரண பதிக் குதவு நாரணன் உவக்கு மரு
மானும் அயனைக் கறுவு கோபக் காரனும்
வாழி என நித்த மறவாது பரவிற் சரண
வாரிஜம் அளிக்கும் உப காரக் காரனும்
மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியிற் கதிர் செய்
மா நகரியிற் கடவுள் ஆயக் காரனும்
வாள் எயிறதுற்ற பகுவாய் தொறு நெருப் உமிழும்
வாசுகி எடுத் உதறும் வாசிக் காரனும்
மாசில் உயிருக் உயிரும் ஆசில் உணர்வுக் உணர்வும்
வானில் அணுவுக் அணு உபாயக் காரனும்
வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட ம
காடவியில் நிற்ப தோர் சகாயக் காரனும்
மீனவனு மிக்க்க புலவோரும் உறை பொற் பலகை
மீதமர் தமிழ் த்ரய வினோதக் காரனும்
வேரி மதுமத்த மதி தாதகி கடுக்கை புனை
வேணியர் துதிப்ப தொரு கேள்விக் காரனும்
வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
வேலை உறவிட்ட தனி வேலைக் காரனும்
மீனுலவு கிர்த்திகைக் குமாரனு நினைக்கும் அவர்
வீடு பெறவைத் அருள் உதாரக் காரனும்
மேனை அரிவைக் குரிய பேரனு மதித்த திறல்
வீரனும் அரக்கர் குல சூறைக் காரனும்
வேதியர் வெறுக்கையும் அனாதி பர வச்துவும் வி
சாகனும் விகற்ப வெகு ருபக் காரனும்
வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி வி
யாகுல மனத்தினொடு போம்விற் காரனும்
மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு
மேதகு குறத்தி திரு வேளைக் காரனே.
---.
5. பெருத்த வசன வகுப்பு
காபி - ஆதி
அருக்கன் உலவிய ஜக த்ரயமும் இசை
அதிற்கொள் சுவை என அனைத்து நிறைவதும்
அவச்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்
அசட்டு வெறு வழி வழக்கர் அறுவரும்
அரற்று வன பொருள் விகற்பம் ஒழிவதும்
அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை
அடக்கி அவனெறி கடக்க விடுவதும்,
(பெருத்த வசனமே அறுமுகவன்
பெருத்த வசனமே)
சந்த்ரகெளஞ்ச்
எருக்கும் இதழியு முடிக்கும் இறை குரு
எமக்கும் இறையவன் எனத் திகழு வதும்
இரட்டை வினை கொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்
இருக்கு முதலிய சமச்த கலைகளும்
இதற்க் இதெதிரென இணைக்க அரியதும்
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
ரஞ்ஜனி
நெருக்குவன உபனிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்
நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென
நிறைத்த நெறி முறை கரக்கும் உருவமும்
நினைப்பு நினைவது நினைப் பவனும் அறு
நிலத்தில் நிலை பெற நிறுத்த உரியதும்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி உற அனுபவிக்கு நிதியமும்
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
வசந்தா
உருக்கு திருவருள் திளைத்து மகிழ் தர
உளத்தொட் உரை செயல் ஒளித்து விடுவதும்
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உடிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
உரத்த தனி மயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்ப்பொரு சமர்த்தன் அணி தழை
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே
(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)
---.
