This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
C: Project Madurai 2001
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
3354
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ. 6.2.1
3459
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 7.1.7
3480
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான்
நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த
நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6
3498
நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 7.5.2
3644
நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
துணர்ந்தும் மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய்
யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே. 8.8.5
3645
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே. 8.8.6
3646
அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறாது,
எதுவே வீடே தின்பம்? என்
றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. 8.8.7
3866
உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 10.8.7
3882
முனியே. நான்முக னே.முக்கண்
ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு
மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை
மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும்
மாயம் செய்யேல் என்னையே. (2) 10.10.1
3933@
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41
3955@
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63