6. வேடிச்சி காவலன் வகுப்பு
நீலாம்பரி - கண்ட சாபு (21/2)
உதர கமலத் தினிடை முதிய புவன த்ரயமும்
உக முடிவில் வைக்கும் உமை யாள் பெற்ற பாலகனும்
உமிழ் திரை பரப்பி வரு வெகு முக குலப் பழைய
உதக மகள் பக்கல் வரு ஜோதி ஷடானனும்
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவர் ஒருவர்க் அவணொர் ஓர் புத்ரன் ஆனவனும்
உதய ரவி வர்க நிகர் வன கிரண விர்த்த விதம்
உடைய சத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்
உறை சரவணக் கடவுள் மடுவில் அடர் வஜரதரன்
உடைய மத வெற்புலைய வேதித்த வீரியனும்
உரைபெற வகுத் அருணை நகரின் ஒரு பத்தன் இடும்
ஒளிவளர் திருப் புகழ் மதாணி க்ருபாகரனும்
உரக கண சித்த கண கருட கண யக்ஷ கணம்
உபனிடம் உரைத் தபடி பூஜிக்கும் வானவனும்
ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும்
உபயம் உறும் அக்னி கர மீதிற் ப்ரபாகரனும்
அதி மதுர சித்ர கவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ் த்ரய வினோத கலாதரனும்
அவரை பொரி எட்பயறு துவரை அவல் சர்க்கரையொட்
அமுது செயும் விக்ன பதி யானை சகோதரனும்
அவுணர் படை கெட்டு முது மகரஜல வட்ட முடன்
அபயமிட விற்படை கொட் ஆயத்த மானவனும்
அருணையில் இடைக் கழியில் உரக கிரியிற் புவியில்
அழகிய செருத் தணியில் வாழ் கற்ப காடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தை களும்
அறியென இமைப் பொழுதின் வாழ் வித்த வேதியனும்
அரி பிரமருக்கு முதல் அரிய பரமற்க் உயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்
அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்குணனும்
அகில புவனத் அமர சேனைக்கு நாயகனும்
அனுபவனும் அத்புதனும் அனுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும் அனு பூதி சுகோதயனும்
இதம் அகிதம் விட்டுருகி இரவு பகல் அற்ற இடம்
எனதற இருக்கை புரி யோகப் புராதனனும்
எனது மனசிற் பரம சுக மவுன கட்கம் அதை
யமன் முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்
எழுமையும் எனைத் தனது கழல் பரவு பத்தனென
இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்
இமையவர் முடித் தொகையும் வனசரர் பொருப்பும் எனத்
இதயமு மணக்கும் இருபாத சரோருகனும்
எழு தரிய கற்பதரு நிழலில் வளர் தத்தை தழு
விய கடக வஜர அதிபாரப் புயாசலனும்
எதிரில் புலவர்க் குதவு வெளி முகடு முட்ட வளர்
இவுளி முகியை பொருத ராவுத்தன் ஆனவனும்
எழுபரி ரதத் இரவி எழு நிலமொட் அக்கரிகள்
இடர் பட முழக்கி எழு சேவற் பதாகையனும்
இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷகளனும்
இளையவனும் விப்ரகுல யாக சபாபதியும்
மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளியப் புவியை
வளைய வரும் விக்ரம கலாப சிகாவலனும்
வலிய நிகளத் தினொடு மறுகு சிறை பட்டொழிய
வனஜ முனியை சிறிது கோபித்த காவலனும்
வரு சுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன
வட சிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்
வரதனும் அனுக்ரகனும் நிருதர் குல நிஷடுரனும்
மனு பவன சித்தனு மனோதுக்க பேதனனும்
வயிர் இசை முழக்க மிகு மழை தவழ் குறிச்சி தொரும்
மகிழ் குரவையுட் திரியும் வேடிக்கை வேடுவனும்
மரகத மணிப் பணியின் அணிதழை உடுத் உலவும்
வனசரர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்
மதனன் விடு புஷப சர படலம் உடல் அத்தனையும்
மடல் எழுதி நிற்கும் அதி மோகத் தபோதனனும்
வரிசிலை மலைக் குறவர் பரவிய புனத் இதணில்
மயிலென இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே
---.
7. சேவகன் வகுப்பு
மாண்ட் - அங்கதாளம் (141/2) 2 11/2 2 11/2 2 11/2 2 2
இருபிறை எயிரு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ விடவே
இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
அருமறி முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
அறிவொடு மதுர மொழியது குழறி
அவமரு பொழுதில் அழைத்தால் வருவாய்,
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா,
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளை கடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழு சேவகனே
---.
8. புய வகுப்பு
ராகமாலிகை - (26) 2 11/2 2 4 11/2 11/2 2 2 11/2 11/2 11/2 21/2 21/2
யமுனா கலயாணி
வசை தவிர் ககன சர சிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுனி சித்தரை
அஞ்ஜல் அஞ்ஜல் என்று வாழ் வித்து நின்றன
மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழ
காக நாடி வகை வகை கட்டு ம
ருங்குடன் பொருந்து ரீதிக் கிசைந்தன
வருணித கிரண வருணித வெகு தரு ணாதப
ஜோதி ஆடை வடிவு பெறப் புனை
திண் செழுன் குறங்கின் மேல் வைத் அசைந்தன
வளை கடல் உலகை வலம் வரு பவுரி வினோத க
லாப கோப மயில் வதனத்து வி
ளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன
வரை பக நிருதர் முடி பக மகர மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த் அயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
மதியென உதய ரவி என வளை படு தோல் வி
சால நீலமலி பரிசை படை
கொண்டு நின்ற் உழன்று சாதிக்க முந்தின
மன குண சலன மலினமில் துரிய அதீத சு
கானு பூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன
வகை வகை குழுமி மொகு மொகு மொகென அனேக ச
முக ராக மதுபம் விழச் சிறு
சண்பகம் செறிந்த தாரிற் பொலிந்தன
கமீர்க்கல்யாணி
மிசை மிசை கறுவி வெளிமுகட் அளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச் சில
கங்கணன் கறங்க மீதிற் சுழன்றன
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பி
சாசு போத மிகு தொனி பற்றி மு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன
வித மிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும்
லீலையாக விமல ஜலத்தினை
விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர் குலக் குலி
சன் பயந்த செங்கை யானைக் இசைந்தன
விகசித தமர பரி புர முளரி தொழா அபி
ராம வேடர் விமலை தினைப் புன
மங்கை கொங்கைக் கண்டு வேளைப் புகுந்தன
விதிர் தரு சமர முறி கர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித் இலங்கின
விரகுடை எனது மன துடன் அகில் பனினீர் புழு
கோடளாவி ம்ருகமத கற்புர
குங்குமன் கலந்து பூசித் உதைந்தன
வினைபுரி பவனி தொழுத் அழுத் உருகிய கோதையர்
தூது போகவிடு மது பக்ஷண
வண்டினன் திரண்டு சூழப் படிந்தன
பூர்விகல்யாணி
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி த
நாசி தேசி பயிரவி குஜஜரி
பஞ்சுரன் தெரிந்து வீணைக் இசைந்தன
இறுதியில் உதய ரவி கண நிகரென ஆறிரு
காது தோயும் இலகு மணிக் கன
விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன
எதிர் படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண் சிலம்ப் அடங்க மோதிப் பிடுங்கின
எழு தரும் அழகு நிறமலி திறல் இசையாக உ
தார தீரம் என உரை பெற்ற
அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின
இருள் பொரு கிரண இரணிய வட குல பாரிய
மேரு ஜாதி இனமென ஒத் உல
கங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன
இயன் முனி பரவ ஒருவிசை அருவரையூட் அதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன
இபரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப் புனல்
செங்களன் துளங்கி ஆடிச் சிவந்தன
எவை எவை கருதில் அவை அவை தரு கொடை
யால் மணி மேகராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன
கல்யாணி
அசைவற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை உடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன
அகிலமும் எனது செயலலத் இலையென யானென
வீறு கூறி அறவு மிகுத் எழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன
அனலெழு துவஜம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க பி
லங்களுங்க் குலுங்க ஆலித் அதிர்ந்தன
அடல் நெடு நிருதர் தளமது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத் அப
யம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன
அடவியில் விளவு தள வலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளி முரல் செச்சை
அலங்கல் செங்க் கடம்பு நேசித் அணிந்தன
அரியதொர் தமிழ்கொட் உரிமையொட் அடிதொழுதே கவி
மாலை யாக அடிமைத் தொடுத்திடு
புஞ்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப் படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்
அனுபவன் அனகன் அனனியன் அமலன் அமோகன்
அனேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ஜலென் ப்ரசண்ட வாகைப் புயங்களே.
---.
9. கடைக்கணியல் வகுப்பு
கிந்தோளம் - ஆதி(திச்ர நடை) (12)
அலை கடல் வளைந்த் உடுத்த எழு புவி புரந்தி ருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம்
அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறன் செலுத்தி ஆளலாம்
அடை பெறுவ தென்று முத்தி அதி மதுர சென் தமிழ்க்கும்
அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்
அதிர வரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்
இலகிய நலம் செய் புஷபகமும் உடல் நிறம் வெளுத்த
இப அரசெனும் பொருப்பும் ஏறலாம்
இருவரவர் நின்றி டத்தும் எவர் எவர் இருந்தி டத்தும்
ஒருவன் இவன் என்ற் உணர்ச்சி கூடலாம்
எமபடர் தொடர்ந் அழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடி என முழங்கி வெற்றி பேசலாம்
இவை ஒழியவும் பலிப்பத் அகலவிடும் உங்கள் வித்தை
இனை இனிவிடும் பெருத்த பாருளீர்,
முலையிடை கிடந்த் இளைப்ப மொகு மொகென வண்டிரைப்ப
முகை அவிழ் கடம் படுத்த தாரினான்
முதலி பெரி அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள்
முனிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்
முனை தொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க எற்றி
முறை நெறி பறந்து விட்ட கோழியான்
முதியவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று
முது கழுகு பந்தர் இட்ட வேலினான்
மலை மருவு பைம்பு நத்தி வளரும் இரு குன்ற மொத்தி
வலிகுடி புகுன் திருக்கு மார்பினான்
மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
வடிவுடன் வளர்ன் திருக்கும் வாழ்வினான்
மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்ற் உதித்து
மலை இடியவுன் துணித்த தோளினான்
மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக் கண்
இயலையு நினைன் திருக்க வாருமே
(வித்தை இனை இனி விடும் பெருத்த பாருளீர்
கடைக் கண் இயலையு நினைன் திருக்க வாருமே)
---.
10. மயில் வகுப்பு
ராகமாலிகை - சதுச்ர ஏகம் (கண்ட நடை) (10)
பைரவி
ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்
ஆல மருவும் பணி இரண்டும் அழுதே
ஆறுமுகன் ஐந்து முகன் ஆனை முகன் எங்கடவுள்
ஆமென மொழிந்த் அகல வென்று விடுமே
ஆர்க்கலி கடைந்த் அமுது வானவர் அருந்த அருள்
ஆதி பகவன் துயில் அனந்தன் மணி சேர்
ஆயிரம் இருந்தலை களாய் விரி பணன் குருதி
ஆக முழுதுன் குலைய வந்த் அறையுமே
நடபைரவி
வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்
வீசும் அரவன் சிதறி ஓட வரு வெங்கழுலன்
மேல் இடி எனும்படி முழங்கி விழுமே
மேதினி சுமந்த பெரு மாசுண மயங்க நக
மேவு சரணங்க் கொட் உலகெங்கும் உழுமே
வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
வே அழல் எனும் சினமுடன் படருமே
ஆனந்தபைரவி
போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
போதனை இரந்து மலர் கொண்டு முறையே
பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
போல்முடி விளங்க வரும் அஞ்ஜம் அடுமே
பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரண கணங்களொடு வந்து தொழவே
போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே
சிந்துபைரவி
கோதகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
கோல உடலன் கருகி வெந்து விழவே
கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள்
கூடி மனம் அஞ்ஜி வளை சென்று புகவே
கூவியிர வந்தம் உணர் வாழி என நின்று பொரு
கோழியொடு வென்றி முறை யும் பகருமே
கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே
(குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
முருகன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே)
---.
11. வீரவாள் வகுப்பு
பீம்பளாச் - கண்ட சாபு(21/2)
பூ வுளோனுக்கும் உயர் தேவர் கோனுக்கும் எழு
பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர்த் திடுமே
பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை
போல மாயக் கரிய கங்குல் நீக்கிடுமே
பூதி பூசிப் பரமர் தோலை மேல் இட்ட தொரு
போர்வை போல் நெட்டுறை மருங்கு சேர்த் திடுமே
போரிலே நிர்த்தம் இடு வீர மா லக்ஷமி மகிழ்
பூஜை நேசித்து மலர் துமபை சாத் திடுமே
பாவ ருபக் கொடிய சூரனார் பெற்ற பல
பாலர் மாளத் தசைகள் உண்டு தேக்கிடுமே
பானு கோபப் பகைன்யன் மேனி சோரக் குருதி
பாயவே வெட்டி இரு துண்டமாக் கிடுமே
பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்று நரி
பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே
பாடி ஆடிப் பொருத போரிலே பத்திர க
பாலி சூலப் படையை வென்றுதாக் கிடுமே
ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க் கலிக
ளாம் அகோரக் களை களைந்து நீக் கிடுமே
யாருமே அற்றவன் என்மீதொர் ஆபத் உறவ
ராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே
ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கு முதல்
ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே
ஆல காலத்தை நிகர் கால சூலத்தையும்
அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே
மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
மேருவாம் விற் பரமர் தந்த பாக்கியவான்
வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை
வேலர் தாளைத் தொழுத் உயர்ந்த வாழ்க் கையினான்
வீறு சேர் மிக்க கண நாதனார் எட்டு வகை
வீரர் நேயத் தமையன் என்ற தோட்டுணைவோன்
மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூஜிக்க வரு
வீரவாகுத் தலைவன் வென்ற வாட் படையே
---.
12. திருப்பழனி வகுப்பு
மத்யமாவதி - சதுச்ர த்ருவம் 4 4 4 2 கண்ட நடை (35)
எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வுன் கொடிய எந்த வசியுன் சிறிதும் அணுகாமலே
எந்த இரவுன் தனிமை எந்த வழியும் புகுத
எந்த இடமுன் சபையில் எந்த முகமும் புகலும்
எந்த மொழியுன் தமிழும் எந்த விசையும் பெருமை சிதறாமலே
வந்தனை செய் துன் சரண நம்புதல் புரிந்த அருள்
வந்த் அனுதினன் தனிலும் நெஞ்ஜில் நினைவின் படி வ
ரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி நெடு வலை வீசியே
வஞ்ஜ விழி சண்டன் உறுகின்ற பொழுதுன் குமர
கந்த என நங்க் அறையவுன் தெளிவு தந்துயிர் வ
ருந்து பயமுன் தனிமையுன் தவிர அஞ்ஜலென வரவேணுமே
(முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே)
தன் தனன தன் தனன டிண்டி குடி டிண்டி குடி
குண்ட மட குண்ட மட மண்ட மென நின்று முர
சந்திமிலை பம்பைதுடி திண்டிம முழங்கும் ஒலி திசை வீறவே
தண்ட அமர் மண்டசுரர் மண்டை நிணம் என்றலகை
உண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா
சென் தளிரை முந்து படம் என்றுள மருண்டு நிறை
சந்தன வனன் குலவு மந்தி குதிகொண்ட் அயல் செ
றிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே
சிந்திய அரம்பை பல விங்கனியில் வந்து விழ
மெங்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் தென் பழனியம் பதியின் முருகேசனே
(வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே)
